Published:Updated:

`கோலி ஆட்டமிழந்தும் மாறாத கேம் ப்ளான்; மூவர் கூட்டணியின் யார்க்கர்கள்!’- ஆஸியை வீழ்த்திய இந்தியா

இந்திய அணி

மனீஷ் பாண்டே 44.1 ஓவர்களில் ஆட்டமிழக்கும்போது, இந்திய அணியின் ஸ்கோர் 280. கடைசி 35 பந்துகளில் இந்திய அணி 60 ரன்கள் குவித்தது.

Published:Updated:

`கோலி ஆட்டமிழந்தும் மாறாத கேம் ப்ளான்; மூவர் கூட்டணியின் யார்க்கர்கள்!’- ஆஸியை வீழ்த்திய இந்தியா

மனீஷ் பாண்டே 44.1 ஓவர்களில் ஆட்டமிழக்கும்போது, இந்திய அணியின் ஸ்கோர் 280. கடைசி 35 பந்துகளில் இந்திய அணி 60 ரன்கள் குவித்தது.

இந்திய அணி

குஜராத் மாநில ராஜ்கோட்டில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி,பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது. இந்த இரு அணிகள் மோதும் தொடரின் இறுதி ஒருநாள் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.

`கோலி ஆட்டமிழந்தும் மாறாத கேம் ப்ளான்; மூவர் கூட்டணியின் யார்க்கர்கள்!’- ஆஸியை வீழ்த்திய இந்தியா
Ajit Solanki

இந்நிலையில், நேற்றையை போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற ராகுல் கூறுகையில், ``விளையாட வரும் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு பொறுப்பு கிடைப்பது நல்ல விஷயம். இது, எல்லா பேட்ஸ்மேன்களுக்கும் கிடைக்காது. எனக்கு எப்போதெல்லாம் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் எனது ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புவேன்.

கடைசி 5 ஓவர்களில், முடிந்த வரை ரன்களைச் சேர்க்க வேண்டும் என்பதுதான் திட்டம். கோலி, மனீஷ் பாண்டே அடுத்தடுத்து ஆட்டமிழந்தபோதும் அந்த ப்ளானை மாற்றவில்லை. ஜடேஜா வந்ததால், பிளானை மாற்றாமல் முடிந்தவரை தொடர்ந்து ரன்களைச் சேர்த்தோம்” என்றார்.

Rahul
Rahul
Ajit Solanki

முதலாவது ஒருநாள் போட்டியில் மூன்றாவது வீரராகக் களமிறங்கிய ராகுல், நேற்றைய ஆட்டத்தில் 5 -வது வீரராகக் களமிறங்கினார். எனினும், இறுதிக் கட்டத்தில் அவர் தனது டி20 பாணியிலான ஆட்டத்தைக் காட்டி, இந்திய அணி 340 ரன்கள் என்னும் இமாலய இலக்கை இந்தியா பெற உறுதுணையாக இருந்தார். மனீஷ் பாண்டே 44.1 ஓவர்களில் ஆட்டமிழக்கும்போது இந்திய அணியின் ஸ்கோர் 280. கடைசி 35 பந்துகளில் இந்திய அணி 60 ரன்கள் குவித்தது.

நேற்றைய போட்டிக்குப் பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி, ``நாம் சமூக வலைதளங்களின் ஆதிக்கம் மிகுந்த காலத்தில் வாழ்கிறோம். இங்கு, விரைவாக அச்சம் என்னும் எச்சரிக்கை பட்டனை அழுத்திவிடுகிறார்கள் (முதலாவது போட்டி தோல்விக்கு எழுந்த விமர்சனம் தொடர்பாக). கே.எல். ராகுல் போன்ற ஒரு வீரரை அத்தனை எளிதாக அணியிலிருந்து விலக்கிவைத்துவிட முடியாது. இன்று (நேற்று) அவர் எப்படி பேட் செய்தார் என்பதைப் பார்த்திருப்பீர்கள். சர்வதேசப் போட்டிகளில் அவர் ஆடிய சிறந்த இன்னிங்ஸ் என இதனைச் சொல்லலாம்.

இந்திய அணி
இந்திய அணி

காயம் காரணமாகத் தொடர் ஓய்வில் இருந்த தவானுக்கு, இந்த இரண்டு ஆட்டமும் முக்கியமானது. அவர், அணியின் ஸ்கோரை எப்போது வேண்டுமென்றாலும் மாற்றும் திறன்கொண்டவர். பந்துவீச்சைப் பொறுத்த வரை நான் அவர்களிடம் இன்றைய போட்டியில் என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டேன். பந்துவீச்சாளர்கள் யார்க்கர்களைப் பயன்படுத்தும் நேரம் என்றதோடு, அதை சரியாகச் செய்தும் காட்டினர்” என்றார். கடைசிக் கட்டத்தில் சைனி, ஷமி, பும்ரா என வரிசையாக வீசிய யார்க்கர்கள் இந்திய அணியின் வெற்றிக்குப் பெரும் பங்காற்றின.