Published:Updated:

IND: கோலியின் துடிப்பான பீல்டிங்; ஷமியின் மிரட்டல் பினிஷ்; வார்ம் அப்பில் வெறித்தனம் காட்டிய இந்தியா

Team India ( BCCI )

கடைசி 5 ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது.போட்டி அப்படியே ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக சென்று கொண்டிருந்தது. ஆனால், டெத் ஓவர்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

IND: கோலியின் துடிப்பான பீல்டிங்; ஷமியின் மிரட்டல் பினிஷ்; வார்ம் அப்பில் வெறித்தனம் காட்டிய இந்தியா

கடைசி 5 ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது.போட்டி அப்படியே ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக சென்று கொண்டிருந்தது. ஆனால், டெத் ஓவர்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

Published:Updated:
Team India ( BCCI )
உலகக்கோப்பையின் சூப்பர் 12 சுற்றை முன்னிட்டு இந்திய அணி இன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் மோதியிருந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி ஸ்கோரை டிஃபண்ட் செய்து 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. கடைசி வரை பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் கோலியின் ஃபீல்டிங்கும் ஷமி வீசிய கடைசி ஓவரும் ஹைலைட்டாக அமைந்திருந்தது.

பிரிஸ்பேனில் நடந்த இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியே டாஸை வென்றிருந்தது. முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தனர். இந்திய அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை சேர்த்தது. இந்திய அணியின் சார்பில் ராகுலும் சூர்யகுமார் யாதவும் அரைசதத்தைக் கடந்திருந்தனர்.

ரோஹித்துடன் ஓப்பனிங் இறங்கிய ராகுல் 33 பந்துகளில் 57 ரன்களை எடுத்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 172.73
Rahul
Rahul
BCCI

மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் ராகுல் மந்தமாக ஆடினார் என்ற விமர்சனம் அவர் மீதிருந்தது. அதைப் போக்கும் வகையில் இந்த போட்டியில் சிறப்பாக ஆடிக்கொடுத்தார். கடைசிக்க்கட்டம் வரை நின்று ஆடி கொடுக்க வேண்டிய தினேஷ் கார்த்திக்கும் ஹர்திக் பாண்ட்யாவும் பெரிதாக சோபிக்காததால் டெத் ஓவர்களில் இந்திய அணியின் ரன்ரேட் கொஞ்சம் சரிந்தது. ஆயினும் சவாலளிக்கும் வகையில் 186 ரன்களை இந்திய அணி எடுத்திருந்தது.

ஆஸ்திரேலிய அணிக்கு 187 ரன்கள் இலக்கு. அந்த அணியின் சார்பில் மிட்செல் மார்ஸூம் ஆரோன் ஃபின்ச்சும் ஓப்பனிங் இறங்கினர். இந்தக் கூட்டணி ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தது. 5.4 வது ஓவரில்தான் புவனேஷ்வர் குமார் மிட்செல் மார்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து ஆரோன் ஃபின்ச் சிறப்பாக ஆடிக்கொண்டே இருந்தார். கடைசி 5 ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது. இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்தனர். ஃபின்ச்சும் மேக்ஸ்வெல்லும் களத்தில் இருந்தனர். போட்டி அப்படியே ஆஸ்திரேலியாவிற்கு சாதகமாக சென்று கொண்டிருந்தது. ஆனால், டெத். ஓவர்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. புவனேஷ்வர் குமார் மேக்ஸ்வெல்லின் விக்கெட்டையும் ஹர்சல் படேல் ஃபின்ச்சின் விக்கெட்டையும் வீழ்த்தினார். விராட் கோலி பயங்கரமாக டைவ் அடித்து ஒரு டைரக்ட் ஹிட்டில் டிம் டேவிட்டை பெவிலியனுக்கு அனுப்பினார். போட்டி இந்தியாவுக்கு சாதனமாகத் தென்படத் தொடங்கிய முதல் புள்ளி அது. இறுதி ஓவரில் ஆஸ்திரேலிய அணிக்கு 11 ரன்கள் தேவை.

இந்த வருடத்தில் ஒரு சர்வதேச டி20 போட்டியில்கூட ஆடியிராத ஷமி கடைசி ஓவரை வீசினார். முதல் இரண்டு பந்துகளில் நான்கு ரன்கள் வந்தது. இப்படி ஓடி ஓடியே ரன்கள் எடுத்துவிடுவார்களோ என நினைக்கையில் கடைசி 4 பந்துகளிலும் விக்கெட்டுகளை வேட்டையாடி வெறித்தனம் காட்டினார் ஷமி.
Kohli & Shami
Kohli & Shami
BCCI

இந்த ஓவரில் பேட் கம்மின்ஸூக்கு லாங் ஆனில் ஒரு அட்டகாசமான கேட்ச்சை ஒற்றை கையில் பிடித்திருந்தார் கோலி. கேட்ச் தவறியிருந்தால் சிக்சராகியிருக்கும். போட்டியே முடிந்திருக்கும். கோலியின் அட்டகாச கேட்ச்சால் ஷமிக்கு மேலும் வாய்ப்பு கிடைத்தது. அடுத்த 3 பந்துகளில் 3 விக்கெட்டுகள்! இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த உலகக்கோப்பையில் டெத் ஓவர் பௌலிங்தான் இந்தியாவிற்கு பெரிய பிரச்னையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல் பயிற்சி போட்டியிலேயே மிரட்சியை கொடுக்கும் வகையில் கடைசி ஓவரை வீசி ஷமி ஒரு புது நம்பிக்கையை அணிக்கு கொடுத்திருக்கிறார்.