Published:Updated:

`ஏமாற்றமடைந்தேன்... சுவரைக் குத்தினேன்!' - சக வீரர்களின் மேட்ச் ஃபிக்ஸிங்கால் கொதிக்கும் அக்தர்

இவர்களுக்கு எதிராகவே எப்போதும் விளையாடியதாக உணர்கிறேன். மேட்ச் ஃபிக்ஸர் யார் என்பது எப்படித் தெரியும்? ஆனாலும் மேட்ச் ஃபிக்ஸிங் இருக்கத்தான் செய்தது.

அக்தர்
அக்தர்

பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் அணி சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத அணி. பல முறை அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் ஊழல் மற்றும் சூதாட்டத்தில் சிக்கி தண்டனை அனுபவித்த கதையும் உண்டு. சமீபத்தில் வங்கதேசத்தின் நட்சத்திர வீரர் ஷகிப் அல் ஹசன் சூதாட்ட தரகர்கள் தன்னை அணுகியதை தெரிவிக்காததன் காரணமாக ஐசிசி விதிப்படி இரண்டாண்டு தண்டனை பெற்றுள்ளார்.

அக்தர் - முகமது ஆசிப்
அக்தர் - முகமது ஆசிப்

இது சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், பாகிஸ்தான் வீரர்கள் முகமது ஆமிர், சல்மான் பட், முகமது ஆசிப் உள்ளிட்ட மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட வீரர்கள் குறித்துப் பேசியுள்ளார்.

கேப்டன் கோலி, `ரிவர்ஸ் ஸ்விங்' ஷமி, `டைமிங்' ரோஹித்! - பிளஸ், மைனஸை ஷேர் செய்த ஷோயப் அக்தர்

``ஒருபோதும் பாகிஸ்தானை ஏமாற்றும் செயலை நினைத்துக்கூட பார்க்க மாட்டேன். மேட்ச் பிக்ஸிங் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நம்பிக்கையில்தான் அதுவரை இருந்தேன். ஆனாலும், என்னைச் சுற்றி மேட்ச் பிக்ஸர்கள் இருந்தனர். அவர்களால் எப்போதும் சூழப்பட்ட நிலையிலேயே இருந்தேன். எப்போதும் 21 பேருக்கு எதிராகவே விளையாடினேன். அவர்களில் 11 பேர் எதிரணி வீரர்கள். மற்ற 10 பேர் எனது சக வீரர்கள். இவர்களுக்கு எதிராகவே எப்போதும் விளையாடியதாக உணர்கிறேன். மேட்ச் பிக்ஸர் யார் என்பது எப்படித் தெரியும்? ஆனாலும், மேட்ச் ஃபிக்ஸிங் இருக்கத்தான் செய்தது.

முகமது ஆசிப்
முகமது ஆசிப்

எந்த போட்டிகளை நிர்ணயித்தார்கள், எப்படிச் செய்தார்கள் என்று முகமது ஆசிப் என்னிடம் கூறினார். ஆமீருக்கும் ஆசிப்புக்கும் என்னால் முடிந்தவற்றை புரிய வைக்க முயன்றேன். முடியவில்லை. மேட்ச் பிக்ஸிங் நடந்து அதைக் கேள்விபட்டபோது எனக்கு மிகவும் வேதனையும் கோபமும் ஏற்பட்டது. கடும் ஏமாற்றமடைந்து சுவரைக் குத்தினேன். திறமை இருந்து என்ன பயன். இரண்டு திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் வீணடிக்கப்பட்டனர். அவர்கள் தங்களை பணத்துக்காக விற்றுவிட்டார்கள்'' என விரக்தியுடன் கூறியுள்ளார்.

`இந்தியக் கிரிக்கெட்டின் மனநிலையை மாற்றியவர்; சிறந்த தலைவர்!' - கங்குலியைப் புகழும் அக்தர்