Published:Updated:

IPL Daily Round Up: ப்ராவோ-வை முந்திய சாஹல் முதல் பாண்டியா பிரதர்ஸ் செய்த சாதனை வரை!

ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா

ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

Published:Updated:

IPL Daily Round Up: ப்ராவோ-வை முந்திய சாஹல் முதல் பாண்டியா பிரதர்ஸ் செய்த சாதனை வரை!

ஐ.பி.எல் தொடரில் நேற்றைய தினத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்களின் தொகுப்பு.

ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா

ரூட்-க்கு வாய்ப்பில்லை:

இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரராக ஐபிஎல் தொடரில் முதல்முறையாக களமிறங்கினார். ஆனால், நேற்றைய போட்டியில் இவர் பேட்டிங் செய்ய வாய்ப்பில்லாமல் போனது.

ஜோ ரூட்
ஜோ ரூட்

ஐ.பி.எல் தொடர் மட்டுமில்லாமல், இவர் அறிமுகமாகிய சர்வதேச ஒருநாள் போட்டி, சர்வதேச டி20 போட்டி மற்றும் தி ஹண்ட்ரட் (The Hundred) ஆகியவற்றிலும் இவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த 4 வகையான அறிமுக போட்டியிலும் பேட்டிங் செய்யாத வீரராகவே விளையாடியுள்ளார், ஜோ ரூட். இவருடைய முதல் ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி மற்றும் டி20 போட்டி ஆகிய மூன்று சர்வதேச அறிமுகப் போட்டிகளும் இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்றது.

ஜெயித்துக் காட்டும் ஜெய்ஸ்வால்:

ஜெய்ப்பூர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் முதல் இன்னிங்ஸில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து, அதிரடியான தொடக்கத்தை  அமைத்துக்கொடுத்தார்.

ஜெய்ஸ்வால்
ஜெய்ஸ்வால்

இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம்,  34 இன்னிங்ஸ்களில் விளையாடி ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் இளம் வயதிலேயே 1000 ரன்களைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு முன்பாக, 20 வயதிலேயே 35 இன்னிங்ஸ்களில் விளையாடி ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார், ரிஷப் பண்ட்.

இவன் ஒருபக்கம், அவன் மறுபக்கம்:

ஹர்திக் பாண்டியா,  க்ருணால் பாண்டியா
ஹர்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில், குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் விளையாடின. ஐபிஎல் வரலாற்றிலேயே முதல்முறையாக, ஒரே போட்டியில் இரண்டு சகோதரர்களும் கேப்டன்களாக விளையாடுகின்றனர். குஜராத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், லக்னோ அணியின் கேப்டனாக க்ருணால் பாண்டியாவும் டாஸ் போட வந்தனர். டாஸில் பேசிய ஹர்திக் பாண்டியா, "இதை நினைத்து எங்கள் தந்தை நிச்சயமாக பெருமைப்படுவார். இந்தத் தருணம், எங்கள் குடும்பத்திற்கு மிகவும் உணர்ச்சிகரமான ஒன்று!" என மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். ஹர்ஷா போக்லே உள்ளிட்ட பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சரித்திரம் படைத்த சஹால்:

சஹால்
சஹால்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான யுஸ்வேந்திர சாஹல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராஜஸ்தான் அணியின் மற்ற பௌலர்கள் ரன்களை வாரி வழங்கினர். ஆனாலும், சஹால் தனது சாமர்த்தியமான பந்துவீச்சின் மூலம், 29 ரன்களை மட்டுமே கொடுத்து 4 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம், ஐ.பி.எல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதுவரை 143 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 183 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவருக்கு அடுத்து, ட்வைன் பிராவோ 161 போட்டிகளில் விளையாடி 183 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

ஜெய்ப்பூரில் உதித்த சூரியன்:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தனது சொந்த மண்ணிலேயே சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 214 ரன்கள் அடித்தது. இந்த இமாலய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது, சன்ரைசர்ஸ் அணி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

கடைசி பந்தில் அப்துல் சமத், சிக்ஸர் அடித்து ஆட்டத்தை வென்று கொடுத்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சேஸிங் செய்த அதிகபட்ச ஸ்கோர் (214) இதுவாகும். இதற்கு முன்னர், இதே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 2019 ஐபிஎல் தொடரில், 199 ரன்களை சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. மேலும், ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோரும் (217) இதுவாகும். இப்போட்டியின் மூலம் இரு சாதனைகளை உருவாக்கியுள்ளது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 

அதேபோல நடக்கும் என நினைத்தேன் - சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

நேற்றைய போட்டியின் தோல்விக்குப் பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தோல்வி குறித்து சஞ்சு சாம்சன் பேசியிருக்கிறார்.  `இதுபோன்ற விஷயங்கள்தான் ஐபிஎல் தொடரின் சிறப்பே. ஒரு ஆட்டம் முழுமையாக முடியும் வரைக்கும் எந்தத் தருணத்திலும் நீங்கள் வென்றதாகவே உணர முடியாது. காரணம், இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான ஒரு ஆட்டத்தை சந்தீப் வென்று தந்திருக்கிறார். இந்தப் போட்டியிலும் அவர் அதையேதான் செய்தார். ஆனால் நோ பால் எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது. இந்த விக்கெட்டில் இந்த ஸ்கோரை எடுக்க நாங்கள் நல்ல முறையில் பேட்டிங் செய்தோம். ஆனால் அவர்கள் எங்களை விடப் புத்திசாலித்தனமாக பேட்டிங் செய்தார்கள். அவர்கள் பேட்டிங் செய்த விதத்திற்காகவே இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.' என்றார்