Published:Updated:

`அது எப்போதும் எனது ஸ்பெஷல் விக்கெட்தான்!' - `உலகச் சாதனை' அஷ்வின்

அஷ்வின்
அஷ்வின் ( AP )

இந்திய வீரர் அஷ்வின், 66 போட்டிகளில் 350 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்த இலங்கை வீரர் முத்தையா முரளிதரனின் சாதனையை சமன் செய்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர் மயங்க் அகர்வால் இரட்டை சதமடித்து (215) அசத்தினார். மற்றொரு தொடக்க வீரரான ரோஹித் ஷர்மாவும் (176) சதமடித்தார். அடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 431 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணி தரப்பில் டீன் எல்கர் 160 ரன்களும் கேப்டன் டிகாக் 111 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

மயங்க் அகர்வால் - ரோஹித் ஷர்மா
மயங்க் அகர்வால் - ரோஹித் ஷர்மா
BCCI

73 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி, 4வது நாளில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 323 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம், தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த ரோஹித் ஷர்மா, இரண்டாவது இன்னிங்ஸிலும் சதமடித்து (127) அசத்தினார். புஜாரா 81 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து, களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 191 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக டேன் பீய்ட், 56 ரன்கள் எடுத்தார். இந்திய வம்சாவளி வீரரான செனூரன் முத்துசாமி, 49 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

Team India
Team India
BCCI

இந்திய அணி தரப்பில், முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் வீழ்த்திய அஷ்வின், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 350 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை வீரர் முத்தையா முரளிதரனின் சாதனையை சமன்செய்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து பேசிய அஷ்வின், ``ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும். திட்டமிட்டு இதை நீங்கள் செய்ய முடியாது. ஒவ்வொரு போட்டிக்கும் முன்பாகவும் மனதளவிலும் உடலளவிலும் முழுமையாகத் தயாராக வேண்டும் என்று நினைப்பேன். ஒவ்வொரு முறையில் மனதளவில் முழுமையாகத் தயாராகி, அந்த முன்தயாரிப்புடன் ஒவ்வொரு போட்டியிலும் விளையாடுவேன்'' என்றார்.

அஷ்வின்
அஷ்வின்
AP

அதேபோல், டெஸ்ட் போட்டிகளில் மிகவும் ஸ்பெஷலாக உணரும் விக்கெட் எது என்ற கேள்வி அஷ்வினிடம் கேட்கப்பட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலளித்த அஷ்வின், ``நான் வீழ்த்தியவைகளில் நிறைய ஸ்பெஷலான விக்கெட்டுகள் இருக்கின்றன. அதில், சிலவற்றைக் கூறுகிறேன். டெஸ்ட் போட்டிகளில் எனது முதல்விக்கெட்டான டேரன் பிரவோவின் விக்கெட் எப்போதும் ஸ்பெஷலானது. ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை, சிலமுறை ஆட்டமிழக்கச் செய்திருக்கிறேன். இதுவரை நான் எடுத்த 300க்கும் அதிகமான விக்கெட்டுகளில், பெங்களூரு டெஸ்ட் போட்டியின் 2வது நாள் காலையில் டேவிட் வார்னர் விக்கெட்டை எடுத்து ஸ்பெஷலான விக்கெட்டுகளில் ஒன்று. அதேபோல், கடந்த 2015ம் ஆண்டு நாக்பூர் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் டிவிலியர்ஸ் விக்கெட்டும் முக்கியமானது'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு