Election bannerElection banner
Published:Updated:

இந்தியா தோல்வி... சொதப்பிய சேப்பாக்கம் பிட்ச்... கோலி அவுட் அநியாயம்?!

கோலி
கோலி

நேற்று ஜோ ரூட் அவுட் ஆனவிதமே அதிர்ச்சிகரமாக இருந்த நிலையில், இன்று கோலியின் அவுட் சென்னை பிட்ச் எவ்வளவு கொடூரமாக மாறியிருக்கிறது என்பதை உணர்த்தியது.

சென்னை டெஸ்ட்டின் கடைசி நாளான இன்று சேப்பாக்கம் பிட்ச்சின் தன்மை மிக மோசமாக மாறியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் 192 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இந்தியா முதல் டெஸ்ட்டில் தோல்வியை சந்தித்திருக்கிறது. இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

நேற்று இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜோ ரூட் அவுட் ஆனவிதமே அதிர்ச்சிகரமாக இருந்த நிலையில், இன்று கோலியின் அவுட் சென்னை பிட்ச் எவ்வளவு கொடூரமாக மாறியிருக்கிறது என்பதை உணர்த்தியது.

கடைசி நாளில் மிகச்சிறப்பான இன்னிங்ஸ் ஆடிக்கொண்டிருந்தார் இந்திய கேப்டன் கோலி. ஆண்டர்சன், ஆர்ச்சர், லீச், பெஸ் என எல்லோரையும் சமாளித்து 104 பந்துகளில் 72 ரன்கள் அடித்திருந்த கோலி இறுதியாக பென் ஸ்டோக்ஸ் பந்தில் போல்டானார்.

மிட் லென்த்தில் பவுன்சர் போல ஸ்டோக்ஸ் வீசிய பந்து வழக்கமான பிட்சாக இருந்தால் எகிற பேட்டுக்கு வந்திருக்கவேண்டும். கோலியும் அதைத்தான் எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், பவுன்ஸ் ஆகியிருக்கவேண்டிய பந்து அப்படியே கிட்டத்தட்ட தரையோடு போய் ஸ்டம்புகளை காலி செய்தது.

இங்கிலாந்து அணி
இங்கிலாந்து அணி

சதம் அடித்திருக்கவேண்டிய கோலியின் இன்னிங்ஸ் பிட்ச் சொதப்பலால் பாதியில் முடிந்தது.

முதல் இரண்டு நாட்கள் சிமென்ட் தரைப்போல இருந்த சேப்பாக்கம் பிட்ச் மூன்றாவது நாளில் இருந்து அப்படியே பெளலிங் பிட்சாக மாறியது. இறுதிநாளான இன்று பந்து எப்படி வரும் என்றே கணிக்கமுடியாத அளவுக்குப் பந்து திரும்பியது. சேப்பாக்கம் பிட்ச் குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துவருகிறார்கள்.

சேப்பாக்கம் பிட்ச் நான்காவது இன்னிங்ஸுக்கு சாதகமாக இருக்காது என்று தெரிந்தும், இந்திய பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்ஸில் மெத்தனமாக ஆடியது இந்தியாவின் வெற்றிவாய்ப்பைப் பறித்துவிட்டது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்பட்டியலில் இங்கிலாந்து இப்போது முன்னேறியிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு