Published:Updated:

IPL 2023 Daily Round Up: `அடுத்த சீசனில் தோனி' CEO வைத்த ட்விஸ்ட் முதல் அஷ்வினின் சாதனை வரை!

தோனி

ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

Published:Updated:

IPL 2023 Daily Round Up: `அடுத்த சீசனில் தோனி' CEO வைத்த ட்விஸ்ட் முதல் அஷ்வினின் சாதனை வரை!

ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

தோனி

குட்டி தோனி `அனுஜ் ராவத்':

ஆர்.சி.பி க்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவதாக பேட்டிங் செய்தது. இதில் 8வது ஓவரின் கடைசி பந்தை ஹெட்மயர் எதிர்கொண்டார். கரன் சர்மா வீசிய அந்த பந்தை, டீப் ஸ்கொயர் லெக் திசையில் அடித்து விட்டு ரன் எடுப்பதற்காக ஓடினார். முகமது சிராஜ் பந்தை எடுத்து விக்கெட் கீப்பர் அனுஜ் ராவத்திடம் வீச, அவர் பின்திரும்பி நின்று அதை அப்படியே ஸ்டம்பிற்கு மாற்றி விட்டார். இதனால் அஷ்வின் ரன்-அவுட் ஆனார். இதுபோன்ற ரன்-அவுட்டை பலமுறை தோனி செய்திருப்பார். இதுவும் தோனியை ரீ -க்ரியேட் செய்தது போல இருந்தது. இந்த ரன்-அவுட் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நேற்றைய போட்டியில் அனுஜ் ராவத், தோனி கையெழுத்திட்ட கையுறையை அணிந்திருந்தார். இது மேலும் ஹைலைட்டாக இருந்தது.

அஷ்வின் சாதனை:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸில் ஆர்.சி.பி அணி பேட்டிங் செய்தது. இந்தபட போட்டியில் ரவிச்சந்திரன் அஷ்வின், 4 ஓவர்கள் வீசியதில் 33 ரன்களைக் கொடுத்திருந்தார். விக்கெட் ஏதும் எடுக்கவிட்டாலும், சில டாட் பால்களை வீசினார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக டாட் பால்களை வீசிய சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ashwin
ashwin
IPL

இதுவரை 197 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 1477 டாட் பால்களை வீசியுள்ளார். இவருக்கு அடுத்ததாக சுனில் நரைன், 1470 டாட் பால்கள் வீசியதுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

டக் அவுட்டில் சாதித்த DK:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், வழக்கம் போல டக் - அவுட் ஆனார். ஆடம் ஜாம்பா வீசிய 16வது ஓவரில் எல்.பி.டபிள்யு ஆனார், தினேஷ் கார்த்திக். இதுவரை 220 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள இவர், ஐபிஎல் தொடரில் அதிக முறை (16) டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார். இவருக்கு அடுத்து 234 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 16 முறை டக்-அவுட் ஆகியுள்ளார். இந்த தொடரில் பல வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு டக் அவுட்டாகி வருகின்றனர். ராஜஸ்தான் ராயல்ஸ் வீரரான ஜோஸ் பட்லர் இந்தத் தொடரில் மட்டும், 4 முறை டக்-அவுட் ஆகியுள்ளார். நேற்றைய RR vs RCB ஆட்டத்தில் மட்டும், 5 வீரர்கள் டக்-அவுட் ஆகியுள்ளனர்.

தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக்

அடுத்த சீசனில் தோனி!

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு, சி.எஸ்.கே வீரர்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சுனில் கவாஸ்கர், ரிங்கு சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பல வீரர்கள் தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கினர். போட்டிக்கு பிறகு பேசிய கவாஸ்கர், "தோனியைப் போன்ற வீரர்கள் நூற்றாண்டுக்கு ஒருமுறை மட்டுமே வருவார்கள். ஒரு தலைமுறைக்கு ஒருமுறை கூட வருவதில்லை. அதனால்தான், அவரை மேலும் மேலும் பார்க்க விரும்புகிறார்கள். இது தோனியின் கடைசி சீசனாக இருக்காது என்று நம்புகிறேன். அவர், இன்னும் சில காலம் விளையாட வேண்டும்." எனக் கூறினார்.

தோனி
தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் பேசுகையில், "எம்.எஸ்.தோனி அடுத்த சீசனிலும் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால், ரசிகர்கள் இதேபோன்று எங்களைத் தொடர்ந்து ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்." என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஷர்துல் & தீபக் சஹார்:

நேற்றைய போட்டிக்குப் பிறகு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சாளரான ஷர்துல் தாகூர் சேப்பாக்கம் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த நினைவுப் பலகையை பார்வையிட்டார். அதில் 2021 ஐபிஎல் சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தான் விளையாடியதைக் குறிப்பிட்டு நினைவு கூர்ந்தார்.

பின்னர், ஷர்துல் தாகூர் மற்றும் தீபக் சஹார் இருவரும் ஜெர்ஸியை மாற்றிக் கொண்டனர். இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.