Published:Updated:

IPL 2023 Daily Round Up: `சந்தனக் கருப்பு எம்.எஸ்.தோனி' முதல் `ஹிட்மேன்' ரோஹித்தின் சர்ச்சை வரை!

ஹர்பஜன், தோனி

ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

Published:Updated:

IPL 2023 Daily Round Up: `சந்தனக் கருப்பு எம்.எஸ்.தோனி' முதல் `ஹிட்மேன்' ரோஹித்தின் சர்ச்சை வரை!

ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

ஹர்பஜன், தோனி

துபேவின் 1000:

ஷிவம் துபே
ஷிவம் துபே

சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொண்டது. ஐபிஎல் தொடரில் அம்பத்தி ராயுடு விளையாடும் 200வது போட்டி இதுவாகும். இதில் முதலில் சி.எஸ்.கே அணி பேட்டிங் செய்தது.  வழக்கம் போல அதிரடியாக ஆடிய ஷிவம் துபே, மூன்று சிக்ஸர்கள் அடித்ததுடன் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம், ஐபிஎல் தொடரில் 1000 ரன்களைக் கடந்துள்ளார். இந்த 2023 தொடரில் இதுவரை, 10 இன்னிங்ஸ்களில் விளையாடி 315 ரன்கள் எடுத்து சிறப்பாக விளையாடி வருகின்றார்.

ரோஹித் விக்கெட் சர்ச்சை:

நேற்று முன்தினம் நடைபெற்ற பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா, 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இன்னிங்ஸின் 5வது ஓவரை, ஆர்.சி.பி அணியின் ஹசரங்கா வீசினார். ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ரோஹித், கிரீஸை விட்டு இறங்கி அடிக்க முயன்றார் . அப்போது, பந்து காலில்பட்டதால் அவுட்டாக மாறியது. இந்த ரோஹித் சர்மாவின் விக்கெட் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதை எதிர்த்து முஹமது கைஃப், யுவராஜ் சிங் உள்ளிட்ட பலரும் ரியாக்ட் செய்திருந்தனர்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

கிரிக்கெட் விதிமுறையின்படி, பேட்ஸ்மேன் ஸ்டம்பிலிருந்து 3 மீட்டருக்கு மேல் இறங்கி விளையாடினால் எல்.பி.டபிள்யூ விக்கெட் கொடுக்க முடியாது.  இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ரோஹித்தின் விக்கெட் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது. இதில் ஸ்டம்பிலிருந்து 2.9 மீட்டர் தூரத்தில் ரோஹித் சர்மா பந்தை எதிர்கொண்டுள்ளார். இதன் மூலம், ரோஹித்தின் விக்கெட் சரியானது தான் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

`டெத் ஓவர்ஸ் கிங்' தோனி!

டெத் ஓவர்களில் களமிறங்கி அதிரடியாக சிக்ஸர்களை அடிப்பதும், இன்னிங்ஸின் கடைசிப் பந்தில் ஆட்டத்தை முடிப்பதும் தான், தோனியின் டிரேட் மார்க். நேற்றைய போட்டியிலும் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனி, ஐபிஎல் தொடரின் டெத் ஓவர்களில் (17-20) அதிக சிக்ஸர்களை (162) அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

தோனி
தோனி

இவருக்கு அடுத்து டெத் ஓவர்களில், பொல்லார்ட் 127 சிக்ஸர்களையும் டிவில்லியர்ஸ் 112 சிக்ஸர்களையும் அடித்துள்ளனர். கடைசி 20வது ஓவரில் அதிக ரன்களையும் சிக்ஸர்களையும் அடித்த வீரரும், தோனி தான். ஐபிஎல் தொடரில் 20வது ஓவரில் மட்டும் விளையாடி, 59 சிக்ஸர்களுடன் 709 ரன்களை அடித்துள்ளார்.

டெல்லியும் சென்னையும்!

நேற்றைய ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி அதிரடி வெற்றியை பெற்றது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த தோல்வியின் மூலம், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்த முதல் அணி, டெல்லி கேப்பிடல்ஸ் ஆகும். இன்னும் 3 போட்டிகளில் டெல்லி அணி விளையாடவுள்ளது.

CSK vs DC
CSK vs DC

இதில் வெற்றி பெற்றாலும் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது. இதே ஆட்டத்தின் மூலம், ஐபிஎல் வரலாற்றில் அணியின் எந்த ஒரு வீரரும் 25 ரன்களுக்கு மேல் எடுக்காமல், வெற்றியைப் பெற்ற முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது சி.எஸ்.கே அணி. இந்த போட்டியில் ஷிவம் துபே மட்டும் 25 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற வீரர்கள் 25 ரன்களுக்கும் குறைவாகவே எடுத்திருந்தனர்.

ஹர்பஜனின் ட்வீட்:

ஹர்பஜன், தோனி
ஹர்பஜன், தோனி

ஒவ்வொரு சி.எஸ்.கே அணியின் போட்டியின் போதும், ஹர்பஜன் சிங் தமிழ் புலவராகவே மாறிவிடுகின்றார். இவரின் ட்வீட்டை பார்க்கும் போது, "இதெல்லாம் யாருணே உங்களுக்கு எழுதித் தராங்க?" என்ற கேள்வியும் நமக்குள்ளாக எழுகின்றது. நேற்றைய போட்டிக்கு பின்னர், "எத்தனை அரசர்கள் இருக்கிறார்கள் என்பதைவிட, எப்படிப்பட்ட அரசன் இருக்கிறார் என்பதே முக்கியம். மஞ்சள் ஆடை சூடிய சந்தன கருப்பு எம்.எஸ்.தோனி முன், டெல்லி கேப்பிட்டல்ஸ் மட்டும் தப்ப முடியுமா.? வெற்றியை தேடுபவர்களுக்கு மத்தியில், வெற்றிக்கு விலாசம் கொடுத்த மாமன்னன் மஹி!" என்று தனது ட்வீட்-ன் மூலமாக புகழாரம் சூட்டியுள்ளார், ஹர்பஜன் சிங்.