மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஆட்டத்தின் 13, 15, 18, 20-வது ஓவர்களை வீசி வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார் மதீஷா பதிரனா. இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். இலங்கை கிரிக்கெட்டுக்கு பெரிய சொத்தாக அவர் இருக்கப்போகிறார் என சிஎஸ்கே கேப்டன் தோனியும் அவரைப் பாராட்டியிருந்தார்.

ஆட்டநாயகன் விருதை பெற்றுக்கொண்ட பதிரனா பேசியது, "மாற்றுவீரராக அணிக்குள் வந்தேன். இரண்டே போட்டிகளில்தான் ஆடினேன். இந்த சீசனில் அதிக போட்டிகள் கிடைப்பது மகிழ்ச்சி. இந்த அணி நிர்வாகம் என்னுள் பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் இதுதான் என் சிறந்த பந்துவீச்சு. அணியின் வெற்றிக்கு என்னால் பங்களிக்க முடிந்ததில் பெரும் மகிழ்ச்சி." என்றவரிடம் அவரது ஸ்பெஷல் செலிரேஷன் பற்றியும் கேட்கப்பட்டது.

"கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகர் நான். அவர் கொண்டாட்டங்கள்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்!" எனக் கூலாக பதில் சொன்னார் பதிரனா.