Published:Updated:

`நம்பர் 4’ நான் பார்த்துக்குறேன்! - ஆஸ்திரேலியா தொடருக்கு கோலியின் புது பிளான்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் நம்பர் 4 இடத்தில் கோலி விளையாடவுள்ளார்.

`நம்பர் 4’ - இந்திய அணிக்கும் இந்த நம்பருக்கும் ஏழாம்பொருத்தம். கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய மீடியாக்களில் இந்த `நம்பர் 4’ மேட்டர்தான் பெரிய விவாதமாக இருந்தது. இந்த ஒரு இடத்துக்கு ரெண்டு வருஷமா வலைபோட்டு வீரர்களைத் தேடியது பிசிசிஐ. வீரர்களின் பட்டியலை சீனியர் டு ஜூனியர் வரை ஒரு பெரிய லிஸ்டே போடலாம். ஒருவழியாக உலகக்கோப்பை போட்டியில் `நம்பர் 4’ இடத்துக்கு விஜய் சங்கர் பெயர் டிக் செய்யப்பட்டது.

இந்திய அணி
இந்திய அணி

விஜய் சங்கருக்குக் காயம் ஏற்பட ரிஷப் பன்ட் என்ட்ரி கொடுத்தார். நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் டாப் ஆர்டர் மளமளவென சரிந்ததால் 25 ரன்களில் தோற்று உலகக்கோப்பையை விட்டு வெளியேறியது வேறு கதை. இப்படி `நம்பர் 4’ விவகாரம் கடந்தாண்டு டார்ச்சர் செய்ய 2020-ல் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களுக்குப் போட்டி அதிகரித்ததால், `நம்பர் 4-க்கு நானே போறேன்' என்று புறப்பட்டுவிட்டார் கேப்டன் கோலி.

‘அந்த 2 இன்ச் இடைவெளி.. தினமும் எனக்குள் எழும் கேள்வி!’- ரன் அவுட் குறித்து மனம் திறந்த தோனி

உலகக்கோப்பையில் காயம் காரணமாக தவான் வெளியேறினார். தவானின் இடத்தை நிரப்புவதற்கு கே.எல்.ராகுல் களமிறக்கப்பட்டார். காயம் காரணமாக தொடர் சிகிச்சையில் தவான் இருந்ததால்தான் ரோஹித் ஷர்மாவுடன், கே.எல்.ராகுல் ஓப்பனிங் செய்தார். முதலில் தடுமாறிய ராகுல், அதன்பின்னர் ஃபார்முக்குத் திரும்பிவிட்டார். தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட ராகுல், அந்த இடத்துக்குக் கச்சிதமாகப் பொருந்திவிட்டார். காயத்திலிருந்து மீண்ட தவான் மீண்டும் அணிக்குள் வந்தார். இந்நிலையில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக யாரைக் களமிறக்குவார்கள் என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்தது.

கோலி, ரோஹித் ஷர்மா
கோலி, ரோஹித் ஷர்மா

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை மும்பையில் நடைபெறவுள்ளது. ரோஹித்துடன் நாளை யார் ஓப்பனிங் இறங்குவார்கள் என்ற கேள்விக்கு கோலி விடையளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`டெஸ்ட் 143... அதுதான் ரொமான்ஸ்!’ - சேவாக் சொல்லும் லாஜிக்

இதுகுறித்துப் பேசியுள்ள கோலி, ``வீரர்கள் ஃபார்மில் இருப்பது அணிக்கு ஆரோக்கியமானதுதான். சிறந்த வீரர்கள் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அணிக்குத் தேவையான காம்பினேஷனைக் கொடுக்க வேண்டும். இந்திய அணியில் ரோஹித், தவான், கே.எல்.ராகுல் மூன்று பேரும் விளையாட வாய்ப்புள்ளது. ஆடுகளத்துக்குச் செல்லும்போது எப்படிப்பட்ட பேலன்ஸ் அணியாகச் செல்லவுள்ளோம் என்பதைக் காண ஆர்வமாக இருக்கும்.

கோலி
கோலி

இந்த இடத்தில்தான் விளையாட வேண்டும் என்ற பொசசிவ்னஸ் எல்லாம் எனக்கு இல்லை. 4-வது இடத்தில் களமிறங்க வாய்ப்புள்ளது. அந்த இடத்தில் விளையாட ஆர்வமாக இருக்கிறேன். ஒரு கேப்டனாக எனக்கு நிறைய பொறுப்பு இருக்கிறது. இப்போது இருக்கும் அணியை மட்டும் கவனிப்பது என்னுடைய வேலை இல்லை. நான் இந்தப் பொறுப்பிலிருந்து விலகும்போது எனக்குப் பின்னால் வருபவர்களுக்கு ஒரு நல்ல அணியை வழங்க வேண்டும்“ எனப் பேசியுள்ளார்.

விராட் கோலி இந்திய அணியில் 3-வது இடத்தில் விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியா தொடரில் ரோஹித் - தவான் ஓப்பன் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கே.எல்.ராகுல் அதையடுத்து களமிறக்கப்படுவார் எனத் தெரிகிறது. தவான், ரோஹித், கோலி மூவரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர்கள்தான். கோலியின் இந்த பிளான் எப்படி இருக்கிறது எனப் பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு