இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
வரும் ஜூன் 7 ஆம் தேதி தொடங்கி ஜூன் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன், இந்திய அணி மோத இருக்கிறது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 2வது இடம் பிடித்த இந்திய அணி இந்த முறை எப்படியாவது கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்க உள்ளது.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கும், அத்துடன் டாப் 9 இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கும் வழங்கப்படவுள்ள பரிசுத்தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெல்லும் அணிக்கு கோப்பையுடன் ரூ. 13 கோடியும், இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசாக வழங்கப்படவுள்ளது.
இதைத்தொடர்ந்து மூன்றாம் இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.3.6 கோடியும், நான்காவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.3. 6 கோடியும், ஐந்தாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.1.6 கோடி ரூபாயும் வழங்கப்படும். இதைத்தவிர்த்து ஆறிலிருந்து ஒன்பது வரையிலான இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு ரூ.82 லட்சம் வழங்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.