Published:Updated:

`கோப்பை கனவை தகர்த்த மேகன், அலிஷா ஹீலே!' -மகளிர் உலகக்கோப்பையில் இந்தியா படுதோல்வி #TeamIndia #LiveUpdates

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா ( ICC )

மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி லைவ் ரிப்போர்ட்ஸ்!

08 Mar 2020 3 PM

இந்தியா படுதோல்வி!

`கோப்பை கனவை தகர்த்த மேகன், அலிஷா ஹீலே!' -மகளிர் உலகக்கோப்பையில் இந்தியா படுதோல்வி #TeamIndia #LiveUpdates

இந்தியாவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்து போயுள்ளது. 185 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 19.1 ஓவரிலேயே 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆக ஆஸ்திரேலியா மீண்டும் கோப்பையை வென்றுள்ளது. அந்த அணியில் மேகன் ஷட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே இந்தியாவின் ஷெஃபாலி வெர்மா ஆட்டமிழக்க செய்தவர், இந்திய அணியின் முக்கிய வீராங்கனைகளை ஆட்டமிழக்க செய்து திருப்பம் ஏற்படுத்தினார். இதேபோல் ஜெஸ் ஜோனாசெனும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்திய அணியை பொறுத்தவரை தீப்தி ஷர்மா அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.

08 Mar 2020 2 PM

தொடக்கத்திலேயே சறுக்கல்!

ஆட்டம் தொடங்கிய முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே இந்தியாவின் ஷெஃபாலி வெர்மா ஆட்டமிழந்தார். பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அதிரடி ஆட்டக்காரரான இந்த இளம் விராங்கனை துரதிர்ஷ்டவசமாக 107 கி.மீ வேகத்தில் வந்த பந்தை கீப்பரிடம் தட்டிவிட்டு ஆவுட்டானார். அடுத்து களமிறங்கிய தானியா பாட்டியா ஸ்வீப் ஷாட் ஒன்று ஆட முற்பட அவரின் ஹெல்மெட்டைப் பந்து தாக்கியது.

அதைத் தொடர்ந்து பிசியோவின் ஆலோசனைப் பெற்று அவர் ரிட்டையர்டு ஹர்ட்டாகி வெளியேறினார். பின்னர், 2-வது ஓவரின் கடைசி பந்தில் ஜெமிமா ரோட்ரிக்கியூஸ் மிட் ஆன் திசையில் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். அடுத்ததாக 2 பவுண்டரிகள் அடித்த ஸ்ம்ரிதி மந்தனா மிட் ஆஃப் திசையில் கேட்ச் கொடுத்து 11 ரன்களுக்கு வெளியேறினார். 185 என்ற கடின இலக்கை துரத்தும் இந்தியாவுக்குத் தொடக்கத்திலேயே சறுக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

08 Mar 2020 1 PM

185 ரன்கள் இலக்கு!

அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலிய கடைசி ஓவரில் பெரிய அளவு ரன்கள் எடுப்பதை இந்திய வீராங்கனைகள் கட்டுப்படுத்தினர். 20 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து. மூணே அதிகபட்சமாக 78 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதற்கிடையே, 185 ரன்கள் எடுத்தால் உலகக்கோப்பை இந்தியா வெல்லும்.

08 Mar 2020 1 PM

மூணே fifty!

`கோப்பை கனவை தகர்த்த மேகன், அலிஷா ஹீலே!' -மகளிர் உலகக்கோப்பையில் இந்தியா படுதோல்வி #TeamIndia #LiveUpdates

ஹீலே அவுட்டான பிறகு ஆஸ்திரேலிய அணியின் ரன் ரேட் குறைந்து தொடங்கியுள்ளது. எனினும் ஓவருக்கு ஒரு பவுண்டரி என்கிற வீதம் அடித்து வருகிறார்கள். இதற்கிடையே, மூணே 41வது பந்தில் தனது அரைசதத்தை பதிவு செய்துள்ளார். தற்போது 15 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்துள்ளது.

08 Mar 2020 1 PM

அப்பாடா `ஹீலே' அவுட்!

`கோப்பை கனவை தகர்த்த மேகன், அலிஷா ஹீலே!' -மகளிர் உலகக்கோப்பையில் இந்தியா படுதோல்வி #TeamIndia #LiveUpdates

12வது ஓவரை ராதா வீச இந்த ஓவரிலும் சிக்ஸ் அடிக்க முயன்றார் ஹீலே. ஆனால் அது வேதா கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்சாக மாற இந்திய ரசிகர்கள் பெருமூச்சுவிட்டனர். முதல் ஓவரிலேயே அவுட் ஆக வேண்டியவர் ஹீலே. ஆனால் அவர்கொடுத்த கேட்சை மிஸ் செய்ய தற்போது ருத்ரதாண்டவம் ஆடிவிட்டுச் சென்றிருக்கிறார்.

08 Mar 2020 1 PM

ஹாட்ரிக் சிக்ஸ்!

ஆஸ்திரேலிய 10.3வது ஓவரில் 100 ரன்களை தொட்டுள்ளது. இந்த ஓவரிலும் ஹீலே அடுத்தடுத்து ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டார். 37 பந்துகளில் அவர் மட்டும் 75 ரன்கள் எடுத்துள்ளார்.

08 Mar 2020 1 PM

மெர்சல் காட்டும் அலிஷா ஹீலே!

`கோப்பை கனவை தகர்த்த மேகன், அலிஷா ஹீலே!' -மகளிர் உலகக்கோப்பையில் இந்தியா படுதோல்வி #TeamIndia #LiveUpdates

8வது ஓவரை ராஜேஸ்வரி வீச அலிஷா ஹீலே அடுத்தது இரண்டு சிக்ஸர்களை தொடர்ச்சியாக பறக்கவிட்டார். இந்த ஓவரில் மட்டும் அதிகபட்சமாக 16 ரன்கள் எடுத்ததுள்ளது அந்த அணி. இதற்கிடையே தற்போது 30வது பந்தை பிடித்த அதை பவுண்டரிக்கு பறக்கவிட்டு தனது அரைசதத்தை நிறைவு செய்துள்ளார். இந்தத் தொடரில் ஹீலே அடிக்கும் 3வது அரைசதம் இதுவாகும்.

08 Mar 2020 12 PM

டி20 வரலாற்றில் 2000 ரன்கள் குவித்த ஹீலே!

ஹீலே
ஹீலே

டி20 கிரிக்கெட் கேரியரில் அலிஷா ஹீலே 2000 ரன்கள் குவித்துள்ளார். இன்றைய போட்டியில் அதிரடியாக ஆடி வரும் இவர் தற்போது வரை 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்துள்ளார்.

08 Mar 2020 12 PM

fifty அடித்த ஆஸ்திரேலியா!

`கோப்பை கனவை தகர்த்த மேகன், அலிஷா ஹீலே!' -மகளிர் உலகக்கோப்பையில் இந்தியா படுதோல்வி #TeamIndia #LiveUpdates

ஹீலேவும், மூணே அதிரடியில் மூன்று ஓவர்களிலேயே 32 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. தொடர்ந்து இருவரும் போட்டிபோட்டு அதிரடியாக ஆடி வருகின்றனர். தற்போது 6.1 ஓவர்களில் அந்த அணி முதல் அரைசதத்தை எட்டியுள்ளது.

08 Mar 2020 12 PM

அதிரடி காட்டும் ஹீலே!

ஓப்பனர் அலிஷா ஹீலே முதல் ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்தது போல் இரண்டாவது ஓவரிலும் இரண்டு பவுண்டரிகள் அடித்து மிரட்டினார். இரண்டாவது ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 23 ரன்கள் எடுத்துள்ளது.

08 Mar 2020 12 PM

முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த ஸ்டார்க் மனைவி!

அலிஷா ஹீலே
அலிஷா ஹீலே

ஆஸ்திரேலிய அணியில் ஓப்பனர்களாக மிட்சல் ஸ்டார்க் மனைவி அலிஷா ஹீலேவும், பெத் மூணேவும் களமிறங்கினர். முதல் ஓவரை ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா வீசினார். இதில் முதல் பந்திலேயே ஸ்டார்க் மனைவி அலிஷா பவுண்டரி அடித்து தொடங்கி வைத்தார். முதல் ஓவரில் 14 ரன்கள் எடுத்து அந்த அணி!

08 Mar 2020 12 PM

டாஸ் வென்ற ஆஸி!

ஏழாவது பெண்கள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மெல்பர்ன் மைதானத்தில் இன்னும் சிறிதுநேரத்தில் இருக்கிறது. இந்திய அணிக்கு எதிரான இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி மோதவுள்ளது. மார்ச் 8 உலக மகளிர் தினமும் என்பதால் இந்த இறுதிப்போட்டியை வரலாற்று நிகழ்வாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளன ஐசிசி மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வுசெய்துள்ளது. போட்டியை காண அதிகமான ரசிகர்கள் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் குவிந்துள்ளனர். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

75,000 டிக்கெட்ஸ், கேட்டி இசை... உலக சாதனைப் படைக்குமா இந்தியா வெர்ஸஸ் ஆஸ்திரேலியா கிரிக்கெட்!
அடுத்த கட்டுரைக்கு