Published:Updated:

`பயப்பட வேண்டாம்’ என்றார்; செய்துகாட்டிய மென் இன் ப்ளூ! - ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா#INDvAUS

Kohli ( Ajit Solanki )

``ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். இந்தப் போட்டியில் சில பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவ்வளவுதான்” - கோலி

Published:Updated:

`பயப்பட வேண்டாம்’ என்றார்; செய்துகாட்டிய மென் இன் ப்ளூ! - ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா#INDvAUS

``ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். இந்தப் போட்டியில் சில பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவ்வளவுதான்” - கோலி

Kohli ( Ajit Solanki )

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி இமாலய வெற்றியை பதிவு செய்து தொடரில் 1-0 என முன்னிலை வகித்தது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது இந்திய அணி.

தவான்
தவான்
Rafiq Maqbool

கடந்த போட்டியைப் போலவே இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார். இந்திய அணியில் பன்ட்க்கு பதிலாக மனீஷ் பாண்டேவும் ஷ்ரதுல் தாக்கூருக்குப் பதிலாக நவ்தீப் சைனியும் சேர்க்கப்பட்டிருந்தனர். தொடக்க ஆட்டகாரர்களாகக் களமிறங்கிய தவான் மற்றும் ரோஹித் ஷர்மா இந்திய அணிக்கு நல்ல தொடக்கம் தந்தனர்.

தவான் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மோசமான பந்துகளை பவுண்டரி பக்கம் தட்டிவிட்டுக்கொண்டே இருந்தார். ரோஹித் தனது இன்னிங்ஸை மெதுவாகத் தொடங்கினாலும் அடுத்தடுத்த பவுண்டரிகளால் அதை ஈடு செய்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்தது. ரோஹித், ஜாம்பா பந்துவீச்சில் 42 ரன்னில் ஆட்டமிழக்க, மூன்றாவது வீரராக கோலி களமிறங்கினார்.

கோலி
கோலி
Ajit Solanki

கடந்த போட்டியில் ராகுல் மூன்றாவது வீரராகக் களமிறங்கிய நிலையில் இந்த முறை கோலி மீண்டும் தனது பழைய இடத்துக்கு வந்தார். தொடக்கத்தில் கிடைத்த நல்ல பார்ட்னர்ஷிப்பை இந்த ஜோடி சிறப்பாகப் பயன்படுத்தி ரன் சேர்ந்தது. அரைசதம் கடந்த தவான் சதத்தை நோக்கி வேகமாக முன்னேறினார். 90 பந்துகளில் 96 ரன்கள் எடுத்த தவான் ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து தனது சதத்தை 4 ரன்னில் தவறவிட்டார்.

அதன் பின்னர் ராகுல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளம் வீரர் ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார். அவர் 7 ரன்னில் ஆட்டமிழக்க ராகுல் களமிறங்கினார். நம்பிக்கையுடன் விளையாடி வந்த கேப்டன் கோலி 78 பந்தில் மீண்டும் ஜாம்பா பந்தில் ஆட்டமிழந்தார். இதுவரை ஜாம்பா பந்துவீச்சில் கோலி 5 முறை விக்கெட்டைப் பறிகொடுத்துள்ளார். அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்ததால் இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்டுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு வந்தது.

ராகுல்
ராகுல்
Ajit Solanki

இந்நிலையில், கடைசி ஓவர்களில் அதிரடி காட்டிய ராகுல் இந்திய அணி 340 ரன்கள் குவிக்க காரணமாக இருந்தார். இறுதியில் ராகுல் 52 பந்துகளில் 80 ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜாம்பா அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

பின்னர் 341 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் இரண்டு பவுண்டரிகள் அடித்து அமர்க்களமான தொடக்கம் அளித்தார். எனினும் மூன்றாவது ஓவரிலே ஷமியின் பந்துவீச்சில் மனீஷ் பாண்டேவில் சிங்கிள் ஹேண்ட் கேட்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய ஸ்மித் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.

ஸ்மித்
ஸ்மித்
Ajit Solanki

பின்ச் 33 ரன்கள் எடுத்த நிலையில் ராகுலில் அற்புதமான ஸ்டம்பிங்கால் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுஷாங்கே, ஸ்மித்துக்கு நல்ல கம்பெனி கொடுக்க ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோரும் மெல்ல உயர்ந்தது. எனினும், லபுஷாங்கே 46 ரன்னில் ஆட்டமிழக்க ஆஸ்திரேலியா ஆட்டம் கண்டது. அதன் பின்னர் கேரி மற்றும் ஸ்மித்தை ஒரே ஓவரில் வெளியேற்றி அமர்க்களப்படுத்தினார் குல்தீப் யாதவ்.

ஸ்மித் 98 ரன்னில் ஆட்டமிழந்து 2 ரன்னில் சதத்தை நழுவவிட்டார். இறுதிக்கட்டத்தில் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்தி ஷமியும் மாஸ் காட்டினார். பின்னர், சைனியும் ஒரே ஓவரில் இரு விக்கெட்டுகள் வீழ்த்த ஆஸ்திரேலிய ஆட்டம் கண்டது. இறுதிக்கட்டத்தில் ஷமி ஒரு ஓவரில் 19 ரன்கள் கொடுக்க ஆஸ்திரேலிய அணி 300 ரன்களைக் கடந்தது. ஆட்டத்தின் இறுதி ஓவரின் முதல் பந்தில் பும்ரா தனது முதல் விக்கெட்டை எடுக்க இந்திய அணியிடம் 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது ஆஸ்திரேலியா. இந்திய அணி தரப்பில் ஷமி மூன்று விக்கெட்டுகளும். சைனி, ஜடேஜா, குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பும்ரா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இந்தியா
இந்தியா
Ajit Solanki

கடந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி, ``ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம். இந்தப் போட்டியில் சில பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவ்வளவுதான்” என்றார். சொன்னதைப்போலவே இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியுள்ளார். தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது ஆட்டம் வரும் ஞாயிறு அன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.