Published:Updated:

கோலி கேப்டன்சி... 11 தொடர் வெற்றிகள்... உண்மையாகும் இந்தியாவின் டிரீம் லெவன் கனவு! #IndVsSA

கோலி மற்றும் இந்திய அணியினர்
கோலி மற்றும் இந்திய அணியினர்

ரோஹித் ஷர்மா ஓப்பனராக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெயிப்பாரா, அஷ்வின் மீண்டும் தனது இடத்தைத் தக்கவைப்பாரா, கீப்பர் பன்ட்க்கு பதிலாக சாஹா சரி வருவாரா, ஸ்பின்னர்கள் சீரிஸாக மட்டும் இருக்குமா இல்லை ஃபாஸ்ட் பெளலர்களுக்கும் பிட்ச் சப்போர்ட் செய்யுமா இப்படிப் பல கேள்விகள்!

உண்மையிலேயே இதுதான் இந்தியாவின் டிரீம் லெவன் அணியோ என்று உறுதிசெய்யும் தொடராக அமைந்திருக்கிறது இந்தியா வெர்சஸ் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் சீரிஸ். ரோஹித் ஷர்மா ஓப்பனராக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜெயிப்பாரா, அஷ்வின் மீண்டும் தனது இடத்தைத் தக்கவைப்பாரா, கீப்பர் பன்ட்க்கு பதிலாக சாஹா சரி வருவாரா, ஸ்பின்னர்கள் சீரிஸாக மட்டும் இருக்குமா இல்லை ஃபாஸ்ட் பெளலர்களுக்கும் பிட்ச் சப்போர்ட் செய்யுமா என்கிற பல கேள்விகளுடன்தான் இந்த டெஸ்ட் தொடர் தொடங்கியது. தொடரின் முடிவில் அனைத்துக் கேள்விகளுக்கும் பதில் கிடைத்திருக்கிறது. எல்லாம் மகிழ்ச்சி!

70-80களில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 90-2000-களில் ஆஸ்திரேலிய அணிகள் எப்படி தொடர் வெற்றிகளைக் குவித்ததோ அதற்கு சரி சமமாக வெற்றிகளைக் குவித்துக்கொண்டிருக்கிறது இந்திய அணி. இந்திய மண்ணில் 11 தொடர் வெற்றிகள் பெற்று சாதனை படைத்திருக்கிறது இந்திய அணி.

இந்தத் தொடரில் இந்தியாவின் ஆதிக்கம் எப்படியிருந்தது என்பதைச் சில புள்ளிவிவரங்களே தெளிவாகச் சொல்லிவிடும்.

இந்தியா இழந்த விக்கெட்கள் - 25

தென்னாப்பிரிக்கா இழந்த விக்கெட்கள் - 60

இந்திய அணியின் பேட்டிங் ஆவரேஜ் - 76.92

தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் ஆவரேஜ் - 23.02

இந்திய அணியில் டக் அவுட் - 1

தென்னாப்பிரிக்காவில் டக் அவுட் - 13

முதல் டெஸ்ட் - இந்திய அணி 203 ரன் வித்தியாசத்தில் வெற்றி

இரண்டாவது டெஸ்ட் - இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

மூன்றாவது டெஸ்ட் - இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

Indian Team
Indian Team
`எங்க ரூமில்தான் தோனி இருக்கிறார்; வந்து ஹலோ சொல்லுங்க!'-செய்தியாளர்களைக் கலாய்த்த கோலி

``புள்ளப்பூச்சிங்களை ஏன்பா அடிக்கிறீங்க'' எனக்கேட்கும் அளவுக்கு இந்தியாவின் ஆதிக்கம் இருந்தது. மயாங்க் அகர்வால் இரட்டை சதம், கோலி இரட்டை சதம், ரோஹித் ஷர்மா இரட்டை சதம் ப்ளஸ் இரண்டு சதங்கள், ரஹானே சதம் என பேட்ஸ்மேன்கள் ஒருபக்கம் என்றால் அஷ்வின், ஜடேஜா இருவரும் ஸ்பின்னிலும், ஷமி, இஷாந்த், உமேஷ் வேகப்பந்து வீச்சிலும் மிரட்டி எடுத்துவிட்டார்கள். கம்ப்ளீட் டீம் எஃபர்ட்!

இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் போது பொதுவாக `ஸ்பின் டு வின்' என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்படும். அதை இந்தத் தொடரில் நமது ஃபாஸ்ட் பெளலர்கள் மாற்றியமைத்திருக்கிறார்கள். இந்திய அணி எடுத்த 60 விக்கெட்களில் 26 விக்கெட்கள் ஷமி, உமேஷ், இஷாந்த் எடுத்தது. ஆவரேஜ் 17.5.

மயாங்க் அகர்வால் - ரஹானே

அடுத்தடுத்த போட்டிகளில் இரட்டை சதம் மற்றும் சதம் அடித்து இந்திய ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் மயாங்க் அகர்வால். பெளலர்களின் லைன் அண்டு லென்த்தைச் சரியாகப் படித்து, ஃபீல்டிங் செட்-அப்பை சரியாகப் புரிந்து, மோசமான பந்துகளை மட்டுமே அடித்து என... மயாங்க் ஆடிய 2 இன்னிங்ஸ்கள், மிகப்பெரிய மெச்சூர்டு வீரர்கள் ஆடியது போல் இருந்தது. இரண்டாவது டெஸ்ட்டில் 87 ரன்களில் களத்தில் நின்றபோது மகராஜ் பந்தில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்கள் அடித்து 99 ரன்களில் போய் நின்றார் மயாங்க். செஞ்சுரியை நெருங்குகிறோம் என்கிற பதற்றம் துளிகூட அவரிடம் இல்லை. மயாங்கிற்கு ஒளிமயமான எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது.

kohli and team
kohli and team
50-வது டெஸ்ட்... நம்பர் 1 டீம்... கேப்டன் கோலி செய்த அந்த முக்கிய மாற்றம் என்ன?! #Kohli50

கிரிக்கெட்டில் versatile batsman என்ற வார்த்தை உபயோகப்படுத்துவது உண்டு. அதற்கு முழுமுதற் சாட்சியாக ரஹானேவைச் சொல்லலாம். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பொறுமையாக ஆடி அரைசதம் அடித்து கோலிக்கு ப்ரஷர் இல்லாமல் பார்த்துக்கொண்டார் என்றால் மூன்றாவது டெஸ்ட்டில் தனது வழக்கமான அட்டாக்கிங் ஷாட்ஸ்களை ஆடி சதம் அடித்து ரோஹித் ப்ரஷரை குறைத்தார். இரண்டு ஆட்டங்களும் முற்றிலும் வேறுபட்டவை .

சாஹா

பொதுவாக கீப்பர்கள் தங்களது பேட்டிங் சாதனையின் மூலம் பிரபலமாவார்களே தவிர கீப்பிங்கின் மூலம் பிரபலமானவர்கள் குறைவு. ஆனால், சாஹா கீப்பிங்கால் மட்டுமே ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். பன்ட் மேல் இருந்த அலையை மொத்தமாகத் தன் பக்கம் திருப்பிவிட்டார் சாஹா. இரண்டாவது டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் உமேஷ் யாதவ் பந்தில் முதல் ஸ்லிப்புக்குச் சென்ற பந்தை தாவிப் பிடித்து அனைவரின் பார்வையும் உயரச் செய்தார் என்றால் இரண்டாவது இன்னிங்ஸில் மறுபடியும் உமேஷ் யாதவ் பந்தில் லெக் சைடு செல்லும் பந்தை, தவளை தனது இரையைத் தாவிப் பிடிப்பதுபோல பிடித்து ஒட்டு மொத்த ரசிகர்களின் பேராதரவையும் பெற்றார்.

ஃபாஸ்ட் பெளலிங்கில்தான் தாவிப்பிடிக்கிறார் என நினைத்துக்கொண்டிருந்த தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்ளெஸ்ஸிக்கு அதிர்ச்சி கொடுத்தார் சாஹா. அஷ்வின் வீசிய பந்து டுப்ளெஸ்ஸியின் பேட்டில் பட்டு சாஹா கைக்குச் சென்றது. ஆனால், பந்தின் வேகம் காரணமாக சாஹா கைகளிலிருந்து நழுவப் பார்த்தது. ஒரு முறை அல்ல 4 முறை பந்தை தட்டிப் பிடித்துவிட்டு டுப்ளெஸ்ஸியின் இன்னிங்ஸை முடித்தார் சாஹா.

ரோஹித், மயாங்க், அஷ்வின், ஷமி, ஜடேஜா... டீம் கோலி முழுக்க மேட்ச் வின்னர்ஸ்! #INDVsSA
saha
saha

உமேஷ் யாதவ் & முகமது ஷமி

தான் விளையாடிய 2 போட்டிகளில் 11 விக்கெட்கள் எடுத்துத் தன் தேர்வை நியாயப்படுத்தியிருக்கிறார் உமேஷ். இரண்டாவது போட்டியில் 6 விக்கெட்கள் எடுத்தவர், அடுத்த போட்டியில் 5 விக்கெட்கள் எடுத்து இந்திய பிட்ச் ஸ்பின் பெளலர்களுக்கு மட்டுமே உரித்தானது அல்ல என்பதை புரிய வைத்திருக்கிறார்.

`இவ்விடம் சிறந்த முறையில் ஸ்டம்ப்கள் உடைத்துத் தரப்படும் என்று விளம்பரப்பலகை மட்டும்தான் வைக்கவில்லை. பல பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்பை பதம் பார்த்து 13 விக்கெட்களை அள்ளியிருக்கிறார் முகமது ஷமி. பந்தை இருபுறம் ஸ்விங் செய்வதிலும் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதிலும் ஷமியின் எக்ஸ்பர்ட்டீஸ் கூடிக்கொண்டே போகிறது. கடைசி நாளில் யாரிடம் பெளலிங்கைக்கொடுக்கலாம் என கோலி யோசிக்கவேண்டிய அவசியமே இல்லை. கண்ணை மூடிக்கொண்டு ஷமியிடம் கொடுக்கலாம்.

Rohit sharma
Rohit sharma
AP

அஷ்வின் & ஜடேஜா

கிட்டத்தட்ட ஓராண்டாக சர்வதேசப் போட்டிகளில் விளையாட வாய்ப்பளிக்காமல் தத்தளிக்க விடப்பட்டவர், வாய்ப்பு கிடைத்த முதல் டெஸ்ட்டிலேயே அசரடித்தார். முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் மட்டும் 7 விக்கெட்டுகள். 66 டெஸ்ட்டில் 350 விக்கெட்டுகள் எடுத்து முரளிதரன் செய்த உலக சாதனையை சமன் செய்த அஷ்வின், இந்தத் தொடரில் 15 விக்கெட்கள் எடுத்து அதிக விக்கெட்கள் எடுத்த பெளலர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

kohli
kohli
`நான் இப்படி விளையாடவில்லை என்றால் என்னென்னமோ நடந்திருக்கும்'- ராஞ்சியில் மனம் திறந்த ரோஹித்!

இந்தியாவுக்குக் கிடைத்த அட்சயபாத்திரம் ஜடேஜா. அள்ள அள்ளக் குறையாமல் இந்தத் தொடர் முழுவதும் தனது சிறந்த பங்களிப்பைக் கொடுத்துவிட்டார். கோலி இவரை நம்பி வெறும் 5 பேட்ஸ்மேன்களோடு மட்டும்தான் கடைசி 2 போட்டிகளில் களம் இறங்கினார். ஜடேஜாவும் கோலியின் நம்பிக்கையைப் பொய்யாக்கவில்லை. பெளலிங்கில் 13 விக்கெட்கள், பேட்டிங்கில் இரண்டாவது டெஸ்டில் 91 ரன்கள் மற்றும் மூன்றாவது டெஸ்டில் 51 ரன்கள் அடித்து தான் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். முதல் டெஸ்டில் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள் எடுத்ததெல்லாம் வேற லெவல் மாஸ்!

கோலி டிரைவ்ஸ்!

தொடர்ந்து 10 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் சதம் அடிக்கவில்லை கோலி. அதற்குள் 'கோலி ஃபார்ம் அவுட். முன்பிருந்த வேகம் இல்லை... பழைய பாய்ச்சல் இல்லை' என விமர்சனங்கள். ஆனால், இரண்டாவது டெஸ்ட்டில் கிரிக்கெட்டின் மூன்று ஃபார்மேட்டிலுமே தான்தான் கிங் என்பதை நிரூபித்தார் கோலி.எந்த பெளலர் ஃபுல் லென்த்தில் பந்தை வீசினாலும், கோலியின் கை ஸ்ட்ரெய்ட் டிரைவ் ஆடிக்கொண்டே இருந்தது. தனது 26-வது சதத்தையும் ஃபிளாண்டர் பந்தில் ஸ்ட்ரெயிட் டிரைவ் ஆடியே எடுத்தார் விராட்.

kohli
kohli

முத்துசாமி பந்தில் ஃபைன் லெக் திசையில் 2 ரன்கள் அடித்து 7-வது முறையாக 200 ரன்கள் எடுத்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்தார். கூடவே 7,000 ரன்களையும் கடந்தார் இந்தச் சாதனை மன்னன். அதோடு தன் ரன் வேட்டையை விடவில்லை. வண்டியை டாப் கியரில் ஏற்றி மின்னல் வேகத்தில் ஆட ஆரம்பித்து 254 ரன்கள் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ஸ்கோரையும் பதிவு செய்தார்.

கோலி நினைத்திருந்தால் 300 ரன்களுக்காக ஆடியிருக்கலாம். ஆனால் கோலி அதை விரும்பவில்லை. தனி நபர் சாதனையை விட அணியின் வெற்றியே முக்கியம் என ஜடேஜா அவுட் ஆனதும் டிக்ளேர் செய்துவிட்டார் கோலி.

ரோஹித் 500

Rohit sharma
Rohit sharma

கடந்த மாதம் வரை அணியில் இடம் பிடிப்பாரா என்று கேட்டு கொண்டிருந்தவர்களை வெறும் 20 நாளில் இனி இவர் இல்லாமல் எங்கும் டெஸ்ட் போட்டியில் ஆடக்கூடாது என சொல்லவைத்துவிட்டார் ரோஹித் ஷர்மா.

டெஸ்ட் கிரிக்கெட் ஓப்பனிங் பேட்டிங் என்பது புது பந்தில் மிகவும் கவனமாக ஆட்டத்தை தொடங்கி, டீசிங் டெலிவரிகளுக்கு விக்கெட்டை கொடுக்காமல் ஆடி ,முதல் 20 ஓவர்களில் பெளலர்களுக்கு மதிப்பு கொடுத்து, நல்ல பந்துகளை ஆடாமல் விட்டு, பந்து சிறிது தேய்ந்தவுடன் அடித்து ஆட ஆரம்பிக்க வேண்டும் என்பதே. இதை ரோஹித் ஷர்மா கற்பூரம் போல் பிடித்து கொண்டு விட்டார்.

முதல் டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்ஸிலும் சதங்கள் அடித்து டெஸ்ட்டிலும் தான் 'ஹிட்மேன்' என்பதை நிரூபித்தார் ரோஹித் ஷர்மா. 176 ரன்கள் & 127 ரன்கள் என அவர் அடித்த இந்த இரண்டு சதங்கள் முலம் அவரைப் பற்றி கேலி பேசிக் கொண்டிருந்தவர்களை வாயடைக்க வைத்தார் என்றால், முன்றாவது டெஸ்ட்டில் 212 ரன்கள் எடுத்து 'உன்னை மாதிரி ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேனைத்தான் தேடிக் கொண்டிருந்தோம்' என விமர்சகர்களையும் புகழவைத்துவிட்டார்.

கோல்பக் டீல்... ப்ளேயிங் லெவன் ரிசர்வேஷன்... ட்ரான்ஸிஷன்... மீண்டெழுமா தென்னாப்பிரிக்கா! #SAcricket

இந்தத் தொடரில் ரோஹித் இதுவரை 529 ரன்களை குவித்துள்ளார். ஷேவாக் பாகிஸ்தானுக்கு எதிராக 2004-05 தொடரில் 544 ரன்கள் எடுத்திருந்ததுதான் ஓப்பனிங் பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோர். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஒருவர் டெஸ்ட்டில் ஒரு தொடரில் 500 ரன்களைத் தாண்டியிருக்கிறார்.

ஒன் மேன் ஆர்மியாக இருந்த இந்திய அணி இன்று 11 பேருமே பங்களிக்கும் கனவு அணியாக டிரீம் லெவனாக உருவெடுத்திருக்கிறது!

அடுத்த கட்டுரைக்கு