Published:Updated:

ஐ.பி.எல்: செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8 வரை போட்டிகள்! - உற்சாகத்தில் ரசிகர்கள்

ஐ.பி.எல் கிரிக்கெட்
ஐ.பி.எல் கிரிக்கெட்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் போட்டிகளை அங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐ.பி.எல் போட்டிகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு உணர்வுரீதியான ஒரு தொடர் என்றே கூறலாம். வருடம்தோறும் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் ஒவ்வொரு நாளும் சமூக வலைதளங்களில் கொண்டாட்டமாக இருக்கும். ஆனால், இந்தமுறை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐ,பி.எல் போட்டிகள் நடைபெறுமா, நடைபெறதா என்ற குழப்பம் ரசிகர்கள் இடையே நிலவி வந்தது. வழக்கமாக ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் மாதங்களும் கடந்து சென்றதால் ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்துடன் இருந்து வந்தனர். ஆனால், தற்போது வந்திருக்கும் ஐ.பி.எல் போட்டிகள் தொடர்பான அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

ஐ.பி.எல்
ஐ.பி.எல்

இந்தியன் பிரீமியர் லீக்கின் தலைவர் பிரிஜேஷ் படேல் 2020-ம் ஆண்டுக்கான போட்டிகள் செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, ``நாங்கள் போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டத்தை மேற்கொண்டோம். இதையடுத்து, செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 8-ம் தேதி வரை போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். போட்டிகள் குறித்து அணிகளின் உரிமையாளர்களுக்கு தெரிவித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

இந்தப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் போட்டிகளை அங்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. போட்டிகள் தொடர்பான அட்டவணை விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

IPL: `10 நாளில் முடிவு; இந்தியா, யு.ஏ.இ மைதானங்கள்!’ - வேகமெடுக்கும் ஐ.பி.எல் பணிகள்

கரிபியன் பிரீமியர் லீக் போட்டிகள் செப்டம்பர் 10-ம் தேதி முடிவடைய உள்ளது. அதேநேரம் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் மற்றொரு தொடரில் விளையாட உள்ளனர். இந்தக் குறுகியகால இடைவெளி வீரர்களுக்கு பிரச்னையாக இருக்கக்கூடும் என விவாதங்கள் எழுந்தன.

இதுதொடர்பாக பிரிஜேஷ் படேல், ``ஒரு பிரச்னையாக இந்த விஷயம் இருக்கக் கூடாது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா தொடர் செப்டம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அங்கிருந்து அவர்கள் உடனடியாக துபாய் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. அடுத்த வாரம் நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் இந்தப் பிரச்னை குறித்து விவாதங்களை மேற்கொள்ள உள்ளோம்” என்றார்.

இதுதொடர்பான திட்டங்களை வகுக்கவும் முன் தயாரிப்புகளை கண்காணிக்கவும் பி.சி.சி.ஐ இணைந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.பி.எல்
ஐ.பி.எல்

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் இந்த ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவது வழக்கம். அதன்படி, நியூசிலாந்தைச் சேர்ந்த கேன் வில்லியம்சன் ஜேம்ஸ் நீஷம், லோக்கி பெர்குசன், மிட்செல் மெக்லெனஹான், டிரென்ட் பவுல்ட், மிட்செல் சான்ட்னெர் ஆகிய வீரர்கள் அணிகளில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடுவார்களா என்ற கேள்வி இருந்து வந்தது. இதுதொடர்பாக அந்நாட்டின் கிரிக்கெட் வாரிய செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட், ``போட்டிகளில் விளையாட உள்ள வீரர்களுக்கு தேவையான அனுமதி சான்றிதழை வழங்குவோம். பங்கேற்பது குறித்து வீரர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

ஐ.பி.எல் தொடர் இப்போதைக்கு சாத்தியமா? - லாக்டௌன் 4.0 வழிகாட்டுதலும் வாய்ப்புகளும்..!
அடுத்த கட்டுரைக்கு