Published:Updated:

IPL Daily Round Up: `அந்தப் பையனுக்கு பேட் கொடுங்க!' கோலியின் கிஃப்ட் முதல் இன்ஸ்டா சண்டை வரை!

Virat Kohli

ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

Published:Updated:

IPL Daily Round Up: `அந்தப் பையனுக்கு பேட் கொடுங்க!' கோலியின் கிஃப்ட் முதல் இன்ஸ்டா சண்டை வரை!

ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

Virat Kohli

கோலி கொடுத்த பரிசு:

நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடியது. நேற்றைய ஆட்டத்திற்கு முன்னர், வான்கடே மைதானத்தில் விராட் கோலி பயிற்சி செய்தார். பயிற்சியை முடித்துவிட்டு பெவிலியனுக்கு படியேறிய போது, மைதானத்தில் 'பால் பாய்' வேலை பார்க்கும் ரசிகர் ஒருவர், விராட் கோலியிடம் ஆட்டோகிராப் கேட்டுள்ளார். விராட் கோலி சற்றும் தாமதிக்காமல் அருகில் இருந்தவரிடம், "அந்தப் பையனுக்கு ஆட்டோகிராப் போட்ட பேட் கொடுத்துடுங்க!" என்று தெரிவித்துவிட்டு கிளம்பினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

'சிக்ஸர் மன்னன்' டு ப்ளஸ்ஸிஸ்:

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கேப்டன் ஃபாப் டு ப்ளஸ்ஸிஸ், அதிரடியான ரன்குவிப்பில் ஈடுபட்டார். இவர், மேக்ஸ்வெல்லுடன் இணைந்து 120 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தி அசத்தினார். இதில் 41 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், ஃபாப் டு ப்ளஸ்ஸிஸ். இந்த 2023 ஐபிஎல் தொடரில் இதுவரை, 32 சிக்ஸர்களையும் 45 பௌண்டரிகளையும் அடித்துள்ளார். இந்த தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர், டு ப்ளஸ்ஸிஸ் தான். மேலும் இவர், ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி 1000 ரன்களைக் கடந்துள்ளார்.

du Plessis
du Plessis

இவருக்கு அடுத்து மேக்ஸ்வெல், 27 சிக்ஸர்களையும் 22 பௌண்டரிகளையும் அடித்துள்ளார். இந்த போட்டியின் மூலம், 2023 ஐபிஎல் தொடரில் 100 சிக்ஸர்களை அடித்த முதல் அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது, ஆர்.சி.பி அணி.

இன்ஸ்டாகிராம் ஸ்டோரி சண்டை:

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடியது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய விராட் கோலி, இன்னிங்ஸின் முதல் ஓவரிலேயே அவுட் ஆனார். இதற்குப் பிறகு, லக்னோ அணியின் வீரர் நவீன்-உல்-ஹக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மேட்ச் பார்க்கும் புகைப்படத்துடன் மாம்பழங்களையும் வைத்து "sweet mangos" எனப் பதிவிட்டிருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் நிலையில் இருந்த போது, அடுத்த ஸ்டோரியையும் பதிவிட்டிருந்தார். இவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Naveen Insta Story
Naveen Insta Story

கடந்த LSG vs GT இடையேயான போட்டியின் போது, விராட் கோலி இதே போன்று இரண்டு ஸ்டோரிகளை பகிர்ந்திருந்தார். அதில், குஜராத் அணி வீரர்களான விருத்திமான் சஹா மற்றும் ரஷித் கான் ஆகிய இருவரையும் பாராட்டினார். தற்போது, விராட் கோலி மற்றும் நவீன்-உல்-ஹக் ஆகிய இருவரின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளும் இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. RCB vs LSG போட்டியின் போது மைதானத்தில் இருவரும் சண்டையிட்டுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளே-ஆஃப் செல்ல யாருக்கு வாய்ப்பு!

ஐபிஎல் 2023 தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போகும் அணிகள் எவை என்பதை இனி வரும் ஆட்டங்களே தீர்மானிக்கும். கால்குலேட்டருக்கான தேவையும் இனிமேல் அதிகம் தான். நேற்றைய போட்டியில் பெங்களூர் அணி தோல்வியடைந்ததால், ஒரே ஆட்டத்தில் அந்த அணிக்கான ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு 23 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

MI
MI

மும்பை அணியின் பிளே ஆஃப் வாய்ப்பு 62 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. குஜராத் அணியும் சென்னை அணியும் சேஃப் சோனில் உள்ளன. லக்னோ அணிக்கு 45 சதவிகிதமும், ராஜஸ்தான் அணிக்கு 26 சதவிகிதமும், கொல்கத்தா அணிக்கு 24 சதவிகிதமும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளன. இதில் பஞ்சாப், டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்று செல்வதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது.

நிதிஷ் ராணாவுக்கு அபராதம்:

நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பஞ்சாப் அணி டாஸ் வென்றதன் மூலம், பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.

Rana
Rana

முதல் இன்னிங்ஸில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதமாக விதித்துள்ளது, ஐ.பி.எல் நிர்வாகம். இந்த போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.