Published:Updated:

IPL 2023 Daily Round Up: தோனி பற்றி மனம் திறந்த ஹர்திக் முதல் நன்றி தெரிவித்த விராட் வரை! 

CSK v GT

"நான் எப்போதுமே மஹேந்திர சிங் தோனியின் ரசிகன்.." -ஹர்திக் பாண்டியா

Published:Updated:

IPL 2023 Daily Round Up: தோனி பற்றி மனம் திறந்த ஹர்திக் முதல் நன்றி தெரிவித்த விராட் வரை! 

"நான் எப்போதுமே மஹேந்திர சிங் தோனியின் ரசிகன்.." -ஹர்திக் பாண்டியா

CSK v GT

சி.எஸ்.கே-வும் மும்பையும்:

நடப்பு 2023 ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பிளே ஆஃப் சுற்று போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. இதில் முதல் குவாலிஃபயர் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளன. ஐபிஎல் தொடரில் இதுவரை குஜராத் அணிக்கு எதிராக விளையாடிய 3 போட்டிகளிலும், சி.எஸ்.கே அணி தோல்வியையேச் சந்தித்துள்ளது. இதேபோல், லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய 3 போட்டிகளிலும், மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்த அணிகள் பிளே ஆஃப் சுற்று போட்டிகளில் விளையாடவுள்ளன. இந்த வரலாற்றை சென்னையும் மும்பையும் மாற்றி அமைக்குமா என்பது தான் ட்விஸ்ட்!

தோனி, ரோஹித்
தோனி, ரோஹித்

நான் தான் பெரிய ஃபேன் பாய்!

குஜராத் டைட்டன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா, தோனி பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இதில், "நிறைய பேர், மஹியை ரொம்ப சீரியசான நபர் என்று நினைக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, நான் அவரை மஹேந்திர சிங் தோனியாக பார்க்கவில்லை. நான் அவரிடம் நகைச்சுவையாக பேசுவேன். நான் அவரிடமிருந்து நிறைய நேர்மறையான விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன். அதிகம் பேசாமலேயே, அவரைப் பார்த்தே கற்றுக்கொண்டேன்.

அவர் எனக்கு அன்பு நண்பரும், சகோதரரும் கூட. நான் அவரிடம் சேட்டை செய்வேன், அவரிடம் சில்லாக இருப்பேன். நான் எப்போதுமே மஹேந்திர சிங் தோனியின் ரசிகன். அவருடைய கிரிக்கெட்டை  நேசிக்கக்கூடியவர்களும், நிறைய ரசிகர்களும் அவருக்கு இருக்கிறார்கள். மகேந்திர சிங் தோனியை வெறுப்பதற்கு, நீங்கள் பிசாசு (Devil) ஆக இருந்தால் தான் முடியும்." என்று கூறியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா, தோனி
ஹர்திக் பாண்டியா, தோனி

ருத்துராஜ் கெய்க்வாட் vs GT: 

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ருத்துராஜ் கெய்க்வாட், இந்த 2023 சீசன் முழுக்கவே சிறப்பாக விளையாடி வருகின்றார். குஜராத் அணிக்கு எதிராக சி.எஸ்.கே விளையாடிய மூன்று போட்டிகளிலும் சிறப்பான இன்னிங்ஸை வெளிப்படுத்தியுள்ளார். மூன்று போட்டிகளில் விளையாடி, 218 ரன்களை எடுத்து அசத்தியுள்ளார். குஜராத் அணிக்கு எதிராக இவரின் பேட்டிங் சராசரி 72.67 ஆகும். மேலும், இவரின் ஸ்ட்ரைக் ரேட் 148.30 ஆகும். குஜராத் அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்த CSK வீரர், ருத்துராஜ் தான். இந்த போட்டியிலும் இவரின் அதிரடி தொடருமா என்பதை இன்றிரவு காண்போம்.

ருத்துராஜ் கெய்க்வாட் vs GT
ருத்துராஜ் கெய்க்வாட் vs GT

சி.எஸ்.கே-வின் மிடில் ஆர்டர் 'கொம்பன்': 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், சுரேஷ் ரெய்னா. சிஎஸ்கே அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில், சுரேஷ் ரெய்னாவுக்கு என்றைக்குமே தனி இடம் உண்டு. 'சின்ன தல' என்று செல்லமாக அழைக்கப்படும் அளவிற்கு, இவரின் மீது ரசிகர்கள் அளவுகடந்த அன்பைப் பொழிந்து வந்தனர். முதல் முறையாக சுரேஷ் ரெய்னா இல்லாமல், பிளே ஆஃப் சுற்றில் விளையாடவுள்ளது சி.எஸ்.கே அணி. ஐபிஎல் வரலாற்றில் குவாலிஃபயர், எலிமினேட்டர் மற்றும் ஃபைனல்ஸ் என பிளே ஆஃப் சுற்றின் அனைத்து போட்டிகளிலும், ஆட்ட நாயகன் விருதை வென்ற ஒரே வீரர், சுரேஷ் ரெய்னா தான். மேலும், பிளே ஆஃப் போட்டிகளில் அதிக ரன்களை அடித்த வீரரும் இவரே. 22 பிளே ஆஃப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 712 ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். இவர் இந்த பிளே ஆஃப்-ல் இல்லாதது ரசிகர்களுக்கு சற்று வருத்தமே.

#மிஸ் யூ சின்ன தல!

சுரேஷ் ரெய்னா
சுரேஷ் ரெய்னா

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விராட்!

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல், தொடரிலிருந்து வெளியேறியது. ஆர்.சி.பி அணியின் ஐபிஎல் கோப்பைக் கனவு இந்த வருடமும் தகர்ந்தது. இந்நிலையில், விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதில் "சில நல்ல தருணங்களைக் கொண்ட ஒரு சீசன்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக நாங்கள் எங்களின் இலக்கை அடையவில்லை. ஏமாற்றமாக இருந்தாலும், நம் தலையை உயர்த்தியே ஆக வேண்டும். ஒவ்வொரு படிநிலையிலும் எங்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. அணி நிர்வாகத்தினர், பயிற்சியாளர்கள் மற்றும் எனது சகவீரர்களுக்கும் நன்றி. நாங்கள் மீண்டும் வலுவாக திரும்புவோம்," எனப் பதிவிட்டுள்ளார்.