Published:Updated:

ஃபார்முக்கு வந்த மிதாலி ராஜ்; ஆனால், பௌலிங்கிலும் ஃபீல்டிங்கிலும் சொதப்பி ஆஸியிடம் வீழ்ந்த இந்தியா!

India - Australia ( ICC )

பேட்டிங்கில் இந்திய அணியை விட எல்லாவிதத்திலும் ஒரு படி அதிகமாகவே ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டிருந்தது. இந்திய அணி பவர்ப்ளேயில் 39 ரன்களை எடுத்து 2 விக்கெட்டுகளை விட்டிருந்தது. ஆனால், ஆஸ்திரேலிய அணி 67 ரன்களை எடுத்து ஒரு விக்கெட்டை கூட விட்டிருக்கவில்லை.

ஃபார்முக்கு வந்த மிதாலி ராஜ்; ஆனால், பௌலிங்கிலும் ஃபீல்டிங்கிலும் சொதப்பி ஆஸியிடம் வீழ்ந்த இந்தியா!

பேட்டிங்கில் இந்திய அணியை விட எல்லாவிதத்திலும் ஒரு படி அதிகமாகவே ஆஸ்திரேலியா சிறப்பாக செயல்பட்டிருந்தது. இந்திய அணி பவர்ப்ளேயில் 39 ரன்களை எடுத்து 2 விக்கெட்டுகளை விட்டிருந்தது. ஆனால், ஆஸ்திரேலிய அணி 67 ரன்களை எடுத்து ஒரு விக்கெட்டை கூட விட்டிருக்கவில்லை.

Published:Updated:
India - Australia ( ICC )
கப்பலில் ஒரு பக்கம் ஓட்டையைச் சரி செய்தால் இன்னொரு பக்கம் உடைபட்டு தலைவலியைக் கொடுப்பதைப் போல, பெண்கள் உலகக்கோப்பையில் இந்திய அணி தங்களின் பிரச்னையாக இருந்த பேட்டிங்கில் மேம்பட்ட பிறகும் பௌலிங் மற்றும் ஃபீல்டிங் சொதப்பலால் தோற்றிருக்கிறது. எதிர்த்து ஆடிய ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய சேஸிங்கை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டி அரையிறுதிக்கும் முன்னேறியிருக்கிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலிருந்தே இந்திய அணி பேட்டிங்கில் தடுமாறிக் கொண்டேதான் இருந்தது. கடைசியாக இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய போட்டியில் வெறும் 134 ரன்களுக்கே இந்திய அணி ஆல் அவுட் ஆகியிருந்தது. இந்த பேட்டிங் சொதப்பல்களை சரி செய்யும் பொருட்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்தப் போட்டியில் ப்ளேயிங் லெவனிலும் பேட்டிங் ஆர்டரிலும் இந்திய அணி சில மாற்றங்களைச் செய்திருந்தது. ஆல்ரவுண்டரான தீப்தி சர்மாவை பென்ச்சில் வைத்துவிட்டு அவருக்குப் பதில் ஷெஃபாலி வெர்மாவை மீண்டும் லெவனுக்குள் கொண்டு வந்திருந்தனர். ஸ்மிருதி மந்தனாவுடன் ஷெஃபாலியே ஓப்பனிங்கும் இறக்கப்பட்டார். இதனால் யஸ்திகா பாட்டியா நம்பர் 3 க்கும் மிதாலி ராஜ் நம்பர் 4 க்கும் இறக்கப்பட்டிருந்தனர்.

யஸ்திகா
யஸ்திகா
BCCI

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூடுதல் பலமாக இருப்பார், அணியின் அந்த உத்வேகமற்ற தொடக்கத்தைச் சரி செய்வார் என உள்ளே கொண்டு வரப்பட்டிருந்த ஷெஃபாலி இந்தப் போட்டியிலும் சொதப்பவே செய்தார். மேஹன் ஷட்டின் தலைக்கு மேல் பறக்கவிட்ட அந்த ஒரே ஒரு சிக்சர் மட்டுமே ஆறுதலாக அமைந்தது. ஸ்மிருதி மந்தனாவும் பத்தே ரன்களில் டார்சி ப்ரவுனின் பந்தில் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் கேட்ச் ஆகியிருந்தார். கவர்ஸில் அடிக்கத் தூண்டும் வகையிலான லைன் & லெந்தில் வீசப்பட்ட இந்தப் பந்தைச் சரியாக அடிக்காமல் ஸ்மிருதி மந்தனா விக்கெட்டை விட்டிருந்தார். எதிர்பார்த்த வேகமான நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. பவர்ப்ளேயில் 39 ரன்களை மட்டுமே எடுத்து 2 விக்கெட்டுகளை விட்டிருந்தனர். கடந்த போட்டிகளில் பேட்டிங்கில் இந்திய அணிக்கு எப்படியான சரிவுகள் நிகழ்ந்திருந்ததோ அவை அப்படியே இந்தப் போட்டியிலும் நிகழப்போவதை போன்ற அறிகுறி தென்பட்டிருந்தது. ஆனால், அப்படி எதுவும் நிகழவில்லை. காரணம், யஸ்திகா பாட்டியா மற்றும் மிதாலி ராஜ் இருவரும் அமைத்த சிறப்பான கூட்டணி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

யஸ்திகா பாட்டியா இளம் வீராங்கனையாக அனுபவமற்றவராக இருந்தாலும் ஆடியிருக்கும் சொற்ப போட்டிகளிலும் அவர் மேலிருந்து கீழ் வரை எல்லா ஆர்டர்களிலும் இறக்கப்பட்டிருக்கிறார். எங்கே இறங்கினாலும் குறிப்பிடத்தக்க வகையில் பெர்ஃபார்மும் செய்திருக்கிறார். அதனால், திடீரென நம்பர் 3-க்கு இறக்கப்பட்டது அவருக்கு ஒவ்வாமையாக அமையவில்லை. மிதாலி ராஜூம் தொடக்கத்தில் நம்பர் 4-ல் இறங்கி வந்தவர் கடந்த சில போட்டிகளாக நம்பர் 3-ல் இறங்கினார். இந்தp போட்டியில் மீண்டும் நம்பர் 4. இருவருமே பவர்ப்ளேக்குள்ளாகவே க்ரீஸுக்குள் வந்துவிட்டனர். 50 ஓவர்களை முழுமையாக நின்று ஆடிவிட வேண்டும் என்பது இங்கிலாந்துக்கு எதிரான தோல்வியின் மூலம் இந்தியாவிற்குக் கிடைத்திருந்த படிப்பினை. இதை யஸ்திகா மற்றும் மிதாலி இருவருமே உணர்ந்திருந்தனர். எவ்வளவு நேரம் நிற்க முடியுமோ நின்று பெரிய பார்ட்னர்ஷிப்பை உருவாக்கவே இருவரும் முனைந்தனர். அதிகமாக டாட்கள் ஆடுவது இந்தியாவிற்குப் பெரிய பிரச்னையாக இருந்தது. அதை ஓரளவு சரி செய்யும்பொருட்டு நன்றாக ஓடி ஓடி ரன்களைச் சேர்த்திருந்தனர்.

Mithali Raj | மிதாலி ராஜ்
Mithali Raj | மிதாலி ராஜ்
BCCI
இருவரும் இணைந்து 25.4 ஓவர்களுக்கு பேட்டிங் ஆடி 130 ரன்களைச் சேர்த்திருந்தனர். இருவருமே அரைசதத்தையும் கடந்திருந்தனர். இந்தியா சார்பில் உலகக்கோப்பை போட்டிகளில் 3வது விக்கெட்டிற்கு எடுக்கப்பட்ட அதிகப்படியான ரன்கள் இதுவே.

ஜோனேசனின் பந்தில் இறங்கி வந்து அவரின் தலைக்கு மேலேயே மிதாலி அடித்த சிக்சர் மற்றும் ஆஃப் சைடில் யஸ்திகாவின் லாகவமான கட் ஷாட்கள் ஆகியவை அட்டகாசமாக அமைந்தது. இந்தக் கூட்டணி இன்னும் பெரிதாக ஸ்கோர் செய்யும் என்ற எதிர்பார்ப்பையும் தூண்டியது. ஆனால், இருவருமே அரைசதத்தை கடந்த உடனேயே விக்கெட்டை விட்டிருந்தனர். யஸ்திகா 59 ரன்களிலும் மிதாலி 68 ரன்களிலும் ப்ரவுன் மற்றும் கிங்கின் பந்திவீச்சில் எலைஸா பெர்ரியிடம் கேட்ச் ஆகி இருந்தனர். ஒரு விக்கெட்டை இழந்தால் தொடர்ச்சியாக இரண்டு மூன்று விக்கெட்டுகளை இழப்பதே இந்திய அணியின் ஸ்டைல். ரிச்சா கோஷ், ஸ்நே ராணா ஆகியோரும் இதன்படி அடுத்தடுத்து வீழ்ந்திருந்தனர். ஆனால், நம்பிக்கையளிக்கும் வகையில் நல்ல ஃபார்மில் இருந்த துணை கேப்டனான ஹர்மன்ப்ரீத் கவுர் க்ரீஸில் இருந்தார். அவரோடு அதிரடி ஆல்ரவுண்டரான பூஜா வஸ்த்ராக்கரும் இணைந்திருந்தார். கடைசி 10 ஓவர்களில் இந்த கூட்டணி தங்களால் இயன்றளவுக்கு அதிரடியாக ஆடியது. ஸ்ட்ரெய்ட் பவுண்டரிக்களின் தூரம் ரொம்பவே குறைவாக இருந்ததால் அதை டார்கெட் செய்த பெரிய ஷாட்களை ஆடியிருந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தக் கூட்டணி கடைசி 7.5 ஓவர்களில் 64 ரன்களைச் சேர்த்து ஸ்கோரை 280 க்கு நெருக்கமாக கொண்டு வந்து சேர்த்தது. ஆஸ்திரேலியாவிற்கு டார்கெட் 278. ஹர்மன்ப்ரீத் கவுர் அரைசதத்தைக் கடந்திருந்தார்.
HarmanPreet Kaur
HarmanPreet Kaur
ICC

பெண்கள் உலகக்கோப்பை தொடரில் இந்தளவுக்கு அதிகமான ஸ்கோரை எந்த அணியுமே சேஸ் செய்ததில்லை எனும் ரெக்கார்ட் இந்திய அணிக்குச் சாதகமாக இருந்தது. ஆனால், பழைய ரெக்கார்டுகளையெல்லாம் சல்லி சல்லியாக உடைத்து புதிய சாதனைகளை செய்வதுதான் ஆஸ்திரேலிய அணியின் பாணி. இந்த டார்கெட்டையும் ஆஸ்திரேலிய சிறப்பாக வெற்றிகரமாக சேஸ் செய்து முடித்தது.

பேட்டிங்கில் இந்திய அணியை விட எல்லாவிதத்திலும் ஒரு படி அதிகமாகவே ஆஸ்திரேலியா சிறப்பாகச் செயல்பட்டிருந்தது. இந்திய அணி பவர்ப்ளேயில் 39 ரன்களை எடுத்து 2 விக்கெட்டுகளை விட்டிருந்தது. ஆனால், ஆஸ்திரேலிய அணி 67 ரன்களை எடுத்து ஒரு விக்கெட்டை கூட விட்டிருக்கவில்லை. இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டுவதற்கு 2 முக்கியமான பார்ட்னர்ஷிப்கள் காரணமாக அமைந்திருந்தன. அதில் ஒன்று 100+ பார்ட்னர்ஷிப். ஆஸ்திரேலிய அணி ஸ்கோரை வெற்றிகரமாக சேஸ் செய்ய மூன்று பார்ட்னர்ஷிப்கள் மிக முக்கிய காரணமாக அமைந்திருந்தது. அதில் இரண்டு 100+ பார்ட்னர்ஷிப்கள் அடக்கம்.

ஓப்பனிங்கில் அலிசா ஹீலி மற்றும் ரேச்சல் ஹேனஸ் ஆகியோர் இணைந்து 121 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அடுத்ததாக, எலிஸா பெர்ரியும் கேப்டன் மெக் லேனிங்கும் 103 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர்.
அலிஸா ஹீலி
அலிஸா ஹீலி
Cricket Australia

இந்த இரண்டு பார்ட்னர்ஷிப்களுமே ஆட்டத்தை ஆஸ்திரேலியா பக்கமாகத் திருப்பியது. தீப்தி சர்மா இல்லாததால் சரியாக 5 பௌலிங் ஆப்சன்களுடன் களமிறங்கிய இந்திய அணி ரொம்பவே திணறியிருந்தது. 6 ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா அணி 50 ரன்களைக் கடக்க ஸ்பின்னர்களையும் பூஜாவையும் பவர்ப்ளேக்குள்ளாகவே அழைத்து வர வேண்டிய சூழல் உருவானது. அலிஸா ஹீலி கவர்ஸிலேயே பவுண்டரிகளாக அடித்து வேகவேகமாக ரன்களைச் சேர்த்தார்.

பவர்ப்ளேயில் ஃபுல் லெந்தில் இந்திய பௌலர்கள் வீசிய பந்தில் ஆஸ்திரேலிய பேட்டர்களின் ஸ்ட்ரைக் ரேட் 100+ ஆகவும் ஷார்ட் பிட்ச்சாக வீசிய பந்துகளில் 350+ ஆகவும் இருந்தது. அதேநேரத்தில் குட் லெந்த்தில் வீசப்பட்ட பந்துகளில் ஆஸ்திரேலிய பேட்டர்களின் ஸ்ட்ரைக் ரேட் 50 ஆக மட்டுமே இருந்தது. விக்கெட்டுக்காக ரிஸ்க் எடுத்து வீசியபோதும் இந்திய பௌலர்களின் பந்துவீச்சு எடுபடவில்லை. ஆஸ்திரேலிய பேட்டர்களும் எந்த பந்தை அடிக்க வேண்டும் எதை அடிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தனர். ஸ்டம்ப் டூ ஸ்டம்பாக வீசப்பட்ட பந்துகளை விடாப்பிடியாக அடிக்க முயலாமல் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்துவிட்டு இடம் கொடுத்து வீசிய பந்துகளிலேயே பெரும்பாலான ஷாட்களை ஆடினர். அலிஸா ஹீல் கவர்ஸை குத்தகைக்கு எடுத்து ஷாட் ஆடியதை போல மெக் லேனிங் பாய்ண்ட்டில் அற்புதமாக கட் செய்து பவுண்டரிக்களை அடித்து அசத்தினார். இந்திய அணிக்கு முதல் திருப்புமுனையை வழக்கம்போல ஸ்நே ராணாவே ஏற்படுத்திக் கொடுத்தார். பூஜா வஸ்த்ராக்கரும் முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இடையில் மழை குறுக்கிட்டு போட்டி கடைசி ஓவர் வரை சென்ற போதும் ஆஸ்திரேலியா சௌகரியமான வெற்றியைப் பெற்றது. 5 போட்டிகளில் ஆடியிருக்கும் இந்திய அணி மூன்றாவது தோல்வியைச் சந்தித்தது.

Meg Lanning
Meg Lanning
ICC

கடந்த போட்டிகளில் இந்திய அணிக்கு பிரச்சனையாக இருந்த பேட்டிங் பெர்ஃபார்மென்ஸ் இந்தப் போட்டியில் சிறப்பாக அமைந்திருந்தது. ஆனால், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் இரண்டுமே பிரச்னையாக அமைந்திருந்தது. கூடுதல் பௌலர் இல்லை. தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்துவதில் தாமதம் என பௌலிங் ஒரு பக்கம் சொதப்ப இன்னொரு பக்கம் ஃபீல்டிங்கும் சுமாராகவே இருந்தது. 12 வது ஓவரில் ஹேனஸ் மிட் ஆஃபில் தட்டிவிட்டு ஒரு Quick Single எடுக்க முயன்றிருப்பார். மிட் ஆஃபில் நின்ற ஹர்மன்ப்ரீத் கவுர் அந்த பந்தை டைரக்ட் ஹிட்டாக அடித்திருந்தால் ஹேனஸ் உறுதியாக அவுட் ஆகியிருப்பார். ஹேனஸ் - ஹீலி பார்ட்னர்ஷிப்பும் முறிந்திருக்கும். ஆனால் அந்தப் பந்தை பௌலிங்க் ஃபாலோ த்ரோவை முடித்து கொஞ்ச தூரம் தள்ளி நின்ற பூஜாவிடம் தூக்கி ஹர்மன்ப்ரீத் வீசியிருந்தார். எளிதான ரன் அவுட் அங்கே மிஸ் ஆகியிருந்தது. இப்படியான தவறுகள் ஃபீல்டிங்கில் அதிகமாகவே நிகழ்ந்திருந்தன.

ஃபீல்டர்கள் பௌலர்களுக்கு ஒத்துழைத்திருக்க வேண்டும்.
கேப்டன் மிதாலி ராஜ்

என மிதாலி ராஜே Post match Presentation இல் ஆதங்கப்பட்டிருந்தார்.

மூன்று போட்டிகளில் தோற்ற பிறகும் இந்திய அணி இன்னும் நான்காவது இடத்திலேயே நீடிக்கிறது. சிறப்பான ரன்ரேட் இதற்கு ஒரு காரணம்.

Team India
Team India
BCCI
அடுத்த இரண்டு போட்டிகளிலும் நல்ல வெற்றிகளை பெற்று இதே ரன்ரேட்டை தக்கவைத்துக் கொள்ளும்பட்சத்தில் இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிட்டும். என்ன நிகழப்போகிறது? இந்தியா அரையிறுதிக்கு தகுதிப்பெறுமா? காத்திருப்போம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism