Published:Updated:

IND v SA: சாம்சனின் போராட்டத்தை வீணாக்கிய டாப் ஆர்டர் பேட்டர்கள் - இந்திய அணி வீழ்ந்தது எப்படி?

Samson - Shreyas ( ICC )

ஒரு மோசமான தொடக்கத்திற்குப் பிறகும் இந்திய அணி போட்டியை நெருக்கமாகக் கொண்டு சென்றது. காரணம், ஸ்ரேயாஸ் ஐயரும் சாம்சனும் ஆடிய துடிப்பான ஆட்டமே.

IND v SA: சாம்சனின் போராட்டத்தை வீணாக்கிய டாப் ஆர்டர் பேட்டர்கள் - இந்திய அணி வீழ்ந்தது எப்படி?

ஒரு மோசமான தொடக்கத்திற்குப் பிறகும் இந்திய அணி போட்டியை நெருக்கமாகக் கொண்டு சென்றது. காரணம், ஸ்ரேயாஸ் ஐயரும் சாம்சனும் ஆடிய துடிப்பான ஆட்டமே.

Published:Updated:
Samson - Shreyas ( ICC )

டி20 தொடர் முடிந்த கையோடு தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஓடிஐ தொடரிலும் இந்திய அணி களமிறங்கியிருக்கிறது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் ஓடிஐ போட்டி நேற்று நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியில் கடைசி வரை வெற்றிக்காகப் போராடிய இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது. போட்டியில் என்ன நடந்தது? இந்திய அணியின் தோல்விக்கான காரணம் என்ன?
Bavuma - Dhawan
Bavuma - Dhawan
ICC

லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக 40 ஓவர் ஆட்டமாகக் குறைக்கப்பட்டது. டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டனான தவான் முதலில் பந்துவீசப்போவதாக அறிவித்தார்.

இதன்படி, பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி 40 ஓவர்களில் 249 ரன்களைச் சேர்த்தது. சீரான வேகத்தில் தொடங்கிய டீகாக் - மலான் கூட்டணி பவர்ப்ளேயில் ஓரளவுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தது. இக்கட்டான சூழலில் எப்போதும் ஆபத்பாந்தவனாக உதவும் ஷர்துல் தாக்கூரே இந்தக் கூட்டணியை உடைத்தார். மலானை 22 ரன்களில் வீழ்த்தியவர் பவுமாவை 8 ரன்களில் வீழ்த்தினார். இந்திய அணிக்கு ஒரு நல்ல திருப்புமுனையை ஷர்துல் ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால், அதை இந்திய அணி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. மில்லரும் க்ளாசனும் கூட்டணி சேர்ந்து பெரிய பார்ட்னர்ஷிப்பை உருவாக்கத் தொடங்கினர்.

Miller
Miller
ICC
ஸ்பின்னர்களை க்ளாசன் லாகவமாக ஆட, கடைசிக்கட்டத்தில் மில்லர் அதிரடியாக ஆடி தென்னாப்பிரிக்க அணியை சவாலளிக்கும் வகையில் 249 ரன்களை எட்ட வைத்தார்.

இங்கேயும் கடைசி 5 ஓவர்கள் இந்திய அணிக்கு பிரச்னையாகவே அமைந்தன. டெத் ஓவர்களில் ஏறக்குறைய ஓவருக்கு 11 ரன்களுக்கு மேல் கொடுத்திருந்தனர்.

இந்திய அணிக்கு டார்கெட் 250. தவான், கில், ருத்துராஜ், இஷன் கிஷன் என நான்கு நல்ல ஓப்பனர்கள் இருந்தும் இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவே இல்லை. பந்து கொஞ்சம் மூவ் ஆனதில் இந்த பேட்டர்கள் கொஞ்சம் கடுமையாகவே திணறினர். ஸ்பின்னர்களையும் திறம்பட எதிர்கொள்ளவே இல்லை. டெஸ்ட் போட்டியின் முதல் செஷன் ஆட்டத்தைப் போன்ற உணர்வே இவர்கள் ஆடிய போது ஏற்பட்டது. இப்படி ஒரு மோசமான தொடக்கத்திற்கு பிறகும் இந்திய அணி போட்டியை நெருக்கமாகக் கொண்டு சென்றது. காரணம், ஸ்ரேயாஸ் ஐயரும் சாம்சனும் ஆடிய துடிப்பான ஆட்டமே. இந்திய அணிக்கு ஆரம்பத்தில் கிடைக்காத ஒரு மொமன்டமை ஸ்ரேயாஸ் ஐயர் வந்தபிறகு ஏற்படுத்திக் கொடுத்தார்.

க்ரீஸூக்குள் வந்ததிலிருந்தே அதிரடியாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 37 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். ஸ்ட்ரைக் ரேட் 135. 16.4 வது ஓவரில் உள்ளே வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 26.4 வது ஓவரில் அவுட் ஆனார். இந்த இடைப்பட்ட ஓவர்களில் மட்டும் இந்திய அணி 70 ரன்களைச் சேர்த்திருந்தது.
Shreyas - Samson
Shreyas - Samson
ICC

ஸ்ரேயாஸ் ஐயர் கொடுத்த இந்த மொமன்டமை சாம்சன் அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்றார். சாம்சனோடு ஷர்துல் தாக்கூரும் இணைந்து சிறப்பாகவே ஆடினார். கடைசி 5 ஓவர்களில் 73 ரன்கள் தேவை என்ற நிலையில் சாம்சன் - ஷர்துல் இருவருமே அதிரடி காட்டினர். ரபாடாவின் ஒரே ஓவரில் ஷர்துல் 3 பவுண்டரிகளை அடித்து வேகம் கூட்டினார். இங்கிடியின் ஒரே ஓவரில் ஷர்துலும் குல்தீப்பும் அவுட் ஆக, கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டன.

ஷம்சி வீசிய கடைசி ஓவரில் சாம்சனும் பேட்டை வெற்றிக்காகவே சுழற்றினார். ஆனால், 3 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் மட்டுமே கிடைக்க 20 ரன்களை மட்டுமே சாம்சனால் திரட்ட முடிந்தது. 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

மந்தமாக ஸ்கோர் செய்த தொடக்க ஓவர்களே இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தன. முதல் 18 ஓவர்களில் இந்திய அணி 51 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. வீசப்பட்ட 108 பந்துகளில் 77 பந்துகளை இந்திய வீரர்கள் டாட் ஆக்கியிருந்தனர். தென்னாப்பிரிக்கவோடு ஒப்பிடுகையில் இந்த டாட் கூட பெரிய பிரச்னை இல்லை. ஏனெனில், தென்னாப்பிரிக்கவும் இந்த 18 ஓவர்களில் 71 டாட்களை ஆடியிருந்தது. ஆனால், அதன் பிறகு, தென்னாப்பிரிக்க அணி கொஞ்சம் அதிரடியாக ஆடியிருந்தது. 10 பவுண்டரிகளுடன் 80 ரன்களைச் சேர்த்திருந்தனர். இந்திய அணியோ இந்த ஓவர்களில் வெறும் 4 பவுண்டரிகளை மட்டுமே அடித்திருந்தது. பேட்டை வேகமாக சுழற்ற மறுத்த டாப் 4 பேட்டர்களே இந்தத் தோல்விக்குப் பொறுப்பாக வேண்டும். பந்துவீச்சின் போதுமே இந்திய அணியின் ஃபீல்டிங் ரொம்பவே சுமாராகத்தான் இருந்தது. மொத்தமாக 4 கேட்ச்சுகளை ட்ராப் செய்திருந்தனர். கடைசிக்கட்டத்தில் மில்லருக்கு மட்டும் 2 கேட்ச் ட்ராப் ஆகியிருந்தது. அதைச் சரியாக பிடித்திருந்தால் கூட ஒரு 10 ரன்களையாவது குறைவாக வழங்கியிருக்க முடியும். சாம்சனின் அதிரடியால் வெற்றியும் கிட்டியிருக்கும்.

Team India
Team India
ICC
3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியை வென்று 1-0 என தென்னாப்பிரிக்க அணி முன்னிலை பெற்றிருக்கிறது. அடுத்த போட்டியில் வெல்ல இந்திய அணி என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்? உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்!