Published:Updated:

சுழன்றடித்த ஸ்பின்னர்கள், சுருண்டுபோன வங்கதேசம்... அரையிறுதிக்கான போட்டியில் நீடிக்கும் இந்தியா!

Team India ( BCCI )

230 ரன்கள் குறைவான டார்கெட்தான் என்றாலும் வங்கதேசம் கத்துக்குட்டி அணிதான் என்பதால் இந்திய அணி எப்படியும் வென்றுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதேமாதிரி வங்கதேசத்தை இந்திய ஸ்பின்னர்கள் ஒட்டுமொத்தமாக வாரிச்சுருட்டிவிட்டனர்.

சுழன்றடித்த ஸ்பின்னர்கள், சுருண்டுபோன வங்கதேசம்... அரையிறுதிக்கான போட்டியில் நீடிக்கும் இந்தியா!

230 ரன்கள் குறைவான டார்கெட்தான் என்றாலும் வங்கதேசம் கத்துக்குட்டி அணிதான் என்பதால் இந்திய அணி எப்படியும் வென்றுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதேமாதிரி வங்கதேசத்தை இந்திய ஸ்பின்னர்கள் ஒட்டுமொத்தமாக வாரிச்சுருட்டிவிட்டனர்.

Published:Updated:
Team India ( BCCI )
பெண்கள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் சுமாராக ஆடிய போதும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியை இந்திய அணி வென்றிருக்கிறது. வழக்கம்போல, பேட்டிங்கில் கொஞ்சம் சொதப்பினாலும் சிறப்பாக பந்துவீசி 110 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

ஹாமில்டனில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டிருந்தது. வேகப்பந்து வீச்சாளரான மேக்னா சிங் பென்ச்சில் வைக்கப்பட்டு லெக் ஸ்பின்னரான பூனம் யாதவ் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தார். ஹாமில்டன் மைதானம் ஸ்பின்னர்களுக்கு கொஞ்சம் கூடுதலாக உதவும் என்பதாலும், நேற்று நடைபெற்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் Vs பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பயன்படுத்தப்பட்ட அதே மந்தமான விக்கெட்டே இன்றைக்கும் பயன்படுத்தப்பட்டதாலும் இந்திய அணி கூடுதலாக ஒரு ஸ்பின்னரோடு களமிறங்கியிருந்தது.

Shafali
Shafali
ICC

இந்திய அணியே முதலில் பேட்டிங் செய்திருந்தது. இந்த தொடரில் இதுவரை இந்திய அணிக்கு கிடைத்திராத நல்ல தொடக்கம் இந்த போட்டியில் கிடைத்திருந்தது. இதற்கு முன் இந்த உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக 49 ரன்களை எடுத்ததே இந்திய அணியின் ஓப்பனர்கள் அமைத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக இருந்தது. மேலும், ஆடிய எல்லா போட்டிகளிலுமே பவர்ப்ளேக்குள் விக்கெட்டை விட்டிருந்தனர். ஆனால், இந்த போட்டியில்தான் இந்திய ஓப்பனர்கள் பவர்ப்ளேக்குள் விக்கெட்டே விடாமல் சீராக ஸ்கோரும் செய்தும் அசத்தியிருந்தனர்.

ஸ்மிருதி மந்தனாவும் ஷெஃபாலி வர்மாவும் இணைந்து பவர்ப்ளேயில் மட்டும் 52 ரன்களை எடுத்திருந்தனர். ஒட்டுமொத்தமாக முதல் விக்கெட்டுக்கு 74 ரன்களை எடுத்திருந்தனர்.

தொடக்கத்தில் சில ஓவர்களை நின்று நிதானமாக பார்த்தே ஆடினர். ஸ்மிருதியை டேக்கிள் செய்ய ஆஃப் ஸ்பின்னரான சல்மா கதுன் தொடக்கத்திலிருந்தே வீச வைக்கப்பட்டார். முதலில் இவரிடம் கொஞ்சம் அடக்கி வாசித்த ஸ்மிருதி மந்தனா பிறகு க்ரீஸை விட்டு இறங்கி வந்து கவர்ஸில் தனது ட்ரேட்மார்க் ஷாட்டை பறக்கவிட்டார். அதிலிருந்து இந்திய அணி கொஞ்சம் வேகமெடுத்தது. நஹீதா அக்தர், ஜஹனாரா ஆலம் ஆகியோரின் ஓவர்களில் ஷெஃபாலி பவுண்டரிக்களையும் சிக்சர்களையும் பறக்கவிட்டார். நீண்ட நாட்களுக்கு ஷெஃபாலி ரொம்பவே இலகுவாக பௌலர்களை அதிரடியாக இறங்கியடித்தார்.

Mithali Raj
Mithali Raj
BCCI

ஆனால், இந்த கூட்டணி 15 வது ஓவரிலேயே முறிந்தது. 74 ரன்கள் எடுத்திருந்ததால் இதை நிச்சயமாக நல்ல தொடக்கம் என்றே சொல்லலாம். ஆனால், இதன்பிறகு நிகழ்ந்தது அதிர்ச்சியே.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு விக்கெட்டை மட்டும் தனியாக இழக்கும் பழக்கம் இந்திய அணிக்கு கிடையவே கிடையாது. கொத்து கொத்தாக வீழ்வதே இந்திய பேட்டர்களின் வழக்கம். இந்தத் தொடரில் இதற்கு முன் ஆடிய அத்தனை போட்டிகளிலுமே அதுதான் நிகழ்ந்திருந்தது. இங்கேயும் அதுதான் தொடர்ந்திருந்தது. நஹீதா அக்தர் ஷார்ட் ஃபைன் லெக்கில் ஃபீல்டரை வைத்து லெக் ஸ்டம்ப் லைனில் வீசிய பந்தை மடக்கி அடித்து ஸ்மிருதி மந்தனா கேட்ச் ஆகியிருந்தார். ரித்து மோனி வீசிய அடுத்த ஓவரிலேயே 42 ரன்களில் ஷெஃபாலி வர்மா ஸ்டம்பிங் ஆக, மிதாலி ராஜ் முதல் பந்திலேயே கேட்ச் ப்ராக்டீஸ் கொடுப்பது போல ஒரு ஸ்ட்ரோக் ஆடி அவுட் ஆனார்.

74-0 என்ற வலுவான நிலையிலிருந்து ஒரு மூன்று நிமிடத்திற்குள் 74-3 எனும் சிக்கலான நிலைக்கு இந்தியா வந்து சேர்ந்திருந்தது.

கொஞ்ச நேரத்திலேயே துணை கேப்டனான ஹர்மன்ப்ரீத் கவுரும் 14 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். ரன் அவுட்களுமே இந்திய அணிக்கு பெரிய பிரச்னையாக இருக்கிறது. எல்லா போட்டிகளிலுமே எதோ ஒரு முக்கியமான பேட்டர் கட்டாயமாக ரன் அவுட் ஆகி வேதனை அளிப்பார். மிகப்பெரிய வீழ்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருந்த இந்திய அணியை ஓரளவுக்குக் காப்பாற்றியது யஸ்திகா பாட்டியாவும் ரிச்சா கோஷுமே.

Yasthika
Yasthika
ICC
யஸ்திகா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த போட்டியிலும் மிதாலி ராஜூடன் நல்ல கூட்டணி அமைத்து அரைசதம் அடித்திருந்தார். இந்தப் போட்டியிலும் பொறுமையாக நின்று விக்கெட்டை விடாமல் பார்ட்னர்ஷிப்களை கட்டமைக்க முனைந்தார்.

இவருடன் ரிச்சா கோஷ் கூட்டணி அமைத்து ஆஃப் சைடில் தொடர்ச்சியாக சில பவுண்டரிகளை கட் ஷாட்டாக அடித்து அசத்தினார். ஆனால், தொடர்ச்சியாக அதே ஷாட்டை ஆட முற்பட்டது பிரச்னையானது. நஹீதா அக்தரின் பந்தில் அதே ஷாட்டுக்கு மீண்டும் முயன்று எட்ஜ் ஆகி கேட்ச் ஆனார். 26 ரன்களின் ரிச்சா கோஷ் வெளியேற அரைசதம் அடித்த யஸ்திகா 50 ரன்களிலேயே ரித்து மோனியின் பந்தில் ஸ்மிருதியை போன்றே அவுட் ஆனார்.

கடைசி 5 ஓவர்களில் ஸ்நே ராணாவும் பூஜா வஸ்த்ராக்கரும் கொஞ்சம் அதிரடி காட்டி 45 ரன்களை சேர்த்தனர். இதனால் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 229 ரன்களை எடுத்திருந்தது.

230 ரன்கள் குறைவான டார்கெட்தான் என்றாலும் வங்கதேசம் கத்துக்குட்டி அணிதான் என்பதால் இந்திய அணி எப்படியும் வென்றுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதேமாதிரி வங்கதேசத்தை இந்திய ஸ்பின்னர்கள் தங்களின் சுழலில் ஒட்டுமொத்தமாக வாரிச்சுருட்டிவிட்டனர்.

தொடக்கத்திலிருந்தே வங்கதேச பேட்டர்கள் திணறிக்கொண்டேதான் இருந்தனர். முதல் 5 ஓவர்களில் வெறும் 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்தனர். இதன்பிறகு, இந்திய ஸ்பின்னர்கள் நன்றாகக் காற்றில் தூக்கி ஃப்ளைட் செய்து வாட்டமாக வீச அவற்றில் ஷாட்களை ஆட முயன்று அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து வெளியேறினார்.

ஸ்லிப், ஷார்ட் லெக், சில்லி பாய்ண்ட் என டெஸ்ட் மேட்ச் போல கட்டம் கட்டி இந்திய அணி அதகளம் செய்தது.
ஸ்நே ராணா
ஸ்நே ராணா
ICC

லதா மாண்டலும் கதுனும் மட்டும் கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து 24 மற்றும் 32 ரன்களை அடித்திருந்தனர். ஸ்பின்னர்களுக்கு வீழாத இவர்கள் இருவரையும் பூஜாவும் ஜூலன் கோஸ்வாமியும் வீழ்த்தி வங்கதேசத்தின் சேஸிங்கிற்கு எண்டு கார்டு போட்டனர். ஸ்நே ராணா விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இந்திய அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. அரைசதம் அடித்து வெற்றிக்கு உதவிய யஸ்திகாவிற்கு Player of the match விருது வழங்கப்பட்டது.

ஆடியிருக்கும் 6 போட்டிகளில் 3 போட்டிகளை மட்டுமே வென்றிருந்தாலும் இந்திய அணி இன்னமும் அரையிறுதிக்கான வாய்ப்பில் நீடிக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக 107 ரன்கள், வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக 155 ரன்கள் இப்போது வங்கதேசத்திற்கு எதிராக 110 ரன்கள் எனப் பெரிய ரன் வித்தியாசங்களுடன் வெற்றிகளை பெற்று நல்ல ரன்ரேட்டை வைத்திருப்பது இந்திய அணிக்கு சாதகமான விஷயமாக இருக்கிறது.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக மார்ச் 27-ல் நடக்கும் போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும். அதிலும் வெல்ல வேண்டும்!