Published:Updated:

"இந்த முறை காலிறுதிக்குள் நுழைந்தே ஆக வேண்டும்!" - தமிழ்நாடு கேப்டன் இந்திரஜித்

Baba Indrajith

"ஒரு பேட்ஸ்மேன், சீஸனுக்குக் குறைந்தபட்சம் 500 ரன்கள் அடிக்க வேண்டும் என்று நினைத்தாலே எல்லாம் சரியாக அமைந்துவிடும். வேகப்பந்துவீச்சு என்பது நமக்கு ஒரு சிக்கலான ஏரியாவாகத்தான் இருக்கிறது. ஆனால், அது பெரிய பிரச்னை இல்லை."

"இந்த முறை காலிறுதிக்குள் நுழைந்தே ஆக வேண்டும்!" - தமிழ்நாடு கேப்டன் இந்திரஜித்

"ஒரு பேட்ஸ்மேன், சீஸனுக்குக் குறைந்தபட்சம் 500 ரன்கள் அடிக்க வேண்டும் என்று நினைத்தாலே எல்லாம் சரியாக அமைந்துவிடும். வேகப்பந்துவீச்சு என்பது நமக்கு ஒரு சிக்கலான ஏரியாவாகத்தான் இருக்கிறது. ஆனால், அது பெரிய பிரச்னை இல்லை."

Published:Updated:
Baba Indrajith

"தமிழ்நாடு போன்ற ஒரு அணி, குறைந்தபட்சம் காலிறுதிக்காவது நுழைய வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக அது முடியாமல் போய்விட்டது. இந்த முறை நிச்சயம் காலிறுதிக்குத் தகுதி பெறுவோம்" என்று நம்பிக்கையாகப் பேசுகிறார் தமிழ்நாடு ரஞ்சி அணியின் கேப்டன் பாபா இந்திரஜித். சமீபத்தில் அறுவைசிகிச்சை மேற்கொண்டதால், TNPL தொடரில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வந்தவரை பேட்டி கண்டேன். அந்தப் பேட்டியிலிருந்து...

TNPL தொடர் தமிழ்நாடு கிரிக்கெட்டில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

Baba Indrajith
Baba Indrajith

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவ்வொரு வருடமும் இந்தத் தொடரால் பல வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. பலருக்கு ஒரு அடையாளம் கிடைக்கிறது. தமிழ்நாடு அணிக்கோ, ஐ.பி.எல் அணிக்கோ விளையாடும் வாய்ப்பு பெறுகின்றனர். குறைந்தபட்சம், வருடத்துக்கு ஒரு வீரராவது இந்தப் பெரிய தொடர்களில் ஆடும் வாய்ப்பு பெறுகின்றனர். அந்த அங்கீகாரத்தை இந்தத் தொடர் கொடுக்கிறது. மற்ற மாவட்டங்களிலிருந்து திறமையான வீரர்கள் வெளிவருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கிறது. தொலைக்காட்சி கவரேஜ் சிறப்பாக இருப்பதால், எல்லோருக்கும் தெரிகிறது. ஒவ்வொரு வருடமும் புதுப்புது சவால்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. அஷ்வின் போன்ற சீனியர் வீரர்கள் வந்து கலந்துகொள்வது இன்னும் இத்தொடரின் தரத்தை உயர்த்தும். சீனியர்களோடு விளையாடுவதால், இளம் வீரர்கள் நிறைய கற்றுக்கொள்ள முடியும். என்னைப் பொறுத்தவரை இளம் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட வேண்டும். அதற்கு சீனியர் வீரர்கள் ஆடுவதும் முக்கியம். 'Knowledge transfer' இளம் வீரர்களுக்கு மிகவும் அவசியம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

காயம் காரணமாக இந்த சீஸனில் ஆட முடியாமல் போய்விட்டது. இப்போது உடல்நிலை எப்படி இருக்கிறது?

ரொம்ப நாள்களாக தோள்பட்டைப் பிரச்னை இருந்துவந்தது. அதற்காக இங்கிலாந்து சென்று அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். ஒன்றரை மாதம்தான் ஆகியிருக்கிறது. ஓய்வு தேவை என்பதால், இந்தத் தொடரைத் தவறவிட வேண்டியதாகிவிட்டது. இன்னும் ஒன்றரை மாத ஓய்வு தேவை. டொமஸ்டிக் சீஸன் தொடங்கும்போது தயாராகிவிடுவேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்கள் அணி (ரூபி திருச்சி வாரியர்ஸ்) இந்த ஆண்டு எதிர்பார்த்ததைப்போல் ஆடவில்லை. ஒரு போட்டியில் மட்டுமே வென்றார்கள். ஏன் இந்தச் சரிவு என்று நினைக்கிறீர்கள். இந்தக் காலகட்டத்தில் அணியுடன் தொடர்பில் இருந்தீர்களா?

Baba Indrajith
Baba Indrajith

முதல் இரு போட்டிகள் அணியுடன்தான் இருந்தேன். அதன்பிறகுதான் ஓய்வெடுக்க சென்னை வந்தேன். அணியுடன் தொடர்பில்தான் இருந்தேன். முன்னணி வீரர்களில் 5 - 6 பேரை காயத்தால் இழந்திருக்கிறோம். சோனு யாதவுக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது. சுரேஷ் குமார் பாண்டிச்சேரிக்கு ஆடும் நிலை ஏற்பட்டுவிட்டது. பரத் ஷங்கருக்குக் காயம். இப்படி, கடந்த ஆண்டு மெயின் லெவனில் இருந்த 5 பேர் இந்த ஆண்டு ஆட முடியவில்லை என்பது மிகப்பெரிய இழப்பு. அதுதான் எங்கள் அணி சிறப்பாகச் செயல்படாததற்குக் காரணம். மற்றபடி, ஒரு நல்ல அணி இருந்தது. அந்த அணியால் முடிந்ததை அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். இரண்டு போட்டிகள் மிகவும் அருகில் சென்று தோற்றோம். இரண்டு போட்டிகள் டை ஆகிவிட்டன. முரளி விஜய் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ரஞ்சிக் கோப்பையில் தமிழ்நாடு அணியின் கேப்டனாக இருப்பது எப்படி இருக்கிறது?

நிச்சயமாக அதுவொரு மிகப்பெரிய கௌரவம். தமிழ்நாடு என்ற ஒரு பெரிய மாநிலத்துக்காக விளையாடுகிறோம் என்பதே பெரிய விஷயம். அதுவும் அணியை வழிநடத்துவதென்பது மிகப்பெரிய விஷயம். கடந்த ஆண்டு நிறைய சவால்கள் இருந்தன. அது எனக்குப் பிடித்திருக்கிறது. அடுத்த சவாலுக்காகவும் காத்திருக்கிறேன்.

கடந்த ஆண்டு தமிழ்நாடு அணிக்கு சரியாக அமையவில்லை. ஒரு போட்டியில் மட்டுமே வென்றீர்கள். அணியில் என்ன பிரச்னை என்று நினைக்கிறீர்கள். சீனியர் வீரர்களும் வருவதும் போவதுமாகவே இருந்தார்கள். அப்படியிருக்க, அணியில் பேட்டிங் ஆர்டரில் மாற்றங்கள் செய்துகொண்டே இருக்க வேண்டியிருந்தது. ஒரு சரியான லெவன் செட் ஆகாததுதான் பிரச்னை என்று நினைக்கிறீர்களா?

தமிழ்நாடு அணிக்குக் கொஞ்சம் மோசமான சீஸன்தான். ஆனால், இந்த முறை நிறைய மாற்றிக்கொள்ள முடியும். பல வீரர்கள் இருக்கிறார்கள். சர்வதேச வீரர்கள் ஆடுகிறார்கள் என்பது அணிக்கு ப்ளஸ்தான். இந்த முறை அவர்கள் அனைவருக்குமே அதிக போட்டிகளில் ஆடும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கு முன்பு அப்படி நடந்ததில்லை. தினேஷ் கார்த்திக் மட்டும் இரண்டு, மூன்று சீஸன்கள் ஆடினார். ஆனால், முரளி விஜய், ரவிச்சந்திரன் அஷ்வின் போன்றவர்கள் அப்படி முழு சீஸனும் ஆடவில்லை. இரண்டு அல்லது மூன்று போட்டிகள் ஆடிவிட்டுச் சென்றுவிடுவார்கள். முழு சீஸனும் ஆடும்போது அவர்களின் மனநிலை வேறு மாதிரி இருக்கும். விஜய், TNPL தொடரில் அற்புதமான ஃபார்மில் இருந்தார். இவர்கள் முழு சீஸனும் ஆடும்போது அது அணிக்கு மிகப்பெரிய சாதகமாக அமையும்.

Baba Indrajith
Baba Indrajith

நீங்கள் சொன்னதுபோல், சர்வதேச வீரர்கள் இரண்டு போட்டிகள் ஆடிவிட்டுத் திரும்பிவிடுவார்கள் எனும்போது அவர்களின் மனநிலையுமே வேறு மாதிரிதான் இருக்கும். அவர்கள் வருவதும் போவதுமாக இருக்கும்போது காம்பினேஷன் மாறிக்கொண்டே இருக்கும். 3 வீரர்கள் இந்தப் போட்டியில் இருக்கிறார்கள், அடுத்த போட்டியில் இருக்க மாட்டார்கள் எனும்போது அது கஷ்டம்தான். அதனால், அணியில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். இப்போது அவர்கள் இருப்பார்கள் என்பது அணிக்கு மிகப்பெரிய பலம். ஆனால், கடந்த ஆண்டு அணியின் செயல்பாட்டுக்கு இது மட்டுமே காரணம் கிடையாது. நாங்களும் எங்களின் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும். சீனியர் வீரர்களே அனைத்தையும் செய்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது.

இந்த சர்வதேச வீரர்களுடன் விளையாடுவது, அணியை வழிநடத்துவதிலும் பெர்சனலாகவும் உங்களுக்கு எவ்வளவு உதவிகரமாக இருக்கிறது?

Baba Indrajith
Baba Indrajith

கிட்டத்தட்ட நான் முதல் தரப் போட்டிகளில் ஆடத் தொடங்கி 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலகட்டத்தில் அனைத்து விதமான போட்டிகளிலும் அவர்களோடு ஆடிக்கொண்டிருக்கிறேன். ஒரு கேப்டனாக இருக்கும்போது, சீனியர்களின் ஆதரவு என்பது மிகவும் முக்கியம். அவ்வளவு சீனியர்கள் இருக்கும்போது, என்னைப் போன்ற சின்ன பையன் அணியை வழிநடத்துவதென்பது கடினம். அவர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே அது முடியும். எங்கள் அணியில், எல்லோருமே எனக்கு மிகவும் ஆதரவாக இருக்கின்றனர். மிகவும் சப்போர்டிவாக இருக்கின்றனர். எந்த ஒரு யோசனையையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களின் யோசனையை நான் ஏற்றுக்கொள்கிறேன். அந்த உறவு நன்றாக இருக்கிறது.

கடந்த 2 வருடங்களாக முதல் தரப் போட்டிகளில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். துலீப் டிராபி இரட்டைச் சதம், ரஞ்சியில் அணியின் டாப் ஸ்கோரர் என ஒவ்வொரு தொடரிலும் கன்சிஸ்டென்ட்டாக பெர்ஃபார்ம் செய்கிறீர்கள். இந்த இரண்டு ஆண்டுகளில் பேட்டிங்கில் ஏதேனும் மாற்றம் கொண்டுவந்திருக்கிறீர்களா?

ஒவ்வொரு வருடமும் என் ஆட்டத்தில் முன்னேற்றம் கண்டுகொண்டே இருக்கிறேன். இது அனுபவம்தான் என்று நினைக்கிறேன். ஒரு முழு ரஞ்சி சீஸன் ஆடினாலே மிகப்பெரிய அனுபவம் கிடைக்கும். அதுதான் இதற்கு முக்கியக் காரணம். மற்றபடி, என் ஆட்டத்தில் பெரிய மாற்றம் ஏதும் நான் கொண்டுவரவில்லை. அனைத்தையும் சிம்பிளாகவே வைத்துக்கொள்கிறேன். ஆனால், சில விஷயங்கள் எனக்குச் சாதகமாக அமைந்தன. மிகவும் கடினமாக உழைத்துக்கொண்டிருந்தபோது, அந்த துலீப் டிராபி சீஸன் வந்தது. அந்தத் தொடரில் பெரிய ஸ்கோர் அடித்தது, நம்பிக்கையை அதிகரித்தது. அந்த சீஸன் சிறப்பாக அமைந்தது. கடந்த சீஸனும் அப்படித்தான். அந்த அனுபவம், அதனோடு கிடைக்கும் நம்பிக்கை... அதுதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் சிறப்பாகச் செயல்படக் காரணம் என்று நினைக்கிறேன்.

இந்தியா ஏ போன்ற வாய்ப்புகள் கிடைத்தால் என்னால் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று நம்புகிறேன்.
இந்திரஜித்

இந்த சீஸனில் தமிழ்நாடு அணியிடம் என்ன எதிர்பார்க்கலாம்?

முதலில் சிறப்பாக விளையாடி காலிறுதிக்குத் தகுதிபெற வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக அதுவே மிகவும் கடினமாகி இருக்கிறது. கொஞ்சம் மோசமான சூழ்நிலையில்தான் இருக்கிறோம். அதனால் இந்த முறை நன்றாக விளையாட வேண்டும். அதற்கு சிறப்பான முறையில் தயாராவது அவசியம் என்று நினைக்கிறேன். அதிகமாக யோசித்த, எதையும் கடினமாக்கிக்கொள்ளாமல், அனைத்தையும் சிம்பிளாக வைத்திருப்பது அவசியம்.

ஒவ்வொருவருவரும் அவரவரின் வேலைகளைச் செய்தாலே போதும். ஒரு பேட்ஸ்மேன், சீஸனுக்குக் குறைந்தபட்சம் 500 ரன்கள் அடிக்க வேண்டும் என்று நினைத்தாலே எல்லாம் சரியாக அமைந்துவிடும். வேகப்பந்துவீச்சு என்பது நமக்கு ஒரு சிக்கலான ஏரியாவாகத்தான் இருக்கிறது. ஆனால், அது பெரிய பிரச்னை இல்லை. விதர்பா போன்ற அணியைப் பார்த்தீர்களேயானால், அங்கு பெரிய ஸ்டார் வீரர்களெல்லாம் இல்லை. ஆனால், ஒரு அணியாக அவர்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனர். அதுதான் முக்கியம்.
இந்திரஜித்

ஒரு அணியாக அனைவரும் இணைந்து, அவரவரின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினால் எல்லாம் சிறப்பாக அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism