2008இல் சச்சின் தலைமையில் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்த மும்பைக்கு கேப்டனாகப் பொறுப்பேற்ற ரோஹித் சர்மா 2013 – 2020 வரையிலான காலகட்டத்தில் அபாரமாகச் செயல்பட்டு 5 கோப்பைகளை வென்று தோனியை மிஞ்சி சாதனை படைத்திருக்கிறார்.
ஆனால் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்த சீசனில் மொத்தம் 184 ரன்கள் மட்டுமே அடித்துத் தொடர்ந்து சொதப்பி வருகிறார். கடைசி இரண்டு போட்டிகளிலும் டக் அவுட் ஆகி மோசமான பார்மில் இருக்கும் ரோஹித் சர்மா ஓய்வு எடுக்க வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸின் ஆல்ரவுடரான கேமரூன் கிரீன் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். ரோஹித் சர்மா குறித்துப் பேசிய கேமரூன் கிரீன், "மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோஹித் சர்மா சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறார் என்பதை நாங்கள் அறிவோம். பல முக்கியமான போட்டிகளில் இக்கட்டான சூழ்நிலைகளில் அணிக்காக வென்று கொடுத்திருக்கிறார். அவர் அணியில் இருப்பது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்கிறது. விரைவாக பேட்டிங்கில் அவர் கம்பேக் கொடுத்து அணிக்காகச் சிறப்பாகச் செயல்படுவார்" என்று பேசியிருக்கிறார்.