Published:Updated:

தொடங்குகிறது மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை; கோப்பை வெல்லுமா இந்தியா? பலம் பலவீனம் என்ன? #Video

ICC Women's World Cup

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 6-ம் தேதி தொடங்கவிருக்கிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, டி-20 சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளோடு போட்டியிடும் அளவுக்கு பலமாக இருக்கிறதா இந்தியா?

8 அணிகள் கலந்துகொள்ளும் இந்தத் தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அனியோடு ஒருமுறை மோதும். முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறும். இறுதிப் போட்டி ஏப்ரல் 3-ம் தேதி நடக்கிறது. மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி அனுபவமும், இளமையும் கடந்த அணியாக இருக்கிறது. போட்டி நடக்கும் நியூசிலாந்தில் ஏற்கெனவே ஒருநாள் தொடர் விளையாடியிருக்கிறது. கடந்த டி-20 உலகக் கோப்பையில் விளையாடாத 6 வீராங்கனைகள் இந்தத் தொடரில் இடம்பெற்றிருக்கின்றனர். இந்திய அணியின் எதிர்காலம் எனக் கருதப்பட்ட அந்த ஒரு வீராங்கனை, அணியில் இடம்பெறவில்லை. ஏன், பேக் அப் பிளேயராகக் கூட அறிவிக்கப்படவில்லை. ஃபிட்டாக இருந்தும் அவருக்கு இடம் கிடைக்காதது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவர் இடத்தில் இடம்பெற்றிருக்கும் இன்னொரு இளம் வீராங்கனையும் இந்திய அணிக்கு மிகப்பெரிய வகையில் பலம் சேர்க்கிறார்.

அணியில் இடம்பெறாத அந்த வீராங்கனை யார்? அவருக்குப் பதில் இடம்பெற்றிருப்பவர் யார்? ஒட்டுமொத்தமாக இந்திய அணி எப்படி இருக்கிறது? பலம், பலவீனம் என்ன? வேறு எந்த அணி இந்தியாவுக்குக் கடும் போட்டியாக இருக்கும்? எந்த அணி கோப்பை வெல்லும் அளவுக்குப் பலமாக இருக்கிறது? அனைத்துக்கும் பதில் மேலே இருக்கும் வீடியோவில்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism