Published:Updated:

ICC: `பீல்டிங் செய்யும்போது ஹெல்மெட் கட்டாயம்' - ICC அறிமுகப்படுத்திய புதிய விதிகள் என்னென்ன?

இந்த விதிகள் ஜூன் 7 ஆம் தேதி துவங்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:

ICC: `பீல்டிங் செய்யும்போது ஹெல்மெட் கட்டாயம்' - ICC அறிமுகப்படுத்திய புதிய விதிகள் என்னென்ன?

இந்த விதிகள் ஜூன் 7 ஆம் தேதி துவங்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மூன்று புதிய விதிமுறைகளை கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. 

வீரர்களின் பாதுகாப்பிற்காகவும், போட்டிகள் விறுவிறுப்பாக  இருக்க வேண்டும் என்பதற்காகவும்தான், இந்த புதிய விதிமுறைகளை அறிமுக்கப்படுத்தியிருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த விதிகள் ஜூன் 7 ஆம் தேதி தொடங்க உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

cricket
cricket

ஐசிசி அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய விதிமுறைகள் இங்கே.

1.பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சாளர்களை சந்திக்கும் போது, விக்கெட்கீப்பர்கள் ஸ்டம்பிற்கு அருகில் நிற்கும் போது, மற்றும் பேட்ஸ்மேன்களுக்கு அருகில் பீல்டிங் செய்யும் போது ஆகிய தருணங்களில் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.  அதாவது, கொஞ்சம் ஆபத்தான வேலைகளை செய்யும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

2.களத்தில் உள்ள நடுவருக்கு முடிவுகளை எடுப்பதில் எதாவது குழப்பம் இருந்தால் மூன்றாம் நடுவரிடம் கலந்தாலோசித்த பிறகு மட்டுமே முடிவுகளை வழங்க வேண்டும். இதன்மூலம் களநடுவர் தன் விருப்பத்தை தெரிவிக்கும் சாஃப்ட் சிக்னல் முறை நீக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது.

3. இனி நோ-பால்களில் போல்டாகி அதில் எடுக்கப்படும் ரன்கள் எக்ஸ்ட்ராஸாக இல்லாமல் பேட்டர்கள் அடித்த ரன்களாக கருதப்படும்.

ஐசிசி அறிமுகப்படுத்தியிருக்கும் மூன்று விதிமுறைகளும் ஜூன் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 7 ஆம் தேதி நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.