Published:Updated:

இது இந்தியாவின் எழுச்சி... ஆஸ்திரேலியா கங்காருக்களை வெளுத்து விரட்டிய கத்துக்குட்டிகள்! #AUSvIND

#AUSvIND
#AUSvIND ( twitter.com/BCCI )

32 ஆண்டுகளுக்குப்பிறகு ஆஸ்திரேலியாவைத் தவிர்த்து பிரிஸ்பேனில் வெற்றிபெற்ற முதல் அணி என்பது உள்ளிட்ட பல வரலாற்று பெருமைகளைப் பெற்றிருக்கிறது இந்தியா.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்திய கிரிக்கெட்டின் பொன்னாள் இந்நாள். ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து இரண்டாவது முறையாக டெஸ்ட் தொடரை வென்றிருப்பது, முதல்முறையாக பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டியை வென்றிருப்பது, 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவைத் தவிர்த்து பிரிஸ்பேனில் வெற்றிபெற்ற முதல் அணி என்பது உள்ளிட்ட பல வரலாற்று பெருமைகளைப் பெற்றிருக்கிறது இந்தியா.
#AUSvIND
#AUSvIND
twitter.com/BCCI

பிரிஸ்பேன் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பாக காயத்தால் கலங்கி நின்றது இந்திய அணி. நடராஜன், வாஷிங்டன் சுந்தர் என இரண்டு அறிமுக வீரர்கள், ஒரே டெஸ்ட்டில் விளையாடிய அனுபவம்கொண்ட ஷர்துல் தாக்கூர், 2 டெஸ்ட் ஆடிய முகமது சிராஜ் என இதுதான் இந்திய பெளலர்களின் பயோடேட்டா. அடிலெய்ட் தோல்வியைப்போல இந்தியா ஓர் அவமானகரமானத் தோல்வியைச் சந்திக்கப்போகிறது என்கிற அத்தனை ஆருடங்களையும் இந்த இளம் பெளலிங்படை அடித்து நொறுக்கிவிட்டது. இரண்டு இன்னிங்ஸ்களிலுமே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை ஆல்அவுட் செய்தார்கள் இந்திய பெளலர்கள். முதல் இன்னிங்ஸில் நடராஜன், தாக்கூர், சுந்தர் என மூன்று பேருமே மூன்று விக்கெட்கள் எடுக்க, சிராஜ் ஒரு விக்கெட் எடுத்து ஆஸ்திரேலியாவின் கணக்கை 369 ரன்களில் முடித்துவைத்தனர்.

கலக்கிய பெளலர்கள்... இனி இந்தியாவின் வெற்றி பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் கையில்! #AUSvIND

இந்தியா முதல் இன்னிங்ஸைத் தொடங்கியதுமே கில் காலியாக, ரோஹித் ஷர்மா ஓரளவுக்குத் தாக்குப்பிடித்தார். ஆனால், ரஹானே, புஜாரா என டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்டுகள் சொதப்ப, காப்பாற்றியது மீண்டும் கத்துக்குட்டிகள்தான். வாஷிங்டன் சுந்தரும் - ஷர்துல் தாக்கூரும் 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் போட இந்தியா 336 ரன்களில் இன்னிங்ஸை முடித்தது.

#AUSvIND
#AUSvIND
twitter.com/BCCI

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அச்சுறுத்தினாலும் மீண்டும் இந்திய பெளலர்கள் கங்காருக்களுக்குப் பயம் கூட்டினார்கள். முகமது சிராஜ் ஃபைபர் எடுக்க, 294 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

டிராவா, வெற்றியா, தோல்வியா என்கிற நிலையில் கடைசி நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஷுப்மான் கில் 91 ரன்கள், ரிஷப் பன்ட் 89, வாஷிங்டன் சுந்தர் மிக முக்கியமான நேரத்தில் 22 ரன்கள் அடிக்க இந்தியா பிரிஸ்பேனில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியிருக்கிறது இந்தியா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு