Published:Updated:

ENG Vs IND : லார்ட்ஸில் இந்தியா வரலாற்று வெற்றி... 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது! LIVE UPDATES

லார்ட்ஸ் டெஸ்ட்டை வென்றதன் மூலம் 5 டெஸ்ட்கள் கொண்ட தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றிருக்கிறது.

16 Aug 2021 11 PM

லார்ட்ஸ் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் சதம் அடிக்க இந்தியா 364 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்தின் கேப்டன் ஜோ ரூட் 180 ரன்கள் குவித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்றாலும் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இங்கிலாந்து 391 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முகமது சிராஜ் 4, இஷாந்த் ஷர்மா 3, முகமது ஷமி 2 என வேகப்பந்து வீச்சாளர்களே அனைத்து விக்கெட்களையும் எடுத்திருந்தார்கள். இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 8 விக்கெட்கள் இழந்து தடுமாறியபோது பும்ரா - ஷமி இணை புதிய சாதனைப் படைத்தது. முகமது ஷமி 56 ரன்களோடு இறுதிவரை நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்து இந்தியா 250 ரன்களுக்கு மேல் டார்கெட் வைக்க காரணமாக இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் சரிவை பும்ரா தொடங்கிவைக்க, 4 விக்கெட்களோடு சிராஜ் முடித்துவைத்தார். இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறது.

16 Aug 2021 11 PM

5 டெஸ்ட்கள் கொண்ட இந்தியா - இங்கிலாந்து தொடரில் இந்தியா 1-0 என லீட் எடுத்திருக்கிறது. இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்கயிருக்கிறது.

16 Aug 2021 11 PM

ஜேம்ஸ் ஆண்டர்சனை க்ளீன் போல்டாக்கி இந்தியாவை வெற்றிபெறவைத்திருக்கிறார் முகமது சிராஜ். இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்கள் வீழ்த்தியிருக்கும் சிராஜ், முதல் இன்னிங்ஸிலும் இங்கிலாந்தின் 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

16 Aug 2021 11 PM

இரண்டாவது இன்னிங்ஸில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களை இழக்கிறது இங்கிலாந்து. அதன்படி ஓலி ராபின்சன் வீழ்ந்த அடுத்த இரண்டாவது பந்தில் சிராஜ் பெளலிங்கில் பட்லர் வீழ்ந்தார்.

16 Aug 2021 11 PM

ஸ்லோ பால் மூலம் ஓலி ராபின்சனை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டம் இழக்க வைத்திருக்கிறார் ஜஸ்பிரித் பும்ரா. கள அம்பயர் நாட் அவுட் சொல்ல, கோலி ரிவியூ கேட்க பால் ட்ராக்கிங் மூலம் அவுட் என்பது உறுதியானது. ஓலி ராபின்சன் 35 பந்துகள் தாக்கிப்பிடித்து 9 ரன்கள் எடுத்திருந்தார். மார்க் வுட் களமிறங்கியிருக்கிறார்.

16 Aug 2021 10 PM

ஜாஸ் பட்லர் 2 ரன்களில் இருந்தபோது அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் தவறவிட்டார் இந்திய கேப்டன் விராட் கோலி. இப்போது ஜாஸ் பட்லர்தான் இந்தியாவின் வெற்றியைத் தாமதப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.

16 Aug 2021 10 PM

இரண்டாவது டெஸ்ட்டின் இறுதி நாள் ஆட்டத்தில் இன்னும் 15 ஓவர்களே மீதம் இருக்கிறது. இந்த 15 ஓவர்களுக்குள் இந்தியா இங்கிலாந்தின் மூன்று விக்கெட்களை வீழ்த்த வேண்டும். இங்கிலாந்தின் முக்கிய பேட்ஸ்மேனான ஜாஸ் பட்லர் 19 ரன்களுடனும், ஓலி ராபின்சன் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து இந்த 15 ஓவர்களை தாக்குப்பிடித்துவிட்டால் ஆட்டம் டிரா ஆகும். கடைசி 1 மணி நேர ஆட்டம் மட்டுமே இருக்கிறது.

16 Aug 2021 10 PM

27 வயதான இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் ஓலி ராபின்சனுக்கு இது மூன்றாவது டெஸ்ட் போட்டி மட்டுமே. தனது முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்துக்கு எதிராக 42 ரன்கள் அடித்து இங்கிலாந்தை ஃபாலோ ஆனில் இருந்து காப்பாற்றியவர் ஓலி ராபின்சன்.

16 Aug 2021 10 PM

அதிக பந்துகள் சந்தித்த ஜாஸ் பட்லர்!

இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் அதிகப் பந்துகளை சந்தித்திருக்கும் பேட்ஸ்மேன் ஜாஸ் பட்லர். ஜோ ரூட் 60 பந்துகள் சந்தித்து 33 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஜாஸ் பட்லர் 63 பந்துகள் சந்தித்து 9 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.

16 Aug 2021 10 PM

இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, இஷாந்த், சிராஜ் மூவரும் தலா இரண்டு விக்கெட்கள் எடுக்க, பேட்ஸ்மேனாக அரை சதம் அடித்து அசத்திய முகமது ஷமி 1 விக்கெட் எடுத்திருக்கிறார்.

16 Aug 2021 9 PM

களத்தில் தற்போது ஜாஸ் பட்லரும், ஒலி ராபின்சனும் உள்ளனர். ஜாஸ் பட்லர் இங்கிலாந்து அணியை தோல்வியில் இருந்து மீட்க போராடுகிறார். 57 பந்துகளை சந்தித்து 8 ரன்களுடன் போராடி வருகிறார் பட்லர்.

16 Aug 2021 9 PM

லண்டன் லார்ட்ஸில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட்டின் இறுதிநாள் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தியா வெற்றிபெற 3 விக்கெட்களையே வீழ்த்த வேண்டும் என்கிற நிலையில், இங்கிலாந்து ஆட்டத்தை டிரா செய்ய இன்னும் 21 ஓவர்கள் தாக்குப்பிடிக்க வேண்டும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு