
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக் கோப்பை போட்டியின் live update
ஸ்டார் பெர்ஃபாமர்?
இந்தியா வெற்றி
6 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி, உலகக் கோப்பையை வெற்றியோடு தொடங்கியது இந்தியா. சதம் அடித்து அசத்திய ரோஹித் 122 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தோனி அவுட்
34 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மோரிஸ் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார் தோனி. இந்தியா வெற்றி பெற இன்னும் 15 ரன்கள் தேவை
ரேட்டிங் என்ன?
ஹிட்மேன் சதம்
ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய 23-வது சதத்தை நிறைவு செய்தார் ரோஹித் ஷர்மா
ரன்ரேட் முக்கியம் அமைச்சரே!
மிடில் ஓவர்களில் முரட்டுத் தனமாக டாட் பால்கள் வைத்துக்கொண்டிருக்கிறது இந்திய அணி. 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டதால் நிதானமாக விளையாட வேண்டிய அவசியம் இருக்கிறது. அதேசமயம், இதுபோன்ற ரவுண்ட் ராபின் தொடர்களில் ரன்ரேட்டும் முக்கியமல்லவா? எப்படியெல்லாம் ரன்ரேட்டை பூஸ்ட் செய்யவேண்டுமோ, அதைச் செய்துகொள்வது நல்லது. அந்த இடத்தில் இந்திய அணி கொஞ்சம் சறுக்குகிறதோ என்று தோன்றுகிறது. நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற அணிகள் +5 க்கும் மேலாக ரன்ரேட் வைத்திருக்கின்றன. நல்ல ரன்ரேட் முக்கியம் பாய்ஸ்.
இலக்கை சேஸ் செய்யுமா இந்தியா? ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்...
இந்தியா எப்போது சேஸ் செய்யும்?
சில தினங்களுக்கு முன்பு கொடுத்த பேட்டியில் கோலியைப் பற்றிப் பேசினார் ரபாடா. "சில நேரங்களில் அவர் மற்றவர்களைச் சீண்டுகிறார். ஆனால், அவரை யாராவது சீண்டினால் அதைப் பொறுத்துக்கொள்ள அவரால் முடியவில்லை. அவர் மிகச் சிறந்த வீரர்தான். ஆனால், சில் இடங்களில் மெச்சூரிட்டி இல்லாமல் நடந்துகொள்கிறார்" என்று சாடியிருந்தார் ரபாடா. அதைப்பற்றி நேற்று செய்தியாளர் சந்திப்பில் கோலியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய விராட், "அதை இங்கு பேசவேண்டாம் என்று நினைக்கிறேன். நாங்கள் நிறைய போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியிருக்கிறோம். ஒருவரை ஒருவர் முகம் பார்த்து இதைப் பேசிக்கொள்வது சரியானது என்று நினைக்கிறேன்" என்று கூறினார். இந்நிலையில், இன்று இருவருக்குமான போட்டி எப்படி இருக்குமென்று பெரும் பரப்பாக இருந்தது. கோலி களத்தில் இறங்கியபோது, பௌலிங் எண்டில் இருந்தது ரபாடா. முதல் பந்தே வெறித்தனமான பௌன்சரால் கோலியை வரவேற்றார். நல்லவேளையாக கீழே குனிந்து தப்பித்துக்கொண்டார் கோலி. இருவருக்குமான போட்டி முதல் பந்தில் இருந்தே தொடங்கிவிட்டது
ரோஹித்துக்குக் காத்திருக்கும் சாதனை. இன்று ரோஹித் அடிக்கும் முதல் பௌண்டரி, ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் அடிக்கப்போகும் 700-வது பௌண்டரியாக இருக்கும். அதை யார் ஓவரில் செய்யப்போகிறார் ஹிட்மேன்?!


எல்லா அணிகளின் ஜெர்சியும் இந்த முறை வித்தியாசமாகவே இருக்கிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பழைய ரெட்ரோ டைப் ஜெர்சிகளைத் தேர்வு செய்துள்ளன. இலங்கையின் ஜெர்சியில் பல வண்ணங்கள் நிறைந்திருக்கின்றன. இந்திய அணியின் ஜெர்சி, முன்புறம் ஒரு நிறமாகவும், பின்புறம் ஒரு நிறமாகவும் இருக்கிறது. அனைத்து அணிகளின் உடைகளைப் பற்றியும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமென்ட் செய்யுங்கள்.
தென்னாப்பிரிக்கா 200
45-வது ஓவரில் 200 ரன்களைக் கடந்தது தென்னாப்பிரிக்கா. மோரிஸ் 33*
#BANvNZ
நியூசிலாந்து டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு செய்தது!
158-7சஹால் தனது நான்காவது விக்கெட்டாக ஃபெலுக்வாயோவை வெளியேற்றினார்
அடுத்த விக்கெட்!
31 ரன்கள் எடுத்திருந்த மில்லர் சஹால் பந்து வீச்சில் வெளியேறினார்.
சஹாலுக்கு இது மூன்றாவது விக்கெட்
தென்னாப்பிரிக்கா 135-6
89-5குல்தீப் பந்துவீச்சில் அவுட்டானார் டுமினி!
காத்து நம்ம பக்கம்தான் வீசுது!

ரோஸ் பௌல் மைதானத்தில் இந்திய ரசிகர்கள்
டி காக் எப்படி அவுட் ஆனார்னா..!
தென்னாப்பிரிக்கா எத்தனை ரன்கள் எடுக்கும்?
குல்தீப் Vs தென்னாப்பிரிக்கா

போட்டிகள் : 7
விக்கெட் : 17
சராசரி : 13.88
செம ஸ்டேட்ல..!
கோலியின் சூப்பர் மூவ்!

ஆறாவது ஓவரின் முதல் பந்தை பும்ரா வீசியபோது இரண்டு ஸ்லிப் ஃபீல்டர்கள்தான் இருந்தார்கள். மூன்றாவது பந்தின்போது, ஸ்லிப்பில் இன்னொரு ஃபீல்டரை நிற்கவைத்தார். அவரே மூன்றாவது ஸ்லிப்பில் நின்றார். சரியாக அதே இடத்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டி காக். கோலி சூப்பர் கேப்டன்சி!சௌரவ் கங்குலி
டி காக் VS கோலி
2015 உலகக் கோப்பை : டி காக் - கேட்ச் கோலி
2019 உலகக் கோப்பை : டி காக் - கேட்ச் கோலி

போக்ளே ட்வீட்ஸ்!
உலகக் கோப்பையில் இதற்கு முன்!

பூம் பூம் பும்ராபும்ராவின் வேகத்தில் வெளியேறினார் டி காக். தென்னாப்பிரிக்கா 24-2

விக்கெட்
அம்லாவை வெளியேற்றினார் பும்ரா! தென்னாப்பிரிக்கா 11-1
யாருக்கு விக்கெட்?
போட்டி தொடங்கியது
முதல் பந்திலேயே ரன் அடித்து ஆட்டத்தைத் தொடங்கினார் அம்லா
இந்தியா - தென்னாப்பிரிக்கா வரலாறு என்ன சொல்லுதுனா?

இந்தியாவுக்கு எதிராக டி காக்
ஆஇந்தியானு வந்துட்டாலே டி காக் வேற லெவல்ல ஆடுவாரு. அவர் ரெக்கார்டும் அதைத்தான் சொல்லுது. அவர் இன்னைக்கு எப்படி பெர்ஃபார்ம் பண்ணுவார். நீங்க என்ன நினைக்கிறீங்க. கீழே கமென்ட் பண்ணுங்க..
தென்னாப்பிரிக்க அணியில் மாற்றம்
தென்னாப்பிரிக்க அணியில் மார்க்ரமுக்குப் பதிலாக அம்லா, எங்கிடிக்குப் பதிலாக ஷம்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
டாஸ்
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது
இந்திய அணி : ரோஹித், தவான், கோலி, ராகுல், தோனி, ஜாதவ், ஹர்திக், புவி, பும்ரா, குல்தீப், சஹால்