Published:Updated:

`கீ போர்ட் போராளிகளுக்கு காது கொடுக்காதீங்க' - அர்ஜுனுக்கு பிரெட் லீ அறிவுரை!

அர்ஜுன் டெண்டுல்கர், சச்சின் டெண்டுல்கர்

'உங்களின் தந்தையை பின்பற்றுங்க' அர்ஜுனுக்கு பிரெட் லீ கூறிய அந்த முக்கியமான அட்வைஸ்!

Published:Updated:

`கீ போர்ட் போராளிகளுக்கு காது கொடுக்காதீங்க' - அர்ஜுனுக்கு பிரெட் லீ அறிவுரை!

'உங்களின் தந்தையை பின்பற்றுங்க' அர்ஜுனுக்கு பிரெட் லீ கூறிய அந்த முக்கியமான அட்வைஸ்!

அர்ஜுன் டெண்டுல்கர், சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் நடப்பு ஐ.பி.எல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அறிமுகமாகியிருந்தார்.

இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர் சிறப்பான பந்துவீச்சு மூலம் கவனம் ஈர்த்திருந்தார். சன் ரைசர்ஸுக்கு எதிரான போட்டியில் தனது முதல் விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார்.

அர்ஜுன் டெண்டுல்கர்
அர்ஜுன் டெண்டுல்கர்
அனைவராலும் பாராட்டப்பட்டுக் கொண்டிருந்த சமயத்திலேயே பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 31 ரன்களைக் கொடுத்து சொதப்பியிருந்தார். இந்த ஓவருக்குப் பிறகு இணையதளங்களில் அர்ஜுன் டெண்டுல்கர் மீது ஏகப்பட்ட விமர்சனங்களும் கேலிகளும் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ அர்ஜுன் டெண்டுல்கருக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.

பிரெட் லீ
பிரெட் லீ

அவர் பேசியிருப்பதாவது, 'அர்ஜுன் டெண்டுல்கர் பல பரிணாமங்களை உள்ளடக்கியவராக இருக்கிறார். அவரிடம் அதுதான் என்னை அதிகம் ஈர்த்தது. புதிய பந்தில் அற்புதமாக வீசுகிறார். பந்தை நன்றாக ஸ்விங்கும் செய்கிறார். மிடில் ஓவர்களுக்கும் ஏற்ற பௌலராக இருக்கிறார். அவரின் வேகத்தில் எனக்கு எந்த புகாரும் இல்லை. அவரால் 140 கி.மீ வேகத்தில் பந்துவீச முடியும். அணியில் சௌகரியமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு ரசிகர்கள் மத்தியிலும் மின் விளக்குகளின் மத்தியிலும் ஆடி பழகிவிட்டால் அவரின் வேகம் இன்னமும் கூடும்.விமர்சிப்பவர்கள் எல்லாவற்றையும் விமர்சித்து கொண்டேதான் இருப்பார்கள்.

அர்ஜுன் டெண்டுல்கர், சச்சின் டெண்டுல்கர்
அர்ஜுன் டெண்டுல்கர், சச்சின் டெண்டுல்கர்
உங்களுக்கு நான் சொல்லும் அறிவுரை ஒன்றே ஒன்றுதான். உங்களின் தந்தையைப் போல் விமர்சனங்களை எதிர்கொள்ளுங்கள். விமர்சனங்களுக்கு காது கொடுக்காதீர்கள். விமர்சிப்பவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது பந்து வீசியிருப்பார்களா என்றே தெரியாது. அவர்கள் வெறும் கீபோர்ட் போராளிகள்தான்.'

என அர்ஜுனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வேகப்புயல் பிரெட் லீ பேசியிருக்கிறார்.