Published:Updated:

IPL 2023 Daily Round Up: ஆசிய அளவில் முதலிடம் பிடித்த CSK முதல் ஐபிஎல்லின் GOAT வரை!

தோனி

ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

Published:Updated:

IPL 2023 Daily Round Up: ஆசிய அளவில் முதலிடம் பிடித்த CSK முதல் ஐபிஎல்லின் GOAT வரை!

ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

தோனி

ஆசிய அளவில் CSK-வின் ஆதிக்கம்:

2023 ஐ.பி.எல் சீசன் தொடங்கியதிலிருந்து சமூக வலைதளங்கள் முழுக்க ஐபிஎல் தொடர்பான மீம்ஸ்களும் அரட்டைகளும் தான், ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளது. கிட்டத்தட்ட சமூக வலைதளங்கள் அனைத்தையும் ஐ.பி.எல் அணிகளே ஆக்கிரமித்துள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் ட்விட்டரில் பிரபலமான 5 ஆசிய விளையாட்டு அணிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (9.97 மில்லியன்) முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி (4.85 மில்லியன்) உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (3.55 மில்லியன்) மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. நான்காவது இடத்தில், ரொனால்டோவின் அணியான அல் நசீர் FC (3.50 மில்லியன்) உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி (2.31 மில்லியன்) ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளது.

IPL
IPL
iplt20.com

ஐபிஎல் GOAT-னாலே தோனி தான்:

ஐ.பி.எல் போட்டிகளை ஜியோ நிறுவனம், தனது ஜியோ சினிமா ஆப்பின் மூலமாக ஒளிபரப்பி வருகின்றது. இதில் ஐபிஎல் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றது. இதில் குறிப்பிட்ட சில வீரர்களிடம் சில கேள்விகள் கேட்கப்படும், அதற்கு அவர்கள் பதிலளிப்பார்கள். இதில் 'ஐபிஎல் தொடரில் எப்போதுமே சிறந்த வீரர் (GOAT) யார்?' என்ற கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது.

தோனி
தோனி

இந்த கேள்விக்கு டிவில்லியர்ஸ், ராபின் உத்தப்பா, தினேஷ் கார்த்திக், ஃபாப் டுபிளேசிஸ், ஷேன் வாட்சன், இயோன் மோர்கன் உள்ளிட்ட பல வீரர்களும் தோனியையே தேர்வு செய்துள்ளனர். மேலும், சிறந்த ஃபினிஷர் என்ற கேள்விக்கும் பல வீரர்கள் தோனியைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

சாதிக்கும் சாவ்லா:

மும்பை இந்தியன்ஸ் அணியின் சுழற் பந்துவீச்சாளரான பியூஸ் சாவ்லா, இந்த தொடர் முழுக்கவே சிறப்பாக பந்துவீசி வருகின்றார். ஒவ்வொரு போட்டியிலும் இவரின் பங்களிப்பு அணிக்கு மிக முக்கியமானதாக இருந்து வருகின்றது. இந்த 2023 ஐபிஎல் சீசனில் இதுவரை, 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இவரின் ஐபிஎல் கரியரில் , இந்தத் தொடரில்தான் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகளை (21) வீழ்த்தியுள்ளார்.

பியூஷ் சாவ்லா
பியூஷ் சாவ்லா

வெளி மைதானங்களில் சொதப்பும் SKY:

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும், லக்னோ மைதானத்தில் நேற்று விளையாடின. இதி மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடியது. இந்த தொடரில் சிறப்பாக விளையாடிவரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சூரியகுமார் யாதவ், 7 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. இவர், இந்த தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் மும்பை வான்கடே மைதானத்தில் மட்டும் 6 போட்டிகளில் விளையாடி, 342 ரன்கள் எடுத்துள்ளார். வெளி மைதானங்களில் 7 போட்டிகளில் விளையாடி 144 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த தொடரில் வான்கடே மைதானத்தில் ஸ்ட்ரைக் ரேட் 206.02 ஆக உள்ளது. மற்ற மைதானங்களில் 153.19 ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே உள்ளது.

நமக்கெனவே வந்த நண்பன் தந்தை!

நேற்றைய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. இதில் கடைசி ஓவரை வீச வந்தார், மோஷின் கான். டிம் டேவிட் மற்றும் கேமரூன் கிரீன் இருவருக்கும் எதிராக பந்துவீசி, 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். இவருக்கு, கடந்த ஆண்டு இவருக்கு தோள் பட்டையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

Mohsin Khan
Mohsin Khan

பேட்டி அளித்த போது பேசிய மோஷின் கான், "காயத்திலிருந்து மீண்டுவந்து, ஒரு வருடத்திற்கு பிறகு விளையாடுகிறேன். ஐசியூவில் இருந்து எனது தந்தை நேற்று தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த பத்து நாட்களாக அவர் மருத்துவமனையில் இருந்தார். அவருக்காக இந்த போட்டியில் விளையாடினேன். அவர் நிச்சயம் இந்த போட்டியை பார்த்து, சந்தோசம் அடைந்திருப்பார்." என தந்தை பற்றி நெகிழ்ச்சியுடன் பேசினார். இந்த போட்டிக்கு பிறகு, மைதானத்திலிருந்து தந்தையுடன் வீடியோ காலில் பேசியதை மோஷின் கான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார்.