Published:Updated:

IPL 2022: ஹர்திக்கை கழட்டிவிட்ட மும்பை; சிஎஸ்கேவில் தோனி... யார் யாரை தக்கவைத்திருக்கின்றன அணிகள்?!

ஹர்திக் பாண்டியா

எட்டு அணிகளும் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் யார் யாரென அறிவித்திருக்கின்றன. யார் உள்ளே, யார் வெளியே - முழு விவரம்!

IPL 2022: ஹர்திக்கை கழட்டிவிட்ட மும்பை; சிஎஸ்கேவில் தோனி... யார் யாரை தக்கவைத்திருக்கின்றன அணிகள்?!

எட்டு அணிகளும் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் யார் யாரென அறிவித்திருக்கின்றன. யார் உள்ளே, யார் வெளியே - முழு விவரம்!

Published:Updated:
ஹர்திக் பாண்டியா
ஐபிஎல் 2022 சீசனுக்கான மெகா ஏலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இம்முறை புதிதாக லக்னோ, அகமதாபாத் என இரண்டு அணிகள் ஐபிஎல்லில் இணைகின்றன. மிகப்பெரிய தொகைக்கு இந்த அணிகளை வாங்கியது RSPG மற்றும் CVC Capital நிறுவனங்கள். இந்நிலையில் 4 வீரர்களை ஐபிஎல் அணிகள் தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ அறிவித்திருந்தது. இரண்டு இந்திய வீரர்கள், இரண்டு வெளிநாட்டு வீரர்கள் அல்லது மூன்று இந்திய வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரரை ஒரு அணியால் தக்கவைத்துக்கொள்ள முடியும். முடிவெடுக்க நவம்பர் 30-ம் தேதி வரை அணிகளுக்கு நேரம் கொடுக்கப்பட்டது. இந்த நேரம் இன்றுடன் முடிவடையும் நிலையில் எட்டு அணிகளும் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் யாரென அறிவித்திருக்கின்றன.
மும்பை இந்தியன்ஸ்
வெறும் நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்பதால் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷனை கைவிட்டிருக்கிறது மும்பை அணி!
மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ்
IPL

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 • ரோகித் ஷர்மா - ரூ.16 கோடி

 • ஜஸ்ப்ரீத் பும்ரா- ரூ.12 கோடி

 • சூர்யகுமார் யாதவ்- ரூ.8 கோடி

 • கெய்ரான் பொல்லார்ட்- ரூ.6 கோடி ✈️

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
முன்னாள் கேப்டன் தினேஷ் கார்த்திக் இந்நாள் கேப்டன் மார்கன் என அனைவரையுமே கழட்டிவிட்டிருக்கிறது கொல்கத்தா. கடந்த சீசனின் பாதியில் அறிமுகம் ஆனால் வெங்கடேஷ் ஐயர் ரீடெய்ன் செய்யப்பட்டிருப்பது பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது.
ரஸல் - வருண் சக்ரவர்த்தி
ரஸல் - வருண் சக்ரவர்த்தி
 • ஆண்ட்ரே ரஸல்- ரூ.12 கோடி ✈️

 • வருண் சக்கரவர்த்தி- ரூ.8 கோடி

 • வெங்கடேஷ் ஐயர்- ரூ.8 கோடி

 • சுனில் நரைன்- ரூ.6 கோடி ✈️

ராஜஸ்தான் ராயல்ஸ்
எதிர்பார்த்தது போலவே சஞ்சு சாம்சன் மற்றும் ஜாஸ் பட்லரை தக்கவைத்திருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். இதனால் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய வெளிநாட்டு வீரர்கள் ஏலத்திற்கு வருகின்றனர்.
சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்
 • சஞ்சு சாம்சன்- ரூ.14 கோடி

 • ஜாஸ் பட்லர்- ரூ.10 கோடி ✈️

 • யாஷஸ்வி ஜெய்ஸ்வால்- ரூ.4 கோடி

பஞ்சாப் கிங்ஸ்
கேப்டன் கே.எல்.ராகுல் தானாக விலக இரண்டு வீரர்களை மட்டுமே தக்கவைத்திருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி
 • மயங்க் அகர்வால்- ரூ.12 கோடி

 • அர்ஷ்தீப் சிங்- ரூ.4 கோடி

டெல்லி கேபிடல்ஸ்
கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படாததால் ஷ்ரேயஸ் ஐயர் டெல்லிக்கு டாட்டா காட்டியிருக்கிறார். ராபாடாவை விட சிறப்பாக கடந்த சீசன் செயல்பட்ட ஆண்ட்ரிக் நோர்க்யா தக்கவைக்கப்பட்டுள்ளார்.
ரிஷப் பன்ட்
ரிஷப் பன்ட்
 • ரிஷப் பன்ட்- ரூ.16 கோடி

 • அக்ஸர் பட்டேல்- ரூ.9 கோடி

 • பிருத்வி ஷா- ரூ.7.5 கோடி

 • ஆண்ட்ரிக் நோர்க்யா- ரூ.6.5 கோடி ✈️

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஏபிடி ஓய்வை அறிவித்திருக்க மூவரை மட்டுமே தக்கவைத்திருக்கிறது ஆர்.சி.பி. சாஹலை தக்கவைக்காமல் சிராஜை தக்கவைத்தது பலருக்கும் சர்ப்ரைஸ்!
விராட் கோலி
விராட் கோலி
 • விராட் கோலி- ரூ.15 கோடி

 • கிளென் மேக்ஸ்வெல்- ரூ.11 கோடி ✈️

 • முகமது சிராஜ்- ரூ.7 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
டேவிட் வார்னர், ரஷீத் கான் இருவருமே தக்கவைக்கப்பட விருப்பம் தெரிவிக்காத நிலையில் வில்லியம்சனை மலைபோல் நம்பி தக்கவைத்திருக்கிறது சன்ரைசர்ஸ். இது இல்லாமல் இரண்டு இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.
Kane Williamson | கேன் வில்லியம்சன்
Kane Williamson | கேன் வில்லியம்சன்
 • கேன் வில்லியம்சன்- ரூ.14 கோடி ✈️

 • அப்துல் சமாத்- ரூ.4 கோடி

 • உம்ரான் மாலிக்- ரூ.4 கோடி

சென்னை சூப்பர் கிங்ஸ்!
எதிர்பார்த்ததை போலவே ஜடேஜா, தோனி, கெய்க்வாடை தக்கவைத்திருக்கிறது சி.எஸ்.கே. எந்த வெளிநாட்டு வீரர் தக்கவைக்கப்படுவார் என்பதில்தான் குழப்பம் நிலவியது. அடுத்த சீசன் இந்தியாவில் நடப்பதால் மொயின் அலியை டிக் அடித்திருக்கிறது சிஎஸ்கே!
MS Dhoni | தோனி
MS Dhoni | தோனி
KBPHOTOGRAPHY
 • ரவீந்திர ஜடேஜா- ரூ.16 கோடி

 • மகேந்திர சிங் தோனி- ரூ.12 கோடி

 • மொயின் அலி- ரூ.8 கோடி ✈️

 • ருத்துராஜ் கெய்க்வாட்- ரூ.6 கோடி

எந்த அணிகள் சரியாக வீரர்களை தக்கவைத்திருக்கின்றன? கமென்ட்டில் கருத்துகளை பதிவுசெய்யுங்கள்!