Published:Updated:

Ashwin: `நான் செஞ்ச தப்ப நீங்களும் பண்ணாதீங்க...' - வருந்திய அஷ்வின்

Ashwin ( BCCI )

`நான் செஞ்ச தப்ப நீங்களும் செய்யாதீங்க' என இளைஞர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். அஷ்வின் அப்படி என்னதான் தவறு செய்தார்?

Published:Updated:

Ashwin: `நான் செஞ்ச தப்ப நீங்களும் பண்ணாதீங்க...' - வருந்திய அஷ்வின்

`நான் செஞ்ச தப்ப நீங்களும் செய்யாதீங்க' என இளைஞர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். அஷ்வின் அப்படி என்னதான் தவறு செய்தார்?

Ashwin ( BCCI )
தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஷ்வின் ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.

கிரிக்கெட் ஆடுவது மட்டுமின்றி கிரிக்கெட் சார்ந்து தனது யூடியூப் சேனலிலும் தொடர்ச்சியாக வீடியோக்களைப் பதிவிட்டு வருகிறார். அஷ்வினின் இந்த யூடியூப் சேனலுக்குமே தனி ரசிகர் வட்டம் இருக்கிறது.

Ravi Ashwin
Ravi Ashwin
இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் சொல்லும் நிகழ்ச்சியை அஷ்வின் நடத்தியிருந்தார். அதில், ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, 'நான் செஞ்ச தப்ப நீங்களும் செய்யாதீங்க' என இளைஞர்களுக்கு அறிவுரை கூறியிருக்கிறார். அஷ்வின் அப்படி என்னதான் தவறு செய்தார்?

'களத்தில் வெளிப்படும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் இருக்கும் வீரர்களின் செயல்பாடுகளும் நடத்தைகளும் அதை பார்க்கும் இளைஞர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறதே. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?' என்பதே அந்த ரசிகரின் கேள்வி.

இதற்கு பதிலளித்த அஷ்வின் ஒரு பழைய சமவத்தை நினைவுகூர்ந்து பேசினார், 'ஐ.பி.எல் -லில் ஒரு சமயத்தில் மேக்ஸ்வெல் என்னுடைய பந்துகளை சரமாரியாக அட்டாக் செய்து கொண்டிருந்தார். அபுதாபியிலும் கவுகாத்தியிலும் நடந்த போட்டிகளில் என்னுடைய பந்தில் சிக்சர்களாக பறக்கவிட்டிருந்தார். ஒரு போட்டியில் என்னுடைய 2 ஓவர்களில் 40 ரன்களையெல்லாம் அடித்திருக்கிறார். அவரை எப்படி வீழ்த்துவது எனும் கேள்விக்கு விடை தேடிக்கொண்டே இருந்தேன்.

Ashwin | அஷ்வின்
Ashwin | அஷ்வின்
அப்போதுதான் ஒரு போட்டியில் அவரின் விக்கெட்டை வீழ்த்திவிட்டு மேக்ஸ்வெல்லை நோக்கி அப்படி வித்தியாசமான முறையில் கொண்டாடினேன். நான் அதற்கு முன் அப்படியெல்லாம் செய்ததே இல்லை. வயது கூடியிருக்கிறது. அனுபவம் கூடியிருக்கிறது.

இப்போதுதான் நான் அப்படி செய்திருக்கக்கூடாது என்பதை உணர்கிறேன். அந்த நாளுக்கு என்னால் திரும்பிச் செல்ல முடிந்தால் அந்த கொண்டாட்டத்தை தவிர்த்து விடுவேன். நாம் செய்யும் ஒரு செயலை நமக்கு நெருங்கிய சிறுவர்களோ இளைஞர்களோ நம் முன்னேயே செய்யும் போது நாம் சந்தோஷப்படுவோமா என்கிற கேள்வியை கேட்டுக்கொண்டாலே போதும்.

என்னைப் பார்த்து ஒரு இளைஞர் நான் ஸ்ட்ரைக்கரை ரன் அவுட் ஆக்கினால் பெரும் மகிழ்ச்சியடைவேன். அதேநேரத்தில் மேக்ஸ்வெல்லுக்கு எதிராக நான் கொண்டாடியதை போல கொண்டாட்டத்தில் யாரும் ஈடுபட்டால் வருந்தவே செய்வேன். நான் ஒரு முறை தவறு செய்துவிட்டேன். நீங்களும் அதே தவறை செய்துவிடாதீர்கள்.' என்றார் அஷ்வின்.

ashwin
ashwin
IPL

2015 ஆம் ஆண்டின் ஐ.பி.எல் சீசனில்தான் அஷ்வின் சொன்ன அந்த சம்பவம் நடந்திருந்தது. ஒரு போட்டியில் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை எடுத்துவிட்டு பிட்ச்சை கையால் தொட்டு புழுதியை அற்பமாக ஊதிவிடுவது போல அஷ்வின் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இதற்காகத்தான் இப்போது அஷ்வின் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.