Election bannerElection banner
Published:Updated:

"விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் பேசினேன்" - விராட் கோலி

Virat Kohli
Virat Kohli

டெண்டுல்கரின் ட்வீட்டைத் தொடர்ந்து பல இந்திய வீரர்களும் இதே தொனியில் ட்வீட்களைப் பதிவு செய்ய சோஷியல் மீடியாக்களில் இதுதொடர்பான நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகளவில் எழுந்தன. இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும், இதுதொடர்பாக ட்வீட் செய்திருந்தார்.

சென்னையில் நாளை இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்கும் நிலையில் விவசாயிகள் போராட்டம் குறித்த கிரிக்கெட் வீரர்களின் ட்வீட்கள் பேசுபொருளாகியிருக்கின்றன.

டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து சர்வதேச பிரபலங்கள் ரியானா, கிரேட்டா தன்பெர்க் ஆகியோரின் கருத்துகளுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்கள். "இந்தியாவின் இறையாண்மையில் எப்போதும் சமரசம் செய்துகொள்ளமுடியாது. அந்நியர்கள் பார்வையாளர்களாக இருக்கலாமே தவிர, பங்கேற்பாளர்களாக இருக்கமுடியாது. இந்தியர்களுக்கு இந்தியாவைத்தெரியும். இந்தியாவுக்கு, இந்தியர்கள்தான் முடிவெடுக்கமுடியும். ஒரே நாடாக இணைந்திருப்போம்" என ட்வீட் செய்திருந்தார் சச்சின் டெண்டுல்கர்.

டெண்டுல்கரின் ட்வீட்டைத்தொடர்ந்து பல இந்திய வீரர்களும் இதேதொனியில் ட்வீட்களைப் பதிவு செய்ய சோஷியல் மீடியாக்களில் இதுதொடர்பான நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகளவில் எழுந்தன. இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலியும், இதுதொடர்பாக ட்வீட் செய்திருந்தார்.

விராட் கோலி
விராட் கோலி

இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பாக இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்த கேள்வி விராட் கோலியிடம் கேட்கப்பட்டது. "ஒவ்வொரு வீரருமே அவர்களுக்கு என்ன தோன்றியதோ அதைதான் ட்வீட் செய்திருந்தார்கள். அவரவர் கருத்தை சொல்ல எல்லோருக்குமே சுதந்திரம் இருக்கிறது. இன்று காலையில் கூட நாங்கள் டீம் மீட்டிங்கில் விவசாயிகள் போராட்டம் குறித்துப்பேசினோம். அதன்பிறகுதான் நாளைய டெஸ்ட் குறித்த வியூகங்கள் பற்றியெல்லாம் பேசினோம்" என்று சொன்னார் விராட் கோலி.

சென்னையில் நாளை காலை முதல் டெஸ்ட் தொடங்கயிருக்கிறது. பார்வையாளர்கள் யாரும் இல்லாமல் இந்தியாவில், சென்னையில் நடக்கும் முதல் கிரிக்கெட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு