சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி, அரையிறுதியுடன் வெளியேறியது. பேட்ஸ்மேன்கள் செயல்பாடு மோசமாக இருந்ததாலேயே இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற விமர்சனம் எழுந்தது. குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் பேட்ஸ்மேன் செயல்பாடு கேள்விக்குள்ளானது. அதேபோல், கேப்டன் விராட் கோலி மற்றும் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது.

அதேபோல், உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு புதிதாக விண்ணங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படும்வரை இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்ளிட்டோரின் பதவிக்காலம் 45 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ரவிசாஸ்திரி மீண்டும் விண்ணப்பித்திருக்கிறார். அதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளருமான ராபின் சிங்கும் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருக்கிறார்.
நாம் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குத் தயாராகும் நிலையில், ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவது அணிக்கு நன்மை பயக்கும்ராபின்சிங்
இந்தநிலையில், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள போட்டியில் இந்திய அணியின் பயிற்சியாளர் மாற்றப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். அவர் பேசுகையில், `இந்திய அணி, தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் கீழ் அடுத்தடுத்த இரண்டு உலகக் கோப்பை தொடர்கள் மற்றும் கடந்த டி20 உலகக் கோப்பை தொடரிலும் அரையிறுதிப் போட்டியோடு வெளியேறியிருக்கிறது. எனவே, நாம் 2023ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குத் தயாராகும் நிலையில், ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவது அணிக்கு நன்மை பயக்கும்'' என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி குறித்து பேசிய ராபின்சிங், ``பந்து நல்ல ஸ்விங் ஆகும்நிலையில், நாம் ரோஹித்தின் விக்கெட்டைத் தொடக்கத்திலேயே இழந்துவிட்டோம். அந்த இடத்தில் நான் இருந்திருந்தால், விராட் கோலியை 4வது வீரராகக் களமிறக்க ஆலோசனை வழங்கியிருப்பேன். அந்தப் போட்டிக்கு நான் மயங்க் அகர்வாலை மற்றொரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாகத் தேர்வு செய்து, அவரை 3வது வீரராகக் களமிறக்கியிருப்பேன்.

தோனி 5வது வீரராகக் களமிறக்கப்பட்டிருக்க வேண்டும். இதனால், கோலியும் தோனியும் ஒன்றாக பேட் செய்திருப்பார்கள். அதன்பின்னர், பாண்டியா, ரிஷாப் பன்ட் மற்றும் ஜடேஜா என 3 ஹிட்டர்கள் நம்மிடம் இருந்தார்கள். இந்தவரிசையில் அவர்களைக் களமிறக்கியிருக்க வேண்டும்'' என்றார்.
நம்பர் 4 பேட்ஸ்மேன் குறித்து பேசிய அவர், ``உலகக் கோப்பை தொடருக்கென நம்பர் 4 வீரரை நாம் வளர்த்தெடுத்திருக்க வேண்டும். என்னுடைய அணியில் ரஹானே மற்றும் ராயுடு என இருவருமே இருந்திருப்பார்கள்'' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணி சமீபத்திய உலகக் கோப்பையில் அரையிறுதியில் வெளியேறியது. அதேபோல், கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களின்போது இந்திய அணியின் மேலாளராக ரவிசாஸ்திரி இருந்தது குறிப்பிடத்தக்கது.