Published:Updated:

Rinku Singh: `ரிங்கு... ரிங்கு...' அதிர்ந்த அரங்கம்; அதிரடி அர்ஷ்தீப்; கடைசி ஓவரில் நடந்த`த்ரில்'!

Rinku Singh

'ரிங்கு...ரிங்கு...' என்று அரங்கம் அதிர ரசிகர்கள் கொடுத்த ஆராவாரத்திற்கேற்ற சரியான பதில் மரியாதையை இந்த இன்னிங்ஸ் மூலம் ரிங்கு கொடுத்திருக்கிறார்

Published:Updated:

Rinku Singh: `ரிங்கு... ரிங்கு...' அதிர்ந்த அரங்கம்; அதிரடி அர்ஷ்தீப்; கடைசி ஓவரில் நடந்த`த்ரில்'!

'ரிங்கு...ரிங்கு...' என்று அரங்கம் அதிர ரசிகர்கள் கொடுத்த ஆராவாரத்திற்கேற்ற சரியான பதில் மரியாதையை இந்த இன்னிங்ஸ் மூலம் ரிங்கு கொடுத்திருக்கிறார்

Rinku Singh

`கடைசி பந்துக்கு முந்தைய பந்தை அர்ஷ்தீப் வீசுவதற்கு முன்பு ரிங்கு சிங் என்னிடம் வந்து, 'ஒருவேளை இந்த பந்தை நீங்கள் அடிக்கத் தவறினால் ரன் ஓடுவிற்களா?' என்றார். அதற்கு நான், 'கட்டாயம் ஓடிவிடுவேன்' என்றேன்.

Russell
Russell
கடைசிப் பந்தில் அவரால் போட்டியை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. இன்று அவர் ஆடிய விதத்தைப் பார்க்கையில் எனக்குப் புல்லரித்துவிட்டது.' என ரிங்கு சிங்கின் மீதான வியப்பு விலகாமல் பேசியிருக்கிறார் ஆண்ட்ரே ரஸல்.

ஆண்ட்ரே ரஸல் அதிரடிக்கே பெயர் போன கரீபிய வீரர். பஞ்சாபுக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் சாம் கரன் வீசிய 19 வது ஓவரில் ரஸல் மூன்று பெரிய சிக்சர்களை பறக்கவிட்டிருந்தார். இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவுக்கு ரஸல் நல்ல டச்சில் இருந்தார். அப்படியிருந்தும் அந்தக் கடைசிப் பந்தை தான் ஆட நினைக்காமல் ரிங்குவை நம்பி ரஸல் கொடுத்தார். இதுதான் ரிங்குவின் திறமைக்கான சான்று.

'கொல்கத்தா அணிக்காக பல சீசன்களாக ஆடி வருகிறேன். இங்கே ஈடன் கார்டனின் 'ரஸல்...ரஸல்...' என்கிற ஆராவாரத்தை கேட்டுப் பழகிவிட்டு இப்போது 'ரிங்கு...ரிங்கு...' என்ற ரசிகர்களின் ஆராவாரத்தையும் கரகோஷத்தையும் கேட்பதற்கு பெருமிதமாக இருக்கிறது.' எனப் பேசியிருந்தார் கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா.

Rinku Singh
Rinku Singh

ஆம், ஈடன் கார்டன் மைதானத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களும் ஒருங்கிணைந்து ரிங்கு... ரிங்கு... என ஆர்ப்பரித்த போது ஒரு சூப்பர் ஹீரோவை போன்றுதான் ரிங்கு காட்சியளித்திருந்தார். சூப்பர் ஹீரோக்கள் என்ன செய்வார்கள்? எத்தனை தடை எத்தனை தடங்கல்கள் வந்தாலும் அத்தனையையும் முறியடித்து தங்களின் இலக்கையும் லட்சியத்தையும் எட்டியே தீருவார்கள். பஞ்சாபுக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் ரிங்கு சிங் அதைத்தான் செய்திருந்தார்.

அந்த கடைசி ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 6 ரன்கள்தான் தேவை. ரொம்பவே எளிதான டார்கெட். ஆனால், பஞ்சாப் அதை அத்தனை எளிதாக விடவில்லை. அர்ஷ்தீப் சிங் காயம்பட்ட சிங்கமாக மீண்டும் தனது பழைய ஃபார்முக்கு திரும்பும் பொருட்டு வெறிகொண்டு பந்து வீசினார். கேப்டன் தவான் தன்னுடைய கச்சிதமான ஃபீல்ட் செட்டப்புகளால் கொல்கத்தாவுக்கு இன்னும் நெருக்கடி கூட்டினார். மைதானத்தின் சுற்றளவையே தங்களுக்கான ஆயுதமாக மாற்ற நினைத்தது பஞ்சாப். ரஸல் பேட்டிங் ஆடும் போது அவருடைய லெக் சைடில் பவுண்டரி குறைவான தூரத்திலேயே இருந்தது. ஆஃப் சைட் பவுண்டரி லெக் சைடை விட ஒரு 10-15 மீட்டர் அதிகம் இருந்தது. ரிங்கு சிங் இடதுகை பேட்ஸ்மேன் என்பதால் அவருக்கு இது அப்படியே தலைகீழாக பொருந்தும்.

Rinku Singh
Rinku Singh

ரிங்குவின் லெக் சைடில் அதிக தூரமுடைய பவுண்டரி இருந்தது. ரஸலுக்கு ஒயிடு யார்க்கராக வீசி அவரை அந்த பெரிய ஆஃப் சைடில் மட்டுமே அடிக்க வைக்க வேண்டும். அதற்கேற்றார் போல டீப் தேர்டு மேன் மற்றும் டீப் பாயிண்ட்டில் ஃபீல்ட் வைக்கப்பட்டிருந்தது. அதேமாதிரி, ரிங்குவிற்கு லெக் ஸ்டம்ப் லைனில் அதாவது அவரது உடம்புக்குள் இடமே கொடுக்காமல் வீசி லெக் சைடில் மட்டுமே ஆட வைக்க வேண்டும். இதற்கேற்றார் போல டீப் ஃபைன், டீப் ஸ்கொயர், டீப் மிட் விக்கெட், லாங் ஆன் என லெக் சைடு முழவதும் அணை கட்டப்பட்டிருந்தது.

Rinku Singh
Rinku Singh

கடைசி ஓவருக்கான திட்டம் இதுதான். இந்த கடைசி ஓவரில் ரஸல்தான் அதிகமாக நான்கு பந்துகளை பிடித்திருந்தார். ரஸலுக்கு தான் வகுத்து வைத்திருந்த திட்டத்தின்படியே வைட் யார்க்கராக வீச முயற்சித்தார் அர்ஷ்தீப் சிங். சில பந்துகள் சரியாக விழுந்தது. சில பந்துகள் லோ ஃபுல் டாஸாக மாறியிருந்தது. ஆனாலும் அர்ஷ்தீபிற்கு சேதாரமில்லை. ரஸலால் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியவில்லை. அந்த கடைசி பந்துக்கு முந்தைய பந்தில் பீட்டன் ஆகி ரன் அவுட்டும் ஆகியிருந்தார். ரிங்கு முன்னதாக எதிர்கொண்ட அந்த மூன்றாவது பந்திலுமே அந்த லெக் சைட் திட்டத்தில் சிக்கி சிங்கிள் மட்டுமே தட்டியிருந்தார். இப்படி ஒரு சூழலில்தான் ரிங்கு சிங் கடைசிப் பந்தில் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார். லெக் சைடில் முழுமையாக ஃபீல்டர்களால் அணைகட்டப்பட்டிருந்தது.

அர்ஷ்தீப் சிங் அந்த லெக் ஸ்டம்ப் லைனில்தான் வீசப்போகிறேன். அதே மூன்றாவது பந்தின் பாணியில்தான் இந்த பந்தும் இருக்கப்போகிறது முடிந்தால் அடித்துப் பார் என அர்ஷ்தீப் சவால் விட்டதைப் போல இருந்தது அந்தச் சூழல்.
Rinku Singh
Rinku Singh

அர்ஷ்தீப் சிங் புயலென அந்த பந்தை வீச ஓடி வருகிறார். ரிங்கு சிங் சவாலை எதிர்கொள்ளும் மனத்திடத்தோடு பேட்டை சுழற்றத் தயாரானார். அர்ஷ்தீப் சிங் இந்த முறையும் கொஞ்சம் கூடுதலாகவே தவறிப்போய் அந்த பந்து ஒரு நல்ல ஃபுல் டாஸாக மாறிவிடுகிறது. இப்படியான நல் வாய்ப்புகள் எதையும் ரிங்கு சிங் தவறவிட்டதே இல்லை. பேட்டை வேகமாக சுழற்றி எந்த பக்கம் ஃபீல்டர்களால் அணை கட்டியிருந்தார்களோ அதே லெக் சைடில் பவுண்டரி அடித்து கொல்கத்தா அணியை கெத்தாக வெல்ல வைத்தார் ரிங்கு சிங்.

Rinku Singh
Rinku Singh
'ரிங்கு...ரிங்கு...' என்று அரங்கம் அதிர ரசிகர்கள் கொடுத்த ஆராவாரத்திற்கேற்ற சரியான பதில் மரியாதையை இந்த இன்னிங்ஸ் மூலம் ரிங்கு கொடுத்திருக்கிறார்