Published:Updated:

INDvSA: வெற்றிக்கு உதவிய ஸ்ரேயாஸ்; இஷன் கிஷன் கூட்டணி; போராடாமலே தோற்ற தென்னாப்பிரிக்கா!

Shreyas & Kishan ( BCCI )

முதலில் கொஞ்சம் பொறுமையாக ஆரம்பித்த கிஷன் பின்னர் அதிரடியாக ஆடினார். அவர் சற்று செட்டில் ஆவதற்கு ஐயரின் பாசிட்டிவ் பேட்டிங் காரணமாக இருந்தது.

Published:Updated:

INDvSA: வெற்றிக்கு உதவிய ஸ்ரேயாஸ்; இஷன் கிஷன் கூட்டணி; போராடாமலே தோற்ற தென்னாப்பிரிக்கா!

முதலில் கொஞ்சம் பொறுமையாக ஆரம்பித்த கிஷன் பின்னர் அதிரடியாக ஆடினார். அவர் சற்று செட்டில் ஆவதற்கு ஐயரின் பாசிட்டிவ் பேட்டிங் காரணமாக இருந்தது.

Shreyas & Kishan ( BCCI )
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடந்து முடிந்திருக்கிறது. முதல் போட்டியில் தோற்றிருந்த நிலையில் நேற்றைய போட்டியில் வென்றே ஆக வேண்டிய சூழலில் ஸ்ரேயாஸ் ஐயரின் சதத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது.

டாஸை வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரியுடன் தொடங்கிய குவிண்டன் டி காக்கை மூன்றாவது ஓவரில் போல்டாக்கி ஆட்டமிழக்கச் செய்தார் முகமது சிராஜ். யானமென் மலானுடன் ரீஸா ஹென்றிக்ஸ் சேர்ந்து சிறிது நேரம் ஆடினர். பத்தாவது ஓவரில் மலான் அறிமுக வீரர் ஷபாஸ் அகமது பந்தில் ஆட்டமிழந்தார்.

பின்னர் ஏய்டன் மார்க்ரம் - ஹென்றிக்ஸ் இணை ஆட்டத்தை முன்னகர்த்திச் சென்றது. இருவரும் அரை சதம் கடந்தனர். ஓவருக்கு ஒரு பவுண்டரியாவது அடித்தவாறு இருந்ததால் டாட் பந்துகளின் பிரெஷர் குறைந்தது. ஹென்றிக்ஸ் 74 ரன்கள் எடுத்து சிராஜின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த க்ளாஸன் வழக்கம்போல் ஸ்பின்னர்களை அடித்து ஆடினார். 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அடுத்த ஓவரில் மார்க்ரம் ஆட்டமிழக்க புதிய பேட்டர்கள் இறுதி ஓவர்களில் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது.

Siraj
Siraj
BCCI
கடைசி பத்து ஓவர்களில் வெறும் நான்கு பவுண்டரிகளை மட்டுமே தென்னாப்பிரிக்க அணியால் அடிக்க முடிந்தது. அந்த நான்கும் மில்லரால் அடிக்கப்பட்டது. இரு இடதுகை பேட்டர்கள் இருக்கும்போது வாஷிங்டன் சுந்தரைப் பந்துவீசச் செய்த தவானிக் கேப்டன்சி பாராட்டுக்குரியது.

பின்னர் இஷான் கிஷன் - ஷ்ரேயாஸ் ஐயர் இணை மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் ஒன்றை அமைத்தது. முதலில் கொஞ்சம் பொறுமையாக ஆரம்பித்த கிஷன் பின்னர் அதிரடியாக ஆடினார். அவர் சற்று செட்டில் ஆவதற்கு ஐயரின் பாசிட்டிவ் பேட்டிங் காரணமாக இருந்தது.

குறிப்பாக கேசவ் மகாராஜ் ஓவர்களில் சிக்சர்களை பறக்கவிட்ட இஷான் கிஷன். அடுத்து அன்ரிச் நோர்க்யா ஓவரிலும் இரண்டு சிக்சர்களை அடித்தார். தன் சொந்த மண்ணில் சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கிஷன் 93 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் தனது இரண்டாவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.

இறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

அடுத்த வருடம் இந்தியாவில் நடக்கவுள்ள ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியில் தன் இடத்தை ஏறத்தாழ உறுதி செய்து விட்டார் ஷ்ரேயாஸ் ஐயர்.
Shreyas Iyer
Shreyas Iyer
BCCI

நேற்றைய போட்டியில் பிட்சின் தன்மைக்கேற்ப பெரும்பாலும் தரையோடு ஆடும் கட், டிரைவ் போன்ற ஷாட்களை அதிகளவில் ஆடினார் ஐயர்.

இந்திய அணி வெற்றி பெற்றதில் சிராஜின் பங்கு மிக முக்கியமானது. சமீபத்தில் சிறந்த பார்மில் உள்ள டேவிட் மில்லரை இறுதி ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்க விடாமல் பந்து வீசியது தென்னாப்பிரிக்க 300 ரன்கள் என்ற இலக்கை அடைய முடியாமல் தடுத்தது. தான் வீசிய கடைசி 6 ஓவர்களில் ஒரு பவுண்டரியை கூட சிராஜ் விட்டுக் கொடுக்கவில்லை.

தென்னாப்பிரிக்கா செய்த தவறுகள்:

டாஸ் வென்று பேட்டிங் செய்யத் தீர்மானித்தது என்பது பெரிய ஆச்சரியத்தைத் தந்தது. ஏனெனில், ராஞ்சி போன்ற நகரத்தில் இந்த மாதங்களில் இரவில் பனிப்பொழிவு என்பது காணப்படும். அதனை எப்படி கணிக்காமல் விட்டனர் என்பது வியப்புக்குரிய விஷயம். மேலும் இந்தப் பிட்சில் லுங்கி இங்கிடியின் கட்டர் பந்துகள் பெரும் அளவில் உதவி இருக்கும். ஆனால் அவருக்கு பதில் நோர்க்யா தேர்வு செய்யப்பட்டது பெரிய ஆச்சரியம்.

நேற்றைய ஆட்டத்தில் கேப்டன்சியில் சில தவறுகளை மகாராஜ் செய்தார். யாருக்கு எப்போது ஓவர் தர வேண்டும் என்பதில் தடுமாறினார். மார்க்கரம் ஓவரில் ஐயர் இரண்டு பவுண்டரிகள் அடித்த போதும் கிஷன் சற்று தடுமாறினார். இதனை சற்று கவனித்து இன்னும் இரண்டு ஓவர்கள் அதிகம் கொடுத்திருந்தால் கிஷன் மார்க்ரம் ஓவரில் ஆட்டமிழந்திருக்கலாம்.

ஐயர் ஷார்ட் பிட்ச் பந்தில் அவ்வளவு பலமானவர் அல்ல என்பதைத் தெரிந்தும் அவருக்கு ஷார்ட் பிட்ச் பந்துகள் வீசாமல் கிஷனுக்கு அதிக அளவில் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசினர்.

ஒரு கட்டத்தில் தாங்கள் தோற்றுவிடுவோம் என்ற உடல் மொழியில் தான் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் காணப்பட்டனர். தோல்வியை விட எப்படி தோற்கிறோம் என்பது தான் முக்கியம். நேற்று ஒரு கட்டத்திற்கு மேல் எந்தவொரு வீரரிடமும் போராட்டக் குணத்தைக் காணவில்லை.

Team India
Team India
BCCI
தென்னாப்பிரிக்க அணி இந்தத் தொடர் மட்டுமல்லாமல் வரும் அனைத்து ஒரு நாள் தொடரையும் வென்றால் மட்டுமே 2023 உலகக்கோப்பைத் தொடருக்கு நேரடியாக தகுதி பெற முடியும். இந்த தோல்வி அதனை சற்று கடினமாக்கி உள்ளது. அடுத்த போட்டியையும் தோற்கும் நிலை ஏற்பட்டால், தகுதி சுற்றில் ஆடும் நிலைமைக்கு தென்னாப்பிரிக்க அணி தள்ளப்படும்!