Published:Updated:

அல்டிமேட் பௌலிங், அசாத்திய ஃபீல்டிங், அய்யோ பாவமான பேட்டிங்... இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா!

England ( ICC )

யாரோ ஓரிருவர் அசாத்தியமான இன்னிங்ஸ்களை ஆடி மேஜிக்குகளை நிகழ்த்தினால் மட்டுமே இந்திய அணியின் பேட்டிங் வலுவானதாகத் தெரிகிறது. மேஜிக்குகள் ஒவ்வொரு முறையும் நிகழ்வதில்லையே. அந்த ஓரிருவரும் சொதப்பும் போது இந்திய அணி மொத்தமாகச் சொதப்பி விடுகிறது.

அல்டிமேட் பௌலிங், அசாத்திய ஃபீல்டிங், அய்யோ பாவமான பேட்டிங்... இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா!

யாரோ ஓரிருவர் அசாத்தியமான இன்னிங்ஸ்களை ஆடி மேஜிக்குகளை நிகழ்த்தினால் மட்டுமே இந்திய அணியின் பேட்டிங் வலுவானதாகத் தெரிகிறது. மேஜிக்குகள் ஒவ்வொரு முறையும் நிகழ்வதில்லையே. அந்த ஓரிருவரும் சொதப்பும் போது இந்திய அணி மொத்தமாகச் சொதப்பி விடுகிறது.

Published:Updated:
England ( ICC )
பெண்களுக்கான உலகக்கோப்பை தொடரில் மோசமான பேட்டிங் பெர்ஃபார்மென்ஸால் இந்திய அணி மீண்டும் ஒரு தோல்வியைத் தழுவியிருக்கிறது. 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தப் போட்டியை இங்கிலாந்து அணி வென்று புள்ளிக்கணக்கைத் தொடங்கியிருக்கிறது.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி சமீபமாகவே கடுமையாகச் சொதப்பி வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் இதுவரை இங்கிலாந்து ஆடியிருக்கும் மூன்று போட்டிகளிலுமே தோல்வியே அடைந்திருந்தது. இங்கிலாந்தோடு ஒப்பிடும்போது இந்திய அணி ஓரளவுக்கு நன்றாகவே ஆடி வந்தது. ஆடியிருந்த மூன்று போட்டிகளில் இரண்டில் வென்றிருந்தது. இந்நிலையில்தான் தோல்வியில் உழன்று கொண்டிருக்கும் இங்கிலாந்தையும் இந்திய அணி எப்படியும் வீழ்த்திவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடந்ததோ வேறு. மிகமிக மோசமாக பெர்ஃபார்ம் செய்து இந்தப் போட்டியை இந்திய அணி கோட்டைவிட்டிருக்கிறது.

Mithali Raj
Mithali Raj

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முதலில் பேட் செய்த இந்திய அணி 134 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தது. கடந்த போட்டியில் அதிரடியாக நல்ல தொடக்கம் கொடுத்து இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த யஸ்திகா பாட்டியா இந்தப் போட்டியில் அதைச் செய்யத் தவறினார். அங்கேயே இந்திய அணி சறுக்கத் தொடங்கிவிட்டது. யஸ்திகா 8 ரன்களில் ஸ்ரப்சோலின் பந்தில் போல்டாகி வெளியேறியிருந்தார். மிதாலி கடந்த போட்டியை போன்றே நம்பர் 3 யிலேயே களமிறங்கினார்.

பவர்ப்ளேக்குள்ளேயே களமிறங்குவதால் தன்னுடைய இயல்பான ஆட்டத்தை ஆடுவதா அல்லது கொஞ்சம் அட்டாக்கிங்காக ஆடுவதா என்பதில் மிதாலி தடுமாற்றம் அடைகிறார். யஸ்திகா பவர்ப்ளேயில் நன்றாக ஆடி ஸ்கோரை ஏற்றிவிட்ட பிறகு மிதாலி உள்ளே வந்தால் எந்தத் தடுமாற்றமுமே இருக்காது. ஆனால், அது நிகழாத போது தொடர் சங்கிலியாக அடுத்தடுத்த பேட்டர்களும் சொதப்பும் நிலை ஏற்படுகிறது. அதே ஸ்ரப்சோலின் பந்தில் மிதாலியும் அவுட் ஆக, நம்பர் 4 இல் தீப்தி சர்மா களமிறங்கினார். நன்றாக ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து பார்ட்னர்ஷிப்களை அமைக்க உதவக்கூடியவர் என்பதால், இவர் அணியை சரிவிலிருந்து மீட்க முயல்வார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், அந்த ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யும் திறனே இவருக்கு வினையாக மாறியது. 10 பந்துகள் டாட் ஆடியதால் ஒரு அபாயகரமான சிங்கிளுக்கு முயன்று கேட் க்ராஸினால் டைரக்ட் ஹிட்டாக ரன் அவுட் ஆக்கப்பட்டார்.

பவர்ப்ளேக்குள்ளாகவே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில்தான், ஸ்மிருதி மந்தனாவும் ஹர்மன்ப்ரீத் கவுரும் கூட்டணி சேர்ந்தனர். இருவரும் இணைந்து 180+ ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால், அது வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான போட்டியில்! அதே போன்று ஒரு பார்ட்னர்ஷிப்பை இங்கேயும் நிகழ்த்த வேண்டிய தேவை இருந்தது. இருவருமே ஒரு சில பவுண்டரிகளை அடித்து நன்றாகவும் தொடங்கினர். ஆனாலும் இந்த பார்ட்னர்ஷிப் அதிக நேரம் நீடிக்கவில்லை. இளம் வீராங்கனையான டீன் இந்தக் கூட்டணியை வெற்றிகரமாக முறித்தார். பந்தை நன்றாகக் காற்றில் பறக்கவிட்டு நல்ல ஃபுல் லெந்த்தில் விழச் செய்து கொஞ்சமாக ஸ்பின் செய்து பேட்டர்களை ஏமாற்றினார். 14 ரன்களில் ஹர்மன்ப்ரீத்தை Front Foot-க்கு இழுத்து எட்ஜ் ஆக்கி கேட்ச் ஆக வைத்தார். தொடர்ந்து பந்தை ஃப்ளைட் செய்துகொண்டே இருந்த டீன் அதே ஓவரில் நம்பிக்கை நட்சத்திரமான ஸ்நே ராணாவையும் எட்ஜ் ஆக்கி வெளியேற்றினார்.

Richa Gosh
Richa Gosh
ICC

இன்னொரு முனையில் நின்று ஆடிக்கொண்டிருந்த ஸ்மிருதி மந்தனாவும் 35 ரன்களில் இடது கைஸ்பின்னரான எக்கல்ஸ்டனின் பந்தில் With the Spin ஆக ஸ்வீப் ஆட முயன்று lbw ஆகி வெளியேறினார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இதே போன்ற வீழ்ச்சியிலிருந்த சமயத்தில் பேட்டிங் ஆட வந்து போட்டியை வென்று கொடுத்த பூஜா வஸ்தராக்கர் இந்த முறை பெரிதாகச் சிரத்தை எடுக்காமலேயே அவுட் ஆகினார். டீனின் பந்தில் ரிவியூ சென்று தப்பித்த பிறகும் அதே தவறான ஷாட்டை திரும்பவும் ஆட முயன்று உடனே மீண்டும் lbw ஆகி வெளியேறினார். ரிச்சா கோஷ் மட்டும் கொஞ்சம் அதிரடியாக ஆடி வேகமாக ரன்களைச் சேர்த்தார். அவர் அடித்த அந்த 33 ரன்கள்தான் இந்திய அணியை 100 ரன்களைத் தாண்ட வைத்தது. ஆனால், அவரும் கொஞ்சம் பெரிய இன்னிங்ஸாக அதை மாற்றாமல் ரன் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான கடந்த போட்டியிலுமே ரிச்சா கோஷ் ரன் அவுட்தான் ஆகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

36.2 ஓவர்களில் இந்திய அணி 134 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் உலகக்கோப்பை தொடரில் தனது இரண்டாவது போட்டியில் ஆடிய டீன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தத் தொடரில் வெற்றியையே பார்த்திடாத இங்கிலாந்து அணி ரன்ரேட்டை ஏற்றிக்கொள்ளும் பொருட்டு வேகமாக இந்த சேஸிங்கை முடிக்க எண்ணியது. ஆனால், அந்த வேகமே அவர்களுக்கு வில்லங்கமாக மாறும் சூழலும் உருவானது. வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக 225 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் தோற்ற இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவிற்கு எதிராகவும் 235 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது. இந்தியாவுக்கு எதிரான இந்தப் போட்டியிலும் ரன்ரேட்டை கூட்ட முனைந்து 6 விக்கெட்டுகளை இழந்தே ஸ்கோரை சேஸ் செய்தது. ஜூலன் கோஸ்வாமி மற்றும் மேக்னா சிங் வீசிய முதல் ஸ்பெல்லிலேயே இங்கிலாந்தின் ஓப்பனர்கள் இருவரும் காலியாகினர். வியாட் மற்றும் ப்யூமண்ட் இருவருமே ஒரு ரன்னில் அவுட் ஆகியிருந்தனர்.

ஜூலன் கோஸ்வாமி தனது 250வது விக்கெட்டை வீழ்த்தி சரித்திரம் படைத்திருந்தார். பெண்கள் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் வீழ்த்தும் முதல் பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியே.
ஹெதர் நைட்
ஹெதர் நைட்
ICC

ஹெதர் நைட் மற்றும் சீவர் கூட்டணி இங்கிலாந்து அணிக்கு ஏறக்குறைய வெற்றியை உறுதி செய்து கொடுத்துவிட்டது. சீவர் சிறப்பாக ஆடி பவுண்டரிகளாகக் குவித்து சேஸிங்கைத் துரிதப்படுத்தினார். ஹெதர் நைட் கொஞ்சம் நின்று ஒரு முனையில் விக்கெட்டை காத்துக் கொண்டார். 45 ரன்களில் சீவர் அவுட் ஆகினார். அதன்பிறகும், சில விக்கெட்டுகள் வீழ்ந்தன. மேக்னா சிங் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், இதெல்லாம் இந்த டார்கெட்டை டிஃபண்ட் செய்ய போதுமானதாக இல்லை. ஹெதர் நைட் அரைசதத்தைக் கடந்தார். இங்கிலாந்து 31.2 ஓவர்களில் 4 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

135 ரன்களை டிஃபண்ட் செய்கையில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய பௌலர்கள் தங்களின் திறனை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கின்றனர். ரிச்சா கோஷ், ஹர்மன்ப்ரீத் ஆகியோர் அசாத்தியமாக கேட்ச்களைப் பிடித்து கலக்கியிருக்கின்றனர்.

பெளலிங் ஓகே. ஃபீல்டிங் ஓகே. ஆனால், பேட்டிங். அதுதான் பிரச்னை. இந்தப் போட்டியில் மட்டுமில்லை. முதல் போட்டியிலிருந்தே அது மட்டும்தான் பிரச்சனை.
Smriti Mandhana
Smriti Mandhana
Hotstar

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பூஜாவும் ராணாவும் இணைந்து சாகச இன்னிங்ஸை ஆடி அணியை காப்பாற்றியிருந்தனர். நியூசிலாந்துக்கு எதிராக அந்த ரோலை ஹர்மன்ப்ரீத் கவுர் செய்து கௌரவமான தோல்வியை பெற்றுக் கொடுத்தார். வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக ஹர்மன்ப்ரீத் கவுருடன் ஸ்மிருதி மந்தனாவும் இணைந்து கலக்கினார். யாரோ ஓரிருவர் அசாத்தியமான இன்னிங்ஸ்களை ஆடி மேஜிக்குகளை நிகழ்த்தினால் மட்டுமே இந்திய அணியின் பேட்டிங் வலுவானதாகத் தெரிகிறது. மேஜிக்குகள் ஒவ்வொரு முறையும் நிகழ்வதில்லையே. அந்த ஓரிருவரும் சொதப்பும்போது இந்திய அணி மொத்தமாக சொதப்பி விடுகிறது. இன்று இங்கிலாந்துக்கு எதிராகச் சொதப்பியிருப்பதை போல!

18 லிருந்து 28 ரன்களை எட்டுவதற்குள் யஸ்திகா, மிதாலி, தீப்தி என டாப் ஆர்டர் மொத்தமும் க்ளோஸ். 61 லிருந்து 71 ரன்களை எட்டுவதற்குள் ஹர்மன்ப்ரீத், ஸ்நே ராணா, ஸ்மிருதி மந்தனா என முக்கியமான 3 விக்கெட்டுகள் க்ளோஸ். கொஞ்சம் பொறுமை காத்து சூழலை உணர்ந்து ஆடி சீரான இடைவெளியில் இந்த விக்கெட்டுகள் வீழ்ந்திருந்தால் கூட, Post Match Presentation இல் மிதாலி பேசியதை போல 180 ஸ்கோரை எடுத்திருக்க முடியும். இந்திய அணியின் பந்துவீச்சிற்கு அது வெற்றியை தேடித்தருவதாகவும் கூட அமைந்திருக்கலாம். ஆனால், கூண்டோடு விக்கெட்டுகளை வாரி கொடுத்து மொத்தமாக தோற்றிருக்கின்றனர். பேட்டிங்கை சரி செய்யாமல் இந்திய அணி எவ்வளவு சிறப்பாக பந்துவீசி, பாய்ந்து விழுந்து ஃபீல்டிங் செய்தாலும் அது விரயமாகவே அமையும்.

India
India
ICC
இன்னும் எதுவும் முடிந்துவிடவில்லை. தொடர் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்திய பேட்டர்கள் சுதாரித்துக் கொண்டால் மீண்டுவிடலாம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism