Published:Updated:

U19T20WorldCup: `அன்று தோனி... இன்று ஷெஃபாலி'; உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்த இந்தியா!

India ( Twitter )

19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு முதல் முறையாக இப்போதுதான் டி20 உலகக்கோப்பைத் தொடர் நடத்தப்பட்டிருக்கிறது. அதில் இந்திய அணி கோப்பையை வென்றிருக்கிறது.

Published:Updated:

U19T20WorldCup: `அன்று தோனி... இன்று ஷெஃபாலி'; உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்த இந்தியா!

19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு முதல் முறையாக இப்போதுதான் டி20 உலகக்கோப்பைத் தொடர் நடத்தப்பட்டிருக்கிறது. அதில் இந்திய அணி கோப்பையை வென்றிருக்கிறது.

India ( Twitter )

தென்னாப்பிரிக்காவில் நடந்து வந்த பெண்களுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்று சரித்திரம் படைத்திருக்கிறது.

Ind Vs Eng
Ind Vs Eng
ICC

19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு முதல் முறையாக இப்போதுதான் டி20 உலகக்கோப்பைத் தொடர் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தொடரின் தொடக்கத்திலிருந்தே சிறப்பாக ஆடி வந்த இந்திய அணி இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டிருந்தது. வலுவான இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி கடும் சவாலை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்பார்த்த நிலையில் இந்திய அணி சுலபமாகவே வென்றிருக்கிறது.

இந்திய அணியின் கேப்டனான ஷெபாலி வர்மாதான் டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இங்கிலாந்து முதல் பேட்டிங். இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து அணியின் பேட்டர்கள் சொற்ப ரன்களில் சுருண்டு போயினர். இங்கிலாந்து அணியே 17.1 ஓவர்களின் 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் சார்பில் பந்து வீசிய 6 வீராங்கனைகளுமே விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். மிகக்குறைந்த இலக்கை நோக்கி சேசிங்கை தொடங்கிய இந்திய அணி 14 ஓவர்களிலேயே இலக்கை எட்டிப்பிடித்தது. கேப்டன் ஷெபாலி 15 ரன்களையும் சவுமியா திவாரி 24 ரன்களையும் திரிஷா 24 ரன்களையும் எடுத்து இந்திய அணியின் வெற்றிகரமான சேஸிங்கிற்கு உதவியிருந்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் உலகக்கோப்பை தொடரையே வென்று புது வரலாறு படைத்திருக்கிறது.

India
India
ICC

2007 இல் தோனி தலைமையிலான இந்திய அணியும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட முதல் டி20 உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகக்கோப்பையை வென்றிருக்கும் இந்திய அணிக்கு பிப்ரவரி 1 ஆம் தேதி குஜராத்தின் மோடி ஸ்டேடியத்தில் பாராட்டு விழா நடத்தப்படுமென பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அறிவித்திருக்கிறார்.