Published:Updated:

`தோனி இடத்துக்கு யாரும் இல்ல.. ஓரங்கட்ட இவ்வளவு அவசரம் தேவை இல்லை!’- முகமது கைஃப் ஓப்பன் டாக்

தோனி
தோனி

பந்தை அடிப்பது ஒரு ரகம் என்றால் பந்தை வெளுப்பது என்பது இன்னொரு ரகம். பாகிஸ்தானின் பந்துவீச்சு அட்டாக்கை துவம்சம் செய்தார். அந்தக்காலத்துல அப்படியொரு இன்னிங்ஸ் யாரும் ஆடி நான் பார்த்ததில்லை.

சச்சின்.. டிராவிட் குறித்து நாம் பேசினால் கோலி, ரோஹித், ரஹானே, புஜாரா ஆகியோர் ஓரளவுக்கு அந்த இடத்தை நிரப்பிவிட்டார்கள். நீங்கள் தோனியை ஓரங்கட்ட நினைக்கிறீர்கள். ஆனால், தோனியின் இடத்தை நிரப்புவதற்கு இங்கு யாரும் இல்லை. அவர் இன்னும் ஃபிட்டாகத்தான் இருக்கிறார்’ என இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் கூறியுள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இதைக் கூறியுள்ளார். தோனியின் ஆரம்பகால பேட்டிங்கிலிருந்து பல்வேறு விஷயங்களை கைஃப் பகிர்ந்துள்ளார்.

முகமது கைஃப்
முகமது கைஃப்

``தோனியை முதன்முதலாக தியோதர் கோப்பை தொடரின் போதுதான் பார்த்தேன். நான் அப்போது மத்திய மண்டல அணியின் கேப்டனாக இருந்தேன். அப்போது தோனி கிழக்கு மண்டல அணிக்காக விளையாடினார். தோனி சர்வதேச அரங்கில் விளையாடுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. தோனி மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கினார். தோனியை அட்டாக் செய்யலாம் என நாங்கள் நினைத்தோம். தோனியோ 40 லிருந்து 50 பந்துகளில் 80-க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து விட்டார். தோனியிடம் சிறப்பான திறமை இருப்பதை அப்போதே உணர்ந்தேன். ஆனால், இதற்கு முன்பே என் நண்பர் மூலமாக தோனி குறித்து அறிந்திருந்தேன். இந்திய ஏ அணிக்காக அவர் விளையாடியதை டிவியில் பார்த்தேன். அதன்பின்னர் தோனியுடன் விளையாடும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.

`நிறைய கிரிக்கெட் ஆடினால் தேர்வாளர் ஆகலாம்... கோச் அப்படியிருக்க வேண்டியதில்லை!’ - கவுதம் கம்பீர்

தோனியின் அறிமுகப் போட்டியில் ரன் அவுட்டானார். ஆனால் அப்போது யாருக்கும் அவரது மேட்ச் ஃபினிஷிங் திறமையும் மேட்ச் வின்னிங் திறமையும் யாருக்கும் தெரியாது. அவரது முதல் மூன்று இன்னிங்ஸ் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. விசாகப்பட்டினத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. நான் அந்த இன்னிங்ஸை ரொம்பவும் பக்கத்திலிருந்து பார்த்தேன். சர்வதேச அரங்கில் அறிமுகமான சில போட்டிகளில் அப்படியான இன்னிங்ஸ் ஆடுவது என்பது எளிதல்ல. பந்தை அடிப்பது ஒரு ரகம் என்றால் பந்தை வெளுப்பது என்பது இன்னொரு ரகம். பாகிஸ்தானின் பந்துவீச்சு அட்டாக்கை துவம்சம் செய்தார். அந்தக் காலத்துல அப்படியொரு இன்னிங்ஸ் யாரும் ஆடி நான் பார்த்ததில்லை. அவரை மூன்றாவது இடத்தில் ஆட வைத்ததும் ஒரு நல்ல மூவ் என்பேன்.

தோனி
தோனி

தோனி விளையாடி நீண்ட நாள்கள் ஆகிவிட்டது. அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடினால் மட்டுமே அணிக்குள் திரும்ப முடியும் எனச் சிலர் விரும்புகின்றனர். ஆனால், நான் அப்படி நினைக்கவில்லை. தோனி ஒரு பெரிய ப்ளேயர். தோனி ஒரு மேட்ச் வின்னர். கடுமையான நேரங்களில் 6 அல்லது 7-வது வீரராகக் களமிறங்கி அணிக்கு வெற்றியைத் தேடித்தரக்கூடிய ஆற்றல் உடையவர். என்னைப் பொறுத்தவரையில் தோனி தலைசிறந்த வீரர். நிறைய வீரர்கள் வருகிறார்கள். ஆனால் உங்களால் தோனியின் இடத்தை நிரப்ப முடியாது. நீங்கள் ஒருவரை நீக்கினால் அவரது இடத்தை நிரப்ப இன்னொருவர் தயாராக இருப்பார். ஆனால், தோனி விஷயத்தில் அப்படி இல்லை. உலகக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக ஜடேஜாவுடன் தோனி நல்ல ஃபார்ட்னர் ஷிப் ஏற்படுத்தினார். அந்தப்போட்டியில் நன்றாகவே விளையாடினார். ஏறக்குறைய வெற்றிக்கு மிகவும் நெருக்கமாகச் சென்றுவிட்டனர்.

தோனிக்கு மாற்று யாரும் இல்லை. தோனியின் இடத்துக்கு நிறைய வீரர்களை முயற்சி செய்கிறார்கள். கே.எல்.ராகுல் நீண்ட காலத்துக்கு அந்த இடத்தை நிரப்ப முடியாது. அவர் இப்போதைக்கு ஒரு பேக்அப் விக்கெட் கீப்பர்தான். கீப்பருக்கு அடிபட்டால் அவர்களுக்குப் பதிலாக கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்கிறார். ரிஷப் பன்ட், சஞ்சு சாம்சன் போன்றவர்களால் அந்த இடத்தை நிரப்ப முடியாது.

தோனி
தோனி

சச்சின்.. டிராவிட் குறித்து நாம் பேசினால் கோலி, ரோஹித், ரஹானே, புஜாரா ஆகியோர் ஓரளவுக்கு அந்த இடத்தை நிரப்பிவிட்டார்கள். ஆனால் தோனி விவகாரத்தில் அப்படி இல்லையே. அவர் இப்போதும் நம்பர் ஒன் விக்கெட் கீப்பராக இருக்கிறார். அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். அவரை விரைவில் ஓரங்கட்ட நினைக்கக்கூடாது’ எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு