Published:Updated:

75,000 டிக்கெட்ஸ், கேட்டி இசை... உலக சாதனைப் படைக்குமா இந்தியா வெர்ஸஸ் ஆஸ்திரேலியா கிரிக்கெட்!

Women's T20 Final ( India vs Australia )

மார்ச் 8 உலக மகளிர் தினமும் என்பதால் இந்த இறுதிப்போட்டியை வரலாற்று நிகழ்வாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன ஐசிசி மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம்.

75,000 டிக்கெட்ஸ், கேட்டி இசை... உலக சாதனைப் படைக்குமா இந்தியா வெர்ஸஸ் ஆஸ்திரேலியா கிரிக்கெட்!

மார்ச் 8 உலக மகளிர் தினமும் என்பதால் இந்த இறுதிப்போட்டியை வரலாற்று நிகழ்வாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன ஐசிசி மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம்.

Published:Updated:
Women's T20 Final ( India vs Australia )

ஏழாவது பெண்கள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மெல்பர்ன் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. மார்ச் 8 உலக மகளிர் தினமும் என்பதால் இந்த இறுதிப்போட்டியை வரலாற்று நிகழ்வாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன ஐசிசி மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம்.

Team india
Team india
Women's T20 Final

உலகக்கோப்பை போட்டி அட்டவணை வெளியானதிலிருந்தே மார்ச் 8 நடைபெற இருக்கும் இந்த இறுதிப்போட்டிக்கு மெல்பர்ன் மைதானத்தை ரசிகர்கள் கூட்டத்தால் நிரப்பிவிட வேண்டும் என முடிவெடுத்து `Fill the MCG' என்ற பெயரில் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கு முன்னர் பெண்கள் விளையாட்டு போட்டிகளில் அதிக பார்வையாளர்களுக்கு மத்தியில் நடைபெற்ற போட்டியாக 1999 ஃபிபா பெண்கள் கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டியே உள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே நடைபெற்ற இந்தப் போட்டியைக் காண 90,185 பேர் கலிபோர்னியாவின் ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் கூடியிருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இன்றைய தேதி வரைக்கும் பெண்கள் விளையாட்டுப் போட்டி சம்பந்தமாக கூடிய அதிகபட்ச ரசிகர் கூட்டம் இதுதான். இந்த சாதனையை முறியடித்து உலகில் அதிக ரசிகர்கள் கூடிய பெண்கள் விளையாட்டுப் போட்டியாக இந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியை மாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில்தான் `Fill the MCG' இயக்கம் தொடங்கப்பட்டது.

இதை நிறைவேற்றிட கிரிக்கெட்டுடன் சேர்த்து பிரபல அமெரிக்க பாடகர் கேட்டி பெர்ரியின் இசை விருந்தையும் ஏற்பாடு செய்துள்ளனர். போட்டிக்கு முன்னும் பின்னும் தன்னுடைய பிரபலமான ரோர், ஃபயர் வொர்க் போன்ற பாடல்களைப் பாடி ரசிகர்களை மகிழ்விக்கவிருக்கிறார் கேட்டி. கருவுற்றதற்குப் பிறகு, கேட்டி பங்கேற்கும் முதல் இசை நிகழ்ச்சி இதுதான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இறுதிப்போட்டிக்காகப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய ஆஸி வீரர்களை மெல்பர்ன் கிரவுண்டில் சந்தித்த கேட்டி பெர்ரி தனது வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டு கொஞ்ச நேரம் ஜாலியாகப் பேசிக்கொண்டிருக்க நேற்றே திருவிழா கலையை அடைந்தது மெல்பர்ன் மைதானம்.

Team Australia
Team Australia
Women's T20 Final

ஒரு லட்சத்துக்கு மேல் இருக்கைகள் கொண்ட மெல்பர்ன் மைதானத்தில் கடைசியாக 2015-ம் ஆண்டு நடைபெற்ற ஆண்கள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியை காண 93,013 பேர் கூடியிருந்தனர். இந்நிலையில் தற்போது பெண்கள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு ஒரு வாரம் முன்பாகவே 50,000 டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்த நிலையில் தற்போது வரை 75,000 க்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன. இன்னும் டிக்கெட் விற்பனை வேகமாக நடைபெற்று வருவதால் மேட்ச் தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து சாதனைகளையும் முறியடித்து வரலாற்று போட்டியாக இந்த இறுதிப்போட்டி மாறிவிடும் என நம்பப்படுகிறது.

ச்சும்மா அதிரப்போகுது எம்சிஜி !

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism