Published:Updated:

ENG Vs IND: ரூட் அரைசதம், பெர்ஸ்டோ அவுட்; தேநீர் இடைவெளியில் இங்கிலாந்து 138-4!

ENG v IND
ENG v IND ( https://twitter.com/BCCI )

இந்தியா - இங்கிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் நாட்டிங்ஹாமில் தொடங்கியிருக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கைத் தேர்வு செய்திருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

04 Aug 2021 8 PM

பேர்ஸ்டோ அவுட். கட்டுக்கோப்பாக பந்து வீசிக் கொண்டிருந்த ஷமி தனது இரண்டாவது விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார். 108 பந்துகளைச் சந்தித்து 29 ரன்களை எடுத்திருந்த பேர்ஸ்டோ எல்பிடபுள்யூ முறையில் வெளியேற்றப்பட்டார். ரூட் 52 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.

முதல் நாளின் இரண்டு செஷன்கள் முடிந்த நிலையில், தேநீர் இடைவெளியில் இங்கிலாந்து 138-4 என்ற நிலையில் இருக்கிறது.
04 Aug 2021 7 PM

ஓப்பனர் பர்ன்ஸ் டக் அவுட்டாகி வெளியேற டாம் சிபிலியும், ஜாக் க்ராலியும் கிடைத்த துவக்கத்தை பெரிய இன்னிங்க்ஸாக மாற்றத் தவறியாதால் மூன்று விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. தற்போது ஜோ ரூட்டின் கிளாஸான ஆட்டத்தால் 100 ரன்களைக் கடந்திருக்கிறது.

42 ஓவர்கள் முடிவில் 107-3 என்ற நிலையில் இருக்கிறது இங்கிலாந்து. ஜோ ரூட் 41 ரன்களுடனும், பேர்ஸ்டோ 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
04 Aug 2021 6 PM

ஓப்பனர் டாம் சிப்லியும் அவுட். தொடர்ந்து சிறப்பான லைன் அண்டு லெந்தில் இங்கிலாந்தை மிரட்டி வந்த ஷமி, டாம் சிப்லிக்கு நெருக்கடி ஏற்படுத்தி அவரின் விக்கெட்டை வீழ்த்தியிருக்கிறார். ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டான சிப்லி, 70 பந்துகளைச் சந்தித்து 18 ரன்கள் எடுத்திருந்தார்.

தற்போது ஜோ ரூட் 18 ரன்களுடனும், பேர்ஸ்டோ 6 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர். 31 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து 77-3 என்ற நிலையில் இருக்கிறது.
04 Aug 2021 5 PM

உணவு இடைவேளை... 61 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருக்கிறது. ஜோ ரூட் 12 ரன்களுடனும், சிப்லி 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

04 Aug 2021 5 PM

க்ராலி அவுட். இங்கிலாந்து தனது இரண்டாவது விக்கெட்டை இழந்தது. 27 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த ஸாக் க்ராலி சிராஜ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இங்கிலாந்து 42 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்திருக்கிறது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் களமிறங்கியிருக்கிறார்.

04 Aug 2021 3 PM

ரோரி பர்ன்ஸ் டக் அவுட். பும்ராவுக்கு முதல் விக்கெட். ஸ்கோரைத் தொடங்காமலேயே முதல் விக்கெட்டை இழந்தது இங்கிலாந்து!

04 Aug 2021 3 PM

இந்தியா ப்ளேயிங் லெவன்

1. ரோஹித் ஷர்மா 2. கேஎல் ராகுல் 3. செத்தேஷ்வர் புஜாரா 4. விராட் கோலி 5. அஜிங்கியா ரஹானே 6. ரிஷப் பன்ட் 7. ரவீந்திர ஜடேஜா 8. ஷர்துல் தாக்கூர் 9. ஜஸ்பிரித் பும்ரா 10. முகமது ஷமி 11. முகமது சிராஜ்

04 Aug 2021 3 PM

நாட்டிங்ஹாம் பிட்ச் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஸ்பெஷல் ஸ்பின்னர்கள் இல்லாமல் களமிறங்குகிறது இங்கிலாந்து. அதேப்போல் இந்திய அணியிலும் ரவிச்சந்திரன் அஷ்வின் இல்லை. ரவீந்தர ஜடேஜா இடம்பெற்றிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு