Published:Updated:

SRH: "திரைமறைவில் என்ன நடக்கிறதென தெரியவில்லை!" - சன்ரைசர்ஸ் கேப்டன் மார்க்ரம் கிளப்பிய சர்ச்சை

Markram

ஹைதராபாத் அணியின் கேப்டனுக்கே தெரியாமல் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறதா எனப் பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Published:Updated:

SRH: "திரைமறைவில் என்ன நடக்கிறதென தெரியவில்லை!" - சன்ரைசர்ஸ் கேப்டன் மார்க்ரம் கிளப்பிய சர்ச்சை

ஹைதராபாத் அணியின் கேப்டனுக்கே தெரியாமல் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறதா எனப் பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Markram
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியின் டாஸின் போது சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பேசிய சில விஷயங்கள் பரபரப்பைக் கிளப்பியிருக்கின்றன.
SRH vs RCB
SRH vs RCB

டாஸை வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் ஃபாப் டூ ப்ளெஸ்ஸி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். டூ ப்ளெஸ்ஸி பேசிய பிறகு மைக்கைப் பிடித்த எய்டன் மார்க்ரம் ப்ளேயிங் லெவன் பற்றிப் பேசிவிட்டு அந்த முக்கியமான விஷயத்திற்கு வந்து சேர்ந்தார்.

"உம்ரான் மாலிக் ஒரு தனித்துவம் வாய்ந்த வீரர். அவரால் 150 கி.மீ வேகத்தில் பந்துவீச முடியும். ஆனால், அவர் விஷயத்தில் திரைமறைவில் என்ன நடக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை!" எனக் கூறினார்.
உம்ரான் மாலிக்
உம்ரான் மாலிக்

எய்டன் மார்க்ரமின் இந்தப் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிளேயிங் லெவன் உள்ளிட்ட விஷயங்களில் அணியின் கேப்டனுக்கே தெரியாமல் அணியில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறதா எனப் பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மூத்த வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே,

"'திரைமறைவில் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை..." என ஒரு அணியின் கேப்டனே சொல்வது நிச்சயமாக பிரச்னைக்குரிய விஷயம்தான். மேலும், உம்ரான் மாலிக் ஆடவைக்கப்படாததிலும் எனக்குப் பல குழப்பங்கள் இருக்கின்றன!" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த சம்பவம் சார்ந்து தன் கருத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

இளம் வீரரான உம்ரான் மாலிக் சீசனின் முதல்பாதியில் பல போட்டிகளில் ஆடியிருந்தார். ஆனால், இரண்டாம் பாதியில் அவர் பெரிதாக ஆடவே இல்லை. அவர் அணியில் இல்லாததற்கான காரணமும் சரிவரச் சொல்லப்படவில்லை.

கேப்டனுக்கும் நிர்வாகத்துக்கும் முரண்பாடுகள் ஏற்படுவது சன்ரைசர்ஸூக்கு ஒன்றும் புதிய விஷயமில்லை. ஆனால், ஒவ்வொரு சீசனிலும் அதே விஷயம் மீண்டும் மீண்டும் நிகழ்வதுதான் வேதனைக்குரிய விஷயம்.