Published:Updated:

`எனக்கு நானே...!’- பஸ்ஸைத் தவறவிட்டு 3 கி.மீ தூரம் சாலையில் ஓடிய ஸ்டீவ் ஸ்மித்

ஸ்மித்
ஸ்மித்

ஆஸ்திரேலியா வீரர் ஸ்மித் மைதானத்திலிருந்து ஹோட்டல் அறைக்கு ஓடியே சென்றுள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்திடம் டெக்னிக் இல்லை, ஸ்டைல் இல்லை ஆனாலும் மிரட்டுகிறார் என சில நாள்களுக்கு முன்பு அக்தர் பேசியிருந்தார். பால் டேம்பரிங் புகாரில் சிக்கிய ஸ்மித் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடைக்காலம் முடிந்து ஸ்மித் உலகக்கோப்பை தொடரில் களமிறங்கினார். சதங்கள், மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடினாலும் சம்திங் மிஸ்ஸிங் என்றே இருந்தது. அதன்பின் நடந்த ஆஷஸ் தொடரில் பழைய ஸ்மித்தாகக் களமிறங்கினார். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரு பக்கம் விக்கெட்டைப் பறிகொடுக்க ஸ்மித் மட்டும் தனியாளாகப் போராடினார். டெஸ்ட் கிரிக்கெட் ஸ்மித் கில்லி என்பதை நிரூபித்தார். அந்த கம்பேக் இன்னிங்ஸைப் பாராட்டாதவர்களே கிடையாது.

ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித்

உலகக்கோப்பை தொடரின் போது ஸ்மித்தை வறுத்தெடுத்த இங்கிலாந்து ரசிகர்களே ஸ்டேண்டிங் ஓவியேஷன் கொடுத்தனர். ஆஷஸ் டெஸ்டில் ரன்வேட்டை நடத்தினர். டெஸ்ட் கிரிக்கெட் அரங்கைப் பொறுத்தவரையில் இப்போதைக்கு ஸ்மித் - விராட் கோலி இடையேதான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. நம்பர்களும் அதைத்தான் கூறுகின்றன. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் கோலி முதலிடத்தில் இருந்தார். ஆஷஸ் தொடரில் அட்டகாசமான கம்பேக் கொடுத்த ஸ்மித் விறுவிறுவென முதலிடத்துக்கு வந்தார். தென்னாப்பிரிக்கா தொடரில் கோலி சொதப்பியதும் இதற்கு ஒரு காரணம்.

 `டெக்னிக், ஸ்டைல் இல்லை; ஆனாலும் மிரட்டுகிறார்! - ஸ்மித்தைப் புகழும் அக்தர்

இந்த நிலையில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. இதில் ஆஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்மித், யாசிர் ஷா பந்தில் 4 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார். ஸ்மித்தின் விக்கெட்டைக்கொண்டாடிய யாசிர் ஷா 7 விரல்களைக் காட்டி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஸ்மித்தின் விக்கெட்டை 7 முறை வீழ்த்தியிருக்கேன் என்பதை தெரியப்படுத்தும் வகையில் இவ்வாறு செய்தார். யாசிர் ஷா ஸ்மித்தை 6 டெஸ்ட் போட்டிகளில் 7 முறை வீழ்த்தியுள்ளார்.

யாசிர் ஷா
யாசிர் ஷா

இந்த டெஸ்ட் போட்டி முடிந்ததும் வீரர்கள் அனைவரும் மைதானத்திலிருந்து ஹோட்டல் செல்ல பேருந்தில் அழைத்துச்செல்லப்பட்டனர். பேருந்தை தவறவிட்ட ஸ்மித் மைதானத்திலிருந்து ஹோட்டல் அறைக்கு ஓடியே சென்றுள்ளார். சுமார் 3 கிலோமீட்டர் ஓடிச் சென்றனர்.

`பாண்டிங் சாதனை சமன்; கேப்டனாக 5000 ரன்கள்'- ஈடன் கார்டனில் கோலி ரன் வேட்டை!

இதுகுறித்து பேசிய ஸ்மித், ``இந்த விக்கெட் அடுத்த போட்டியில் யாஷிர் ஷா பந்துவீச்சில் ஆட்டமிழக்கக் கூடாது என்ற உத்வேகத்தைக் கொடுத்துள்ளது. இரண்டாவது இன்னிங்ஸ்களில் தேவையில்லாத ஷாட் மூலம் அவரது பந்துவீச்சில் அவுட்டாகியுள்ளேன். ஆனால், அதுபற்றி நான் பெரியளவில் கவலைப்படவில்லை. இனி அவருக்கு எதிராகக் கொஞ்சம் கூடுதல் கவனமாக விளையாடுவேன்” என்றார்.

ஸ்டீவ் ஸ்மித்
ஸ்டீவ் ஸ்மித்

மேலும் பேசியவர், ``நான் போட்டிகளில் ரன்களைக் குவிக்கவில்லை என்றால் என்னை நானே தண்டித்துக்கொள்வேன். நான் ரன்களைக் குவித்தால் எனக்கு நானே வெகுமதி அளித்துக்கொள்வேன். நூறு ரன்கள் கிடைத்தால் ஒரு பெரிய சாக்லேட்டை வெகுமதியாக எடுத்துக்கொள்வேன். நான் ரன் எடுக்கவில்லை என்றால் ஓடுவேன் அல்லது உடற்பயிற்சி கூடத்துக்குச் சென்று கடுமையாகப் பயிற்சி செய்வேன் அல்லது எனக்கு தண்டனை கொடுக்கும் விதமாக எதாவது செய்வேன்” எனக் கூறினார்.

அடுத்த கட்டுரைக்கு