Published:Updated:

`இது புதுசு...!' - ஐ.பி.எல் தொடர் குறித்து சவுரவ் கங்குலி

ஐபிஎல் கோப்பை
ஐபிஎல் கோப்பை

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் குறித்த அறிவிப்பை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக பிசிசிஐ ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் ஐபிஎல் நிர்வாகிகள் இன்று கலந்துகொண்டனர். ஐபிஎல் போட்டி நேரங்களை மாற்றுவது உள்ளிட்ட சில கோரிக்கைகளை ஐபிஎல் நிர்வாகிகள் தரப்பில் இருந்து கூறியுள்ளனர். 8 மணிக்கு தொடங்கும் போட்டிகளை முன்னதாக தொடங்கலாம் என இந்தக்கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.

கங்குலி
கங்குலி

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, ``13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்கும். இரவு நேரங்களில் தொடங்கும் ஆட்டங்கள் வழக்கம்போல் 8 மணிக்குத் தொடங்கும். 7.30 மணிக்குப் போட்டிகளைத் தொடங்கலாம் எனக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதியில் 8 மணிக்குத் தொடங்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 5 நாள்கள் மட்டுமே இரண்டு போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். மாலை 4 மணிக்கும் இரவு 8 மணிக்கும் போட்டிகள் தொடங்கும். 6 போட்டிகள் மட்டுமே மாலை 4 மணிக்குத் தொடங்கும் மற்ற போட்டிகள் அனைத்தும் இரவு 8 மணிக்குத் தொடங்கும்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல்முறையாக பந்து தாக்கி காயமடையும் வீரருக்குப் பதிலாக மாற்று வீரரை களமிறக்கும் முறையும் நோபால் முறையும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடக்காது. ஐபிஎல் ஃபைனல் மும்பையில்தான் நடைபெறும்." என்றார்.

பின் செல்ல