Published:Updated:

ENG Vs IND : 78 ரன்களில் இந்தியா ஆல் அவுட்... இங்கிலாந்து ஆதிக்கம்! LIVE UPDATES

ஜேம்ஸ் ஆண்டர்சன் - கோலி
ஜேம்ஸ் ஆண்டர்சன் - கோலி ( Jon Super )

இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் தொடங்கியுள்ளது. முதல் நாளின் லைவ் அப்டேட்ஸ் இங்கே!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

25 Aug 2021 7 PM

இந்தியா 9 விகெட்களை இழந்துவிட்டது. சிராஜ் மற்றும் இஷாந்த் களத்தில் உள்ளனர். ஆண்டர்சன் 3 விக்கெட்கள் வீழ்த்த, ராபின்சன், ஓவர்டன், சாம் கரண் மூவரும் தலா 2 விக்கெட்களை வீழ்த்தியிருக்கின்றனர்.

25 Aug 2021 7 PM

முதல் இன்னிங்ஸில் 67 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்து பரிதாப நிலையில் இருக்கிறது இந்தியா. ரோஹித் ஷர்மா, ரஹானே தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சிங்கிள் டிஜிட்டில் ஆட்டம் இழந்திருக்கின்றனர்.

25 Aug 2021 5 PM

''செட் ஆவதற்கு முன்பாகவே ஷாட் ஆடக்கூடாது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பொறுமைதான் முக்கியம்'' என கோலி அவுட் குறித்து ட்வீட் செய்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் வினோத் காம்ப்ளி!

25 Aug 2021 5 PM

ரஹானே அவுட்!

ரஹானே அவுட் ஆக முதல் செஷன் முடிவுக்கு வந்திருக்கிறது. 25.5 ஓவர்களில் 56 ரன்கள் அடித்து 4 விக்கெட்களை இழந்திருக்கிறது இந்தியா. ஓலி ராபின்சனின் அவுட்சைட் டெலிவரியைத் தொட்டு பட்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ரஹானே. இதுவரை அவுட் ஆன 4 பேட்ஸ்மேன்களுமே கீப்பர் பட்லரிடம் கேட்ச் கொடுத்தே ஆட்டம் இழந்திருக்கின்றனர்.

25 Aug 2021 5 PM

50 ரன்களைக் கடந்த இந்தியா!

முதல் நாளின் முதல் இன்னிங்ஸில் 50 ரன்களைக் கடந்திருக்கிறது இந்தியா. ரஹானே அடித்த பவுண்டரி மூலம் 25 ஓவர்களில் 53 ரன்களைக் கடந்திருக்கிறது. இன்னொருபக்கம் ரோஹித் ஷர்மா தொடர்ந்து நிதானமான டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிவருகிறார்.

25 Aug 2021 5 PM

இந்தியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது தவறு என விமர்சித்திருக்கிறார் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். மூன்றாம் நாளுக்கு மேல் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த பிட்ச் ஒத்துழைக்காது என குறிப்பிட்டுள்ளார் பிராட்.

25 Aug 2021 4 PM

ரோஹித் ஷர்மா நிதானம்

இந்தியா மூன்று விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில் ரோஹித் ஷர்மா பொறுப்பான ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார். இதுவரை 56 பந்துகளை சந்தித்திருக்கும் ரோஹித் 9 ரன்களில் ஆட்டம் இழக்காமல் ஆடிக்கொண்டிருக்கிறார். 17 ஓவர்களில் இந்தியா 32 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருக்கிறது. இங்கிலாந்து தற்போது ஸ்பின் அட்டாக்கைத் தொடங்கியிருக்கிறது. மொயின் அலி பந்து வீசுகிறார்.

25 Aug 2021 4 PM

விராட் கோலி அவுட்

கேப்டன் விராட் கோலியின் மோசமான ஆட்டம் தொடர்கிறது. அவுட்சைடில் வந்த ஜேம்ஸ் ஆண்ட்ர்சனின் பந்தை டிரைவ் ஆட முயற்சித்து விக்கெட்டை இழந்தார் கோலி. 7 ரன்களில் கோலி பெவிலியன் திரும்ப 21 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தள்ளாடுகிறது இந்தியா.

25 Aug 2021 4 PM

புஜாரா அவுட்!

முதல் 10 ஓவர்களுக்குள்ளாகவே இரண்டு விக்கெட்களை இழந்திருக்கிறது இந்தியா. புஜாராவை 1 ரன்னில் ஆட்டம் இழக்கவைத்து பெவிலியன் அனுப்பினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். கேப்டன் கோலியும், ரோஹித் ஷர்மாவும் களத்தில் உள்ளனர்.

25 Aug 2021 3 PM

ஜேம்ஸ் ஆண்டர்சனின் முதல் விக்கெட்.

முதல் ஓவரிலேயே கே.எல்.ராகுலை டக் அவுட் ஆக்கி விக்கெட் கணக்கைத் தொடங்கியிருக்கிறார் ஜேம்ஸ் ஆண்டர்சன். அவுட் ஸ்விங்கரில் பேட்டைத் தொட்டு கீப்பரிடம் கேட்ச் ஆனார் கே.எல்.ராகுல்.

25 Aug 2021 3 PM

இங்கிலாந்து ப்ளேயிங் லெவன்

1.ஜோ ரூட் 2. ரோரி பர்ன்ஸ் 3. ஹஸீப் ஹமீத் 4. டேவிட் மலான் 5. ஜானி பேர்ஸ்டோ 6. ஜாஸ் பட்லர் 7. மொயின் அலி 8. சாம் கரண் 9. ஓலி ராபின்சன் 10. க்ரெய்க் ஓவர்டன் 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்

25 Aug 2021 3 PM

இந்தியாவின் ப்ளேயிங் லெவன்

1. விராட் கோலி 2.ரோஹித் ஷர்மா 3.கே.எல்.ராகுல் 4. புஜாரா 5. ரஹானே 6. ரிஷப் பன்ட் 7. ஜடேஜா 8. முகமது ஷமி 9. இஷாந்த் ஷர்மா 10. முகமது சிராஜ் 11. ஜஸ்பிரித் பும்ரா

25 Aug 2021 3 PM

லீட்ஸ் டெஸ்ட்டில் டாஸ் வென்றுள்ள இந்திய கேப்டன் விராட் கோலி முதல் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். லார்ட்ஸ் டெஸ்ட்டில் விளையாடிய அதே அணிதான் லீட்ஸ் டெஸ்ட்டிலும் விளையாடும் என கோலி அறிவித்திருப்பதால் ப்ளேயிங் லெவனில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரவிச்சந்திரன் அஷ்வின் இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு