Published:Updated:

வாத்தியாராக தோனி, கோலி படையில் மீண்டும் அஷ்வின்... டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு எப்படி?

ரவி சாஸ்திரி, தோனி, தோனி - கோலி - சாஸ்திரி
News
ரவி சாஸ்திரி, தோனி, தோனி - கோலி - சாஸ்திரி

இரண்டு தமிழக வீரர்கள் இந்திய அணியில் இருப்பது மகிழ்ச்சியை கொடுத்தாலும் நடராஜன் அணியில் இல்லாதது ஏமாற்றமே. கிரிக்கெட்டின் சமீபத்திய சூப்பர் ஸ்டார் நடராஜனே. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று ஃபார்மேட்டிலும் அறிமுகமாகி கிரிக்கெட் உலகயே திரும்பி பார்க்க வைத்தவர்.

வரும் அக்டோபர்- நவம்பரில் நடக்கவிருக்கும் ஐசிசி டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சர்ப்ரைஸ், அதிர்ச்சி, ஏமாற்றம், பேரானந்தம் என சர்வ உணர்வுகளையும் கிளப்பி விடும் வகையில் அணியின் தேர்வு அமைந்துள்ளது. முதலில் எந்தெந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை பார்த்துவிடுவோம்.

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி!

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ரிஷப் பன்ட், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா, ராகுல் சஹார், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி
T20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி
T20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி
BCCI

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இவர்களை தவிர ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சஹார் மூவரும் ரிசர்வ் வீர்ர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.

முதலில் சர்ப்ரைஸ்!

வீரர்களின் பட்டியலை பிசிசிஐ ட்விட்டரில் வெளியிட இந்திய ரசிகர்கள் ரீட்வீட்களாக தெறிக்கவிட்டுக் கொண்டிருந்தனர். எல்லாரும் அணித்தேர்வு குறித்த விவாதங்களில் ஈடுபட தயாராக, ஒன்றிரண்டு நிமிடங்களில் பிசிசிஐ-யிடம் இருந்து இன்னொரு ட்வீட் வந்து விழுந்தது. ஒட்டுமொத்த ரசிகர் கூட்டமும் மீடியா வட்டாரமும் இன்ப அதிர்ச்சியில் உறைந்தே போனது. ஆம், அப்படியொரு வெறித்தனமான அறிவிப்பு அது.

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வீரர்கள் பட்டியலுக்கு விழுந்திருக்கும் லைக்குகள், ரீட்வீட்களைத் தாண்டி தோனி குறித்த இந்த ட்வீட்டுக்கு ஹார்ட்களை அள்ளிவீசிக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.
தோனி
தோனி

2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதியில் ரன் அவுட் ஆகி வெளியேறிய தோனி அத்தோடு தனது சர்வதேச கிரிக்கெட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். தோனி மாதிரியான ஒரு தலைமுறைக்கான வீரர் முறையாக பிரிவு உபச்சார விழாவெல்லாம் இல்லாமல் ஓய்வு பெற்றதில் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்திருந்தனர். அதையெல்லாம் போக்கும் வகையில் இப்போது இந்திய அணிக்கு ஆலோசகராக தோனி மீண்டும் திரும்பியுள்ளதால் ரசிகர்கள் குதூகலிக்கிறார்கள். தோனி பற்றிய அறிவிப்பை தாண்டி அதிகம் கவனம் ஈர்த்தது அஷ்வினின் தேர்வு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
கிட்டத்தட்ட ஒயிட்பால் கிரிக்கெட்டில் அஷ்வினின் கரியரே முடிந்துவிட்டது என்ற சூழலே நிலவியது. 2016-க்கு பிறகே ஒயிட்பால் கிரிக்கெட்டில் அஷ்வினுக்கு வாய்ப்புகளே வழங்கப்படவில்லை. 2017-ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒரே ஒரு டி20யில் மட்டுமே அஷ்வின் ஆடியிருந்தார்.
ரவிச்சந்திரன் அஷ்வின்
ரவிச்சந்திரன் அஷ்வின்

ஆனால், 2020 ஐபிஎல் சீசனிலிருந்து நிலைமை மாறத் தொடங்கியது. அந்த சீசனில் டெல்லி அணிக்காக சிறப்பாக வீசியிருந்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆஸ்திரேலியா சீரிஸிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டிருந்தார். ஆனால், நான்கு டெஸ்ட் போட்டிகளாக இங்கிலாந்தில் பென்ச்சில் உட்காரவைக்கப்பட்டிருக்கும் அஷ்வின் மீண்டும் கோலி தலைமையிலான டி20 அணிக்குத் தேர்ந்தெடுத்திருப்பது யாருமே எதிர்பாராத ட்விஸ்ட்.

இன்னொரு தமிழக வீரரான வருண் சக்கரவர்த்திக்கும் உலகக்கோப்பை அணியில் இடம் கிடைத்துள்ளது. ஒரு மிஸ்டரி ஸ்பின்னராக ஐபிஎல்-ல் கடந்த இரண்டு சீசனாகவே சிறப்பாக செயல்பட்டுள்ளார். மிஸ்டரி என்ற வகைமைப்படுத்தலும் ஐபிஎல் தொடரில் இவரின் சீரான பெர்ஃபார்மென்ஸுமே அவருக்கான இடத்தை பெற்று கொடுத்திருக்கிறது.

இரண்டு தமிழக வீரர்கள் இந்திய அணியில் இருப்பது மகிழ்ச்சியை கொடுத்தாலும் நடராஜன் அணியில் இல்லாதது ஏமாற்றமளிக்கவே செய்கிறது. கிரிக்கெட் உலகின் சமீபத்திய சூப்பர் ஸ்டார் நடராஜனே. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று ஃபார்மேட்டிலும் அறிமுகமாகி கிரிக்கெட் உலகயே திரும்பி பார்க்க வைத்தவர்.

நடராஜன்
நடராஜன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அவர் வீசிய ஒவ்வொரு யார்க்கரும் ஜாம்பவான் பௌலர்களின் புகழ்ச்சி மழையில் சொட்ட சொட்ட நனைத்திருந்தது. அவர் ஒரு இடக்கை வேகப்பந்து வீச்சாளர் என்பதே அணிக்குள் அவருக்கான இடத்தை பெற்றுக்கொடுத்துவிடும் என்று நம்பப்பட்டது.

எல்லாவற்றுக்கும் மேல் கோலி நடராஜன் மீது பெரிய நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தார். ஆனால், இப்போது ஏமாற்றமளிக்கும் வகையில் உலகக்கோப்பைக்கான அணியில் நடராஜன் இல்லை.

முதல் பாதி முடிந்திருக்கும் இந்த ஐபிஎல் சீசனில் முதல் ஒன்றிரண்டு போட்டிகளுடனேயே காயம் காரணமாக வெளியேறியிருந்தார் நடராஜன். சமீபத்தில்தான் காயத்திலிருந்து மீண்டிருக்கிறார். இந்த ஓய்வுக்குப்பிறகு அவர் எந்த போட்டியிலும் இன்னும் ஆடவில்லை. காயங்கள் ஒரு வேகப்பந்து வீச்சாளரின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும். காயத்துக்கு முன்பிருக்கும் பௌலர் அதே திறனோடு அதே பலமிக்க அம்சங்களோடு காயத்துக்குப் பிறகும் இருப்பது கொஞ்சம் சிரமமான காரியம். காயத்துக்குப் பிறகும் நான் அதே பழைய திறனுடன்தான் இருக்கிறேன் என்பதை நடராஜன் இன்னும் நிரூபித்து காண்பிக்கவில்லை. அதனாலயே அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கமாட்டார் என நம்பப்படுகிறது.

காயமடைந்திருக்கும் வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல்-ல் மட்டும்தான் ஆடமாட்டேன் என அறிவித்திருந்தார். ஆனால், உலகக்கோப்பைக்கும் சேர்த்து அவருக்கு பிசிசிஐ ஓய்வு கொடுத்திருக்கிறது. காயத்துக்குப் பிறகான ஓய்விலிருந்து மீண்டு வந்து இன்னும் தன்னை நிரூபிக்காமல் இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயருக்குமே 15 பேர் கொண்ட அணியில் இடம் கொடுக்கப்படவில்லை. ரிசர்வ் ப்ளேயராகத்தான் இருக்கிறார். இதனடிப்படையில் பார்த்தால் நடராஜன் தேர்ந்தெடுக்கப்படாததற்கும் காயம் மட்டுமே காரணம் என்பதை புரிந்துக் கொள்ளலாம்.

ஒரே சமயத்தில் இரண்டு நாடுகளில் இரண்டு வெவ்வேறு தொடர்களில் ஆடுமளவுக்கு இந்திய அணியின் வீரர்கள் எண்ணிக்கையும் பலமும் அதிகரித்திருக்கிறது. அதனாலயே இந்த உலகக்கோப்பை அணித்தேர்வு தேர்வாளர்களுக்கு கூடுதல் சிரமத்தை கொடுத்திருக்கும்.

கடந்த சில சீரிஸ்களிலேயே ஓப்பனிங்கில் மட்டும் 5-6 வீரர்கள் பயனடுத்தப்படிருந்தனர். ரோஹித், ராகுல், தவான், ப்ரித்வி ஷா என நீளும் அந்த பட்டியலில் ரோஹித்துக்கும் ராகுலுக்கும் மட்டுமே உலகக்கோப்பை அணியில் இடம் கிடைத்திருக்கிறது.

ஓப்பனிங்கைத் தாண்டி அடுத்தடுத்த வரிசையில் கோலி, இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ், பன்ட், ஹர்திக் பாண்ட்யா என பேட்டிங் ஆர்டர் நீளும். பும்ரா, புவனேஷ்வர், ஷமி என வேகப்பந்து வீச்சும், ராகுல் சஹார், ஜடேஜா, அஷ்வின், அக்சர் பட்டேல் என ஸ்பின்னும் வலுவாகவே இருக்கிறது. ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம் ஏற்படும்பட்சத்தில் ஷர்துல் தாகூர், மிடில் ஆர்டர் பேக் அப்புக்கு ஷ்ரேயாஸ் ஐயர், புவனேஷ்வர் குமார், ஷமி காயமடையும்பட்சத்தில் தீபக் சஹார் என ரிசர்வ் ப்ளேயர்கள் பட்டியலும் கச்சிதமாகவே இருக்கிறது.

கோலியின் பிடித்தமான வீரர்களாக கருதப்பட்ட சஹாலும், சிராஜும் அணியில் இல்லாததும் குட்டி சர்ப்ரைஸ். ஒட்டுமொத்தமாக எல்லா பாக்ஸ்களையும் டிக் அடிக்கும் வகையில் பெரிய சர்ப்ரைஸ்களையும் சிறிய ஏமாற்றங்களையும் கொண்ட அணியாக இந்த இந்திய அணி இருக்கிறது. 2019 உலகக்கோப்பையை கோலி வென்று தோனி கையில் கொடுத்து தோனியை கௌரவமாக வழியனுப்பி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை. இப்போது மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

தோனி
தோனி
தோனி உலகக்கோப்பையை வென்று சச்சின் கையில் கொடுத்து அழகுபார்த்ததை போல கோலி தோனி கையில் கோப்பையை கொடுக்கும் அந்தத் தருணம் அரங்கேறுமா?