Published:Updated:

Dhoni: ரசிகரின் மகனுக்கு தோனியின் கிரிக்கெட் பயிற்சி; சண்டிகர் டு சேப்பாக்கம்; யாரிந்த ராம் பாபு?!

தோனி ரசிகர் ராம் பாபு

'டிக்கெட் மட்டுமில்லங்க. என் சொந்த ஊரு சண்டிகர். அங்க ஒரு கிரிக்கெட் அகாடமில என் 13 வயசு பைனைச் சேர்த்துருக்கேன். அந்த கிரிக்கெட் கோச்சிங்குக்கு ஸ்பான்சரே தோனிதான்.

Published:Updated:

Dhoni: ரசிகரின் மகனுக்கு தோனியின் கிரிக்கெட் பயிற்சி; சண்டிகர் டு சேப்பாக்கம்; யாரிந்த ராம் பாபு?!

'டிக்கெட் மட்டுமில்லங்க. என் சொந்த ஊரு சண்டிகர். அங்க ஒரு கிரிக்கெட் அகாடமில என் 13 வயசு பைனைச் சேர்த்துருக்கேன். அந்த கிரிக்கெட் கோச்சிங்குக்கு ஸ்பான்சரே தோனிதான்.

தோனி ரசிகர் ராம் பாபு

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டிக்கு முன்பாக சென்னை அணி வீரர்கள் பங்குபெறும் பயிற்சி செஷன் நடைபெற்றிருந்தது. அந்த பயிற்சி செஷனுக்கு செய்தி சேகரிப்பிற்காக சென்ற போது தோனி ரசிகர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது.

`ஒவ்வொரு மேட்ச்சுக்கும் தோனிதான் சார் டிக்கெட் எடுத்து கொடுக்குறாரு' என ஆச்சர்யத் தகவல்களை அள்ளி வீசிய அந்த தோனி ரசிகர் ராம்பாபுவை கண்டடைந்ததே ஒரு சுவாரஸ்ய அனுபவம்தான்.
சேப்பாக்கம்
சேப்பாக்கம்

பயிற்சி செஷனுக்கெல்லாம் எப்போதுமே ரசிகர்கள் அனுமதிப்படுவதே இல்லை. ஆனால், பத்திரிகையாளர்களுக்கான அறையிலிருந்து நோக்குகையில் வலதுபுறம் உள்ள கேலரியில் ஒரே ஒரு நபர் மட்டும் நின்று கொண்டு பெரிய தேசியக்கொடி ஒன்றை பெருமிதம் பொங்க காற்றில் வீசிக்கொண்டே இருந்தார். ஒரு முறை இரு முறை அல்ல... பயிற்சி தொடங்கியதிலிருந்து முடியும் வரைக்கும் 3-4 மணி நேரத்திற்கு அயராமல் கொடியை ஆட்டி ஆதரவு தெரிவித்துக் கொண்டிருந்தார். தோனி பயிற்சிக்காக உள்ளே நுழைந்ததும் அந்த வீச்சின் வீரியம் இரட்டிப்பானதையும் பார்க்க முடிந்தது. நேற்று மட்டுமல்ல. சென்னை எப்போதெல்லாம் இங்கே சேப்பாக்கத்திற்கு பயிற்சிக்காகவும் போட்டிக்காகவும் வருகிறதோ அப்போதெல்லாம் இவரை கையில் கொடியோடு பார்க்கலாம். ஆளே இல்லாத மைதானத்தில் கூட அயராமல் கொடியை வீசிக்கொண்டிருப்பார்.

ராம் பாபு
ராம் பாபு

நானும் சில போட்டிகளாக இவரை கவனிக்க நேர்ந்ததால் இன்று எப்படியாவது சந்தித்துப் பேசிட வேண்டுமென முடிவெடுத்தேன். அவர் அமர்ந்திருந்த கேலரியை நோக்கிச் சென்றேன். ஆர்வமாகக் கொடியசைத்துக் கொண்டிருந்தவரை எந்த தொந்தரவும் செய்யாமல் காத்திருந்து அவருடைய வேலையெல்லாம் முடிந்த பிறகு அவரை ஆற அமர உட்கார வைத்து பேசத்தொடங்கினேன்.

கடல் காற்றின் தழுவலோடு பளிச்சென மின்னொளி வீசும் அந்த சேப்பாக்கத்தின் J கேலரியிலிருந்து அவரிடம் பேசியவை இனி, 'இவ்ளோ நேரம் கொடி அசைச்சுக்கிட்டே இருக்கீங்களே கையெல்லாம் வலிக்கலயா?' என்றேன் ஆர்வத்தோடு. பதில் எதுவும் கூறாதவர் டீசர்ட்டை கொஞ்சம் உயர்த்தி கையில் பச்சை குத்தியிருந்த தோனியின் படத்தைக் காண்பித்தார். படம் மட்டுமல்லாமல் ஆங்கிலம் ஹிந்தி என இரண்டு மொழியிலும் பெரிது பெரிதாக தோனியின் பெயரையும் பச்சை குத்தியிருந்தார். கழுத்தில் இந்திய வரைபடத்திற்குள் தோனியின் பெயர் இருப்பது போல இன்னொரு பச்சை வேறு.

தோனி ரசிகர் ராம் பாபு
தோனி ரசிகர் ராம் பாபு
'உடம்பெல்லாம் இருக்க இந்த தோனிங்ற மந்திரம்தான் பாய்... எனக்கு இந்த சக்திய கொடுக்குது. 5 மணி நேரம்னாலும் அசராம கொடி ஆட்டுவேன். எல்லாமே தோனிக்காகத்தான்.'
ராம் பாபு
ராம் பாபு

பேசுகிற ஒவ்வொரு வாக்கியத்திலும் தோனி என்கிற பெயரை மந்திரமாக ஒலிக்கும் இவரின் பெயர் ராம் பாபு. பெயரை கேட்டவுடன்தான் நமக்குமே இவரை இதற்கு முன்பே அறிந்ததைப் போல தோன்றியது. உடனே கூகுளில் சென்று 'Dhoni Ram Babu' என தேடிப்பார்த்தேன். ராம் பாபுவும் தோனியும் ஒன்றாக நிற்கும் பல புகைப்படங்கள் முன்னே வந்து கொட்டின.

ஒவ்வொரு போட்டிக்கும் உடம்பு முழுவதும் பெயிண்ட் அடித்து தோனியென எழுதிக்கொண்டு வரும் அந்த பிரபலமான ரசிகர் இவர்தான் என்பதை புரிந்துகொண்டேன். (பிராக்டீஸ் என்பதால் பெயிண்ட் அடிக்காமல் வந்திருந்தார். அதனால்தான் அடையாளம் தெரியவில்லை. மற்றபடி எல்லாவிஷயத்திலும் க.க.போ ரகம்தான்!')

அதன்பிறகு அவர் பேசியதை கேட்க இன்னும் ஆர்வமாக இருந்தது, 'ரெண்டு நாளைக்கு முன்ன ஜெய்ப்பூர்ல மேட்ச். அங்க ஜெய்ப்பூருக்கு போயிட்டுதான் நேரா இங்க சேப்பாக்கத்துக்கு வந்துருக்கேன். டயர்ட்லாம் இல்ல.

எல்லாமே தோனிக்காகதான். தோனியோட ஆரம்பக்கட்டத்துல இருந்தே அவர ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன். முன்னாடி அவரு முடி அதிகமா வளர்த்திருந்தப்ப நானுமே அவர மாதிரியே முடிய வளர்த்துட்டு மேட்ச்சுக்கெல்லாம் போவேன். அப்புறம் ஒரு கட்டத்துல உடம்பு முழுக்க தேசியக்கொடிய பெயிண்ட் பண்ணிட்டு தோனின்னு எழுதிட்டு போவேன். இந்தியால எங்க மேட்ச் நடந்தாலும் போயிருவேன். ஒரு 7 வருசம் என்னோட சொந்தக்காசுலதான் இதுக்கெல்லாம் செலவு பண்ணேன். இலங்கை, பங்களாதேஷ், துபாய்னு வெளிநாட்டுக்கெல்லாம் கூட போயிருக்கேன். அப்பதான் ஒரு கட்டத்துல தோனியே என்ன அடையாளம் கண்டுக்க ஆரம்பிச்சாரு. அதுக்குப்பிறகு மேட்ச் பார்க்க எனக்கு தேவையானதெல்லாமே அவரே பார்த்துக்குறாரு.'

தோனியுடன் ராம் பாபு
தோனியுடன் ராம் பாபு
அத்தனை போட்டிகளுக்குமான டிக்கெட்டும் விமான டிக்கெட்டும் தோனியின் தரப்பிலிருந்தே ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுவிடுமாம். 'ராம் பாபு' என பெயரெழுதப்பட்ட கவரில் டிக்கெட்டுகள் தோனியின் தரப்பிலிருந்து இவருக்கு வந்து சேர்ந்துவிடுமாம்.
Dhoni: ரசிகரின் மகனுக்கு தோனியின் கிரிக்கெட் பயிற்சி; சண்டிகர் டு சேப்பாக்கம்; யாரிந்த ராம் பாபு?!

'டிக்கெட் மட்டுமில்லங்க. என் சொந்த ஊரு சண்டிகர். அங்க ஒரு கிரிக்கெட் அகாடமில என் 13 வயசு பைனைச் சேர்த்துருக்கேன். அந்த கிரிக்கெட் கோச்சிங்குக்கு ஸ்பான்சரே தோனிதான்.' என்கிறார்.

தனிப்பட்ட முறையில் தோனியை சந்தித்த அனுபவங்களை பற்றிக் கேட்டேன். 'ரெண்டு தடவ என்ன வீட்டுக்கே கூப்பிட்டு பேசியிருக்காரு. தோனி மட்டுமில்லாம அவங்க மனைவி சாக்ஷி தோனின்னு ரெண்டு பேருமே ரொம்ப அன்பானவங்க. இதேமாதிரியான தனிப்பட்ட சந்திப்புகள் எப்போவாச்சு நடக்கும். ஆனா, நான் அதை பத்தின புகைப்படம் எதையும் வெளிய பகிர்ந்துக்க மாட்டேன். அது அவங்களோட பிரைவசிக்கு பாதிப்பா இருக்கும். இதுபோக பல சமயங்கள்ல மைதானங்கள்ல தோனிய சந்திக்க முடியும். எப்போ பார்த்தாலும் கண்ண இமைச்சு 'எப்டி இருக்கேன்னு' கேட்குற மாதிரி தலையாட்டுவாரு. நானும் பதிலுக்கு தலையாட்டுவேன். அதுவே போதும். அவருக்கே என்னை தெரியும் என்பதற்காக அவரை தொந்தரவு செய்து கொண்டே இருக்கமாட்டேன். அவரை தூரத்திலிருந்தே ரசிப்பேன். என்னைப் பொறுத்தவரை அவர்தான் என்னுடைய பகவான். அவருடைய ஆசிர்வாதம் மட்டும் எனக்கு கிடைச்சுக்கிட்டே இருந்தா போதும் பையா!' என தோனியின் மீதான அத்தனை வியப்பையும் கொட்டித் தீர்த்தார்.

2011 உலகக்கோப்பையில் தோனி அந்த சிக்சரை அடித்த போது அவர் அங்கே வான்கடே மைதானத்தில்தான் இருந்தாராம்.

'எத்தனை பேர்னாலும் வரலாம். போகலாம் பையா...ஆனா, தோனிய மாதிரி இந்தியன் கிரிக்கெட்டையே தூக்கி நிப்பாட்டுன ஆளு யாருமே இல்ல.

அந்த சிக்சையெல்லாம் பார்த்தப்ப அப்டியே உறைஞ்சு போயிட்டேன். பின்னாடி ஒரு தடவ வான்கடே போனப்ப அந்த சிக்ச அடிச்ச பந்து விழுந்த ஏரியால 'இங்கேதான் தோனி அடித்த அந்த வரலாற்று சிக்சரின் பந்து விழுந்தது' என எழுதப்பட்டிருந்தது. அதை கிழிச்சுட்டு வந்து பத்திரமா வச்சிருக்கேன். 2019 உலகக்கோப்பைக்கு இங்கிலாந்து போலாம்னு பார்த்தேன். ஆனா, விசா கிடைக்காம போயிடுச்சு. நேர்ல பார்க்க முடியாம டிவில பார்த்ததே கொடுமைன்னா. அது தோனியோட கடைசி மேட்ச்சா போனது இன்னும் கொடுமை. ஐ.பி.எல் லயும் தோனி இந்த வருசத்தோட ரிட்டையர் ஆகிருவாருன்னு சொல்றாங்க. என்னன்னு தெர்ல. ஆனா, தோனி என்ன முடிவெடுத்தாலும் அது சரியாத்தான் இருக்கும்.' என்றார்.

தோனியுடன் ராம்பாபு
தோனியுடன் ராம்பாபு

ராம் பாபு எந்த வேலைக்கும் செல்வதில்லை. போட்டிகளை பார்ப்பது மட்டும்தான் அவரின் ஒரே வேலையாம். ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்களாம். மனைவி டெய்லராக ஃபேன்சி ஆடைகள் தைத்துக் கொடுக்கிறாராம். 'தோனி ஆடலன்னாலும் தோனியின் பெயர சொல்லி தோனிக்காக ஒவ்வொரு மைதானத்துலயும் நான் கொடியசைப்பேன். இப்ப இந்தியால உலகக்கோப்பை வரப்போகுது கட்டாயம் எல்லா ஊர்ல நடக்குற மேட்ச்சுக்கும் போவேன்.' என்கிறார் ராம் பாபு. நம்மிடம் பேசி முடித்தவர், நாளைய போட்டிக்கு தயாராக சில ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கிறது கிளம்புகிறேன் என விடைபெற்றார்.

சேப்பாக்கம் மைதானத்தில் ராம் பாபு
சேப்பாக்கம் மைதானத்தில் ராம் பாபு
அந்த வெற்று மைதானத்திலிருந்து மனம் முழுக்க தோனி மட்டுமே நிரம்பியிருந்த அந்த ரசிகர் வெளியேறிய போது ஒன்றே ஒன்று மட்டும்தான் தோன்றியது. ஆளுமைகளின் மீதான வெளிச்சக்குவிப்புக்கு வாழ்வையே அடமானம் வைக்க தயங்காத இதேபோன்ற ரசிகர்கள்தான் பெரும் காரணமாக இருக்கின்றனர்.