Published:Updated:

`ஆல் ஸ்டார் கிரிக்கெட் போட்டி; மார்ச் 29ல் தொடக்கம்!' - ஐபிஎல் முதல் போட்டியில் மோதும் #MIvCSK

ஐபிஎல்
ஐபிஎல்

ஐபிஎல் போட்டிகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

13-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் செய்தியாளர்களைச் சந்தித்த பிசிசிஐ தலைவர் கங்குலி, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் திட்டமிட்டபடி மார்ச் 29-ம் தேதி தொடங்கும் என்றும் புதிய விதிகள் குறித்த அறிவிப்பும் வெளியிட்டிருந்தார். இந்தநிலையில் தற்போது ஐபிஎல் போட்டிகள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. மார்ச் 29-ம் தேதி மும்பையில் நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. 13-வது ஐபிஎல் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி மே 24ம் தேதி மும்பையில் நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணிக்கும் இரவு 8 மணிக்கும் போட்டிகள் தொடங்கும் வண்ணம் அட்டவணைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஐபிஎல்
ஐபிஎல்

ஐபிஎல் கிரிக்கெட்டில் இது புதுசு!

`ஆல் ஸ்டார் கிரிக்கெட் போட்டி’. தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் நோக்கத்தில் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப்போட்டியானது ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பாக நடத்தப்படும் எனத் தெரிகிறது. ஆல் ஸ்டார் போட்டி குறித்த தேதி அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதில் ஐபிஎல் வீரர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுவார்கள். அணிகள், தென்மேற்கு (south and west of India) மற்றும் வடகிழக்கு (north and east of India) எனப் பிரிக்கப்பட்டுள்ளன.

`இது புதுசு...!' - ஐ.பி.எல் தொடர் குறித்து சவுரவ் கங்குலி

தென்மேற்கு அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்திய அணிகளைச் சேர்ந்த வீரர்கள் ஒரு அணியாகப் பங்கேற்பார்கள்.

வடகிழக்கு அணிகளான கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேபிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் ஒரு அணியாகப் பங்கேற்பார்கள்.

சி.எஸ்.கே போட்டிகள்
சி.எஸ்.கே போட்டிகள்

சென்னை அணி அட்டவணை

மார்ச் 29, 2020 – சென்னை- மும்பை

ஏப்ரல் 2, 2020 – சென்னை - ராஜஸ்தான்

ஏப்ரல் 6, 2020 – சென்னை- கொல்கத்தா

ஏப்ரல் 11, 2020 – சென்னை -பஞ்சாப்

ஏப்ரல் 13, 2020– சென்னை-டெல்லி

ஏப்ரல் 17, 2020 – சென்னை- பஞ்சாப்

ஏப்ரல் 19, 2020 – சென்னை- ஹைதராபாத்

ஏப்ரல் 24, 2020 – சென்னை- மும்பை

ஏப்ரல் 27, 2020– சென்னை- பெங்களூரு

ஏப்ரல் 30 – சென்னை - ஹைதராபாத்

மே 4, 2020 – சென்னை - ராஜஸ்தான்

மே 7, 2020 – சென்னை - கொல்கத்தா

மே 10, 2020 – சென்னை - டெல்லி

மே 14, 2020 – சென்னை -பெங்களூரு

சென்னை அணிகள் மோதும் பெரும்பாலான போட்டிகள் இரவு 8 மணிக்குத்தான் தொடங்குகின்றன. மே 10-ம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதும் போட்டி மட்டும் மாலை 4 மணிக்குத் தொடங்குகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இந்திய ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு