Published:Updated:

`அன்று திடீரென 400 விக்கெட்டுகளும் பூஜ்ஜியமாகி விட்டன!' -வலி மிகுந்த நினைவுகளைப் பகிரும் ஹர்பஜன்

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

நான் ஏன் இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்பட்டேன் என எனக்கு தெரியாது. யாரும் காரணம் கூறவில்லை என வேதனை தெரிவிக்கிறார் ஹர்பஜன் சிங்.

இந்திய அணியிலிருந்து எவ்வித அறிவிப்பும் இல்லாமல் கழற்றிவிடப்பட்டது தனக்கு மிகுந்த காயத்தை ஏற்படுத்தியதாகச் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாடி வரும் ஹர்பஜன் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

``நான் என்னுடைய கடந்த காலங்களை திரும்பிப்பார்க்கையில் கடவுளுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக உணர்கிறேன். நான் வந்த பின்னணியை நினைத்துப் பார்க்கும்போது நான் இவ்வளவு தூரம் கடந்து வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக நான் ஒன்றும் சிறந்தவன் எனப் பொருளில்லை. ஒரு பந்துவீச்சாளராக நான் தவறுகளைச் செய்துள்ளேன். ஃபீல்டிங்கில் சில தவறுகளைச் செய்துள்ளேன். நீங்கள் விளையாடும் போது இதை உணரவில்லை என்றால் வெளியில் உட்காரும்போது இதை உணர்ந்துகொள்வீர்கள். நான் ஒரு சிறந்த பந்துவீச்சாளராக, பேட்ஸ்மேனாக இருந்திருக்கலாம். கிரிக்கெட் உங்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுத்தரும்.

2012-ம் ஆண்டு திடீரென வெளியில் உட்காரவைக்கும் போது உண்மையில் எனக்குக் கடினமாக இருந்தது. நான் அப்போது நன்றாகத்தான் விளையாடிக்கொண்டிருந்தேன். 2012-ல் ஒரு டெஸ்ட், 2013 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தேன். இந்த 5 வருஷத்துல 3 டெஸ்ட் ஆடியிருந்தேன். அது உண்மையில் என்னைக் காயப்படுத்தியது.

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

400 விக்கெட் எடுத்திருந்தும் நான் உட்காரவைக்கப்பட்டேன். ஏன் என்று தெரியவில்லை. தகுதியின் அடிப்படையில்தான் அணியில் விளையாடினேன். 400 விக்கெட்டுகள் என் பெயரில் இருக்கிறது. ஆனால் அது திடீரென ஒன்றுமேயில்லாமல் பெரிய பூஜ்ஜியமாகி விட்டன.

நான் தகுதியின் அடிப்படையில்தான் ஆடினேன். என்னைப் புறக்கணித்தபோது என்னை விட 100 விக்கெட்டுகள் குறைவாக எடுத்திருந்த பவுலர்கள் இப்போது என்னைக் கடந்து சென்று விட்டனர். 417 டெஸ்ட் விக்கெட்டுகளில் தேங்கி விட்டேன். பலரும் என்னைக் கடந்து சென்று விட்டனர். எனக்கு வாய்ப்பு வழங்கியிருந்தால் இன்னும் 100 விக்கெட்டுகளை எடுத்திருப்பேன்.

ஹர்பஜன் சிங்
ஹர்பஜன் சிங்

ஒரு கேப்டன் நினைத்தால் ஒரு வீரரின் கேரியரை உயரக்கொண்டு செல முடியும். ஒரு வீரர் முதலில் கேப்டனின் நம்பிக்கையைப் பெற வேண்டும். கேப்டனுக்காக நீங்கள் எதாவது செய்தால் அவர் உங்களை ஆதரிப்பார். நீங்கள் போட்டியை வெற்றிபெற்றுத் தர வேண்டும். அது ஒரு சிறந்த உறவு. எனக்கு அனில் கும்ப்ளேவும் கங்குலியும் கிடைத்ததை பாக்கியமாகக் கருதுகிறேன். கங்குலி பந்துவீச்சாளர்களின் கேட்பன். அவரிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். பந்துவீச்சாளர்களிடம் சிறந்ததை எப்படி வெளிக்கொண்டு வரவேண்டும் என கங்குலிக்கு தெரியும். முக்கியமாக ஸ்பின்னர்களிடமிருந்து சிறந்ததைக் கொண்டுவர அவருக்கு தெரியும்“ எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு