Published:Updated:

U-19 உலகக்கோப்பை: இந்தியா vs இங்கிலாந்து - கோப்பையை வெல்லப்போவது யார்?

U-19 உலகக்கோப்பை

மொத்தத்தில் இந்திய அணிக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் காட்சியளிக்கிறது இங்கிலாந்து.

U-19 உலகக்கோப்பை: இந்தியா vs இங்கிலாந்து - கோப்பையை வெல்லப்போவது யார்?

மொத்தத்தில் இந்திய அணிக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் காட்சியளிக்கிறது இங்கிலாந்து.

Published:Updated:
U-19 உலகக்கோப்பை
14 உலகக்கோப்பை தொடர்கள், 8 முறை இறுதிப்போட்டிக்குத் தகுதி அதில் நான்கு முறை சாம்பியன் என U-19 உலகக்கோப்பையில் இந்திய அணி ஒரு அசைக்க முடியாத சக்தியாக தொடக்கத்தில் இருந்தே விளங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று மற்றுமொரு கோப்பைக்காக இங்கிலாந்துடன் மோதவிருக்கிறது இந்தியா.
Team India
Team India

இந்திய அணிக்கு இம்முறை எதிராளிகளைத் தாண்டி புதியதொரு நெருக்கடி மிகுந்த சவாலை சந்திக்க வேண்டி இருந்தது.கோவிட் தொற்று. ஆம், தொடரின் வெவ்வேறு கட்டங்களிலும் இந்திய அணியின் பல்வேறு வீரர்கள் கோவிட் தொற்றால் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாயினர். இதனால் 17 வீரர்கள் அடங்கிய இந்திய அணிக்கு ஓர் ஆட்டத்தில் சரியாக 11 வீரர்களே மீதமிருந்தனர் மற்றொரு ஆட்டத்தில் 12 பேரே இருந்தனர். மேலும் அணியைத் தலைமை தாங்கி நடத்தக்கூடிய மூன்று முக்கிய வீரர்கள் தொடரின் வெவ்வேறு பகுதிகளில் கோவிட் தொற்றுக்குள்ளாயினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், இத்தனை தடைகளைத் தாண்டி இன்று கோப்பைக்கான இறுதி யுத்தத்தில் களம் காண இருக்கிறது இந்தியாவின் இளம் படை. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் போட்டியை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி அயர்லாந்திற்கு எதிரான அடுத்த போட்டியில் 174 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உகாண்டா அணியுடனான அடுத்த போட்டியில் 405 ரன்களை வாரிக் குவித்தது இந்தியா. இரண்டாவது இன்னிங்ஸில் பௌலர்களும் அசத்த எதிரணியை 79 ரங்களுக்கு ஆல்-அவுட்டாக்கி 326 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது.

Team India
Team India

வங்கதேசத்திற்கு எதிரான காலிறுதி போட்டியையும் சுலபமாகவே வென்ற இந்தியா அரையிறுதி போட்டியிலும் எந்த ஒரு சிறு தவறும் நிகழாமல் பார்த்துக்கொண்டது. அப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை U-19 உலகக்கோப்பையில் தொடர்ந்து ஆறாவது முறையாக வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தோல்விகளற்ற இந்தியாவின் இந்தப் பயணத்தில் பல்வேறு வீரர்களுக்கும் பங்குண்டு. முதல் போட்டியை தங்கள் வசம் இழுக்க தென்னாப்பிரிக்க பேட்டர்கள் முற்பட்டபோது விக்கி ஓஸ்வாலின் 5-விக்கெட் மற்றும் அங்கத் பாவாவின் 4-விக்கெட். உகண்டாவிற்கு எதிராக 162 ரன்கள் விளாசி தவானின் முந்தைய சாதனையை முறியடித்த ராஜ் பாவா. காலிறுதியில் ரவி குமார் வீழ்த்திய அந்த 3- விக்கெட்கள் இவை அனைத்திற்கும் மேலாக அரையிறுதிப் போட்டியில் கோவிட் தொற்றிலிருந்து மீண்டு வந்து ஒரு தலைவனாக யாஷ் துல் ராஷித்தின் துணையோடு சேர்த்த அந்த 204 ரன்கள் என இத்தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் இந்திய வீரர்கள் தங்களின் மிக சிறந்த ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தியுள்ளனர்.

Yash Dhull
Yash Dhull

இந்திய அணிக்காக இத்தொடரில் அதிக ரன்களை அடித்துள்ளவர் அங்ரிஷ் ரகுவன்ஷி. ஓப்பனிங் பேட்டரான இவர் 55.60 என்ற சராசரியுடன் 278 ரன்கள் அடித்துள்ளார். பௌலிங்கை பொறுத்தவரையில் 10.75 என்கிற சராசரியுடன் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் விக்கி ஓஸ்வால். மேலும் ஆல்-ரவுண்டர் ராஜ் அங்கத் பாவா இத்தொடரில் 217 ரன்கள், 4 விக்கெட்டுகள் ( சராசரி - 29.75) என சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் ராஜ்வர்தன் ஹங்கரேக்கரின் எக்ஸ்ட்ரா பேஸும் ஸ்விங்கும் எதிரணி பேட்டர்களை நிச்சயம் மிரட்டும். கூடுதலாக கேப்டன் யாஷ் துல்லும் அணியின் மிகப்பெரிய பலமாக விளங்குகிறார். பெரிய ஆட்டங்களுக்கே உண்டான தவறுகளை மட்டும் செய்யாமல் தவிர்த்துவிட்டால் இந்திய அணி இக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது.

மறுப்பக்கம் 1998-க்கு பிறகு சுமார் 24 ஆண்டுகளில் முதல் முறையாக u-19 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறது இங்கிலாந்து அணி. இந்தியாவை போலத்தான் இத்தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை இங்கிலாந்து. 293 ரங்களுடன் ( சராசரி- 73) அணியை முன்னின்று வழிநடத்துகிறார் கேப்டன் டாம் ப்ரெஸ்ட். மேலும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ்வா பாய்டன் 9.53 என்ற மிக சிறந்த சராசரியுடன் 13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இவர்களை தவிர்த்து ஆல்-ரவுண்டர் ஜேக்கப் பெத்தேல், ஸ்பின்னர் ரேஹன் அஹமத் ஆகியோரும் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.

England
England
மொத்தத்தில் இந்திய அணிக்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் காட்சியளிக்கிறது இங்கிலாந்து. இப்போட்டி இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணி அளவில் ஆண்டிகுவா மைதானத்தில் தொடங்குகிறது.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism