Published:Updated:

மேட்ச்சை மாற்றிய அந்த மூன்று ஓவர்கள்... ஸ்டோக்ஸிடம் வீழ்ந்த வெஸ்ட் இண்டீஸ்! #ENGvsWI #RaiseTheBat

ஸ்டோக்ஸ்
ஸ்டோக்ஸ் ( twitter.com/ICC )

மீண்டும் ஒரு 'பிளாக்‌வாஷ்' என எல்லோரும் எதிர்பார்க்க இரண்டாவது டெஸ்ட்டில் மீண்டுவந்திருக்கிறது இங்கிலாந்து. #ENGvsWI

சவ்தாம்ப்டன் தோல்விக்கு மான்செஸ்டரில் பதிலடி கொடுத்திருக்கிறது இங்கிலாந்து. #BlacklivesMatter பிரச்னை உச்சத்தில் இருந்தபோது தொடங்கியது இங்கிலாந்துக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் தொடர். முதல் போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் இங்கிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ். மீண்டும் ஒரு 'பிளாக்‌வாஷ்' என எல்லோரும் எதிர்பார்க்க இரண்டாவது டெஸ்ட்டில் மீண்டுவந்திருக்கிறது இங்கிலாந்து.

ஹோல்டரின் கணிப்பு!

முதல் போட்டியை போன்றே மான்செஸ்டர் பிட்சும் வேகப்பந்து வீச்சுக்கு உதவும் என்ற எண்ணத்தில் ஹோல்டர் டாஸ் வென்று பௌலிங்கை தேர்வு செய்தார். முதல் போட்டியில் ஸ்டோக்ஸ் டாஸில் செய்த தவறை போன்றே இங்கே ஹோல்டரின் டாஸ் முடிவும் விண்டீஸ்களுக்குப் பின்னடைவாக அமைந்துவிட்டது. முதல் நாள் பிட்ச் வேகப்பந்துவீச்சுக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. ஸ்பின்னரான ராஸ்டன் சேஸ் வந்துதான் விண்டீஸ்களுக்கு முதல் விக்கெட்டை எடுத்து தர வேண்டியிருந்தது.

Jason Holder,  Joe Root
Jason Holder, Joe Root
Windies Cricket

ஸ்டோக்ஸ்-சிப்லே பார்ட்னர்ஷிப் வெஸ்ட் இண்டீஸின் பொறுமையை வெகுவாக சோதித்தது. இருவரும் எந்தவித அவசரமும் இல்லாமல் பொறுமையாக நிலைத்து நின்று ஸ்கோரை ஏற்றினர். நீண்ட நாள்கள் கழித்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு இப்படி ஒரு டெஸ்ட் பார்ட்னர்ஷிப்பை பார்க்க முடிந்தது நல்ல என்டர்டெயின்மென்ட்டாக இருந்தது. இந்த பார்ட்னர்ஷிப்புக்குப் பிறகு பட்லர் வழக்கம்போல மீண்டும் சொதப்ப, இங்கிலாந்து 469 ரன்னில் டிக்ளேர் செய்தது. கடந்த 21 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்து சொதப்பல் ஃபார்மில் இருப்பதால் இனி அணிக்குள் பட்லரின் இடம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

ஸ்டோக்ஸின் அதிரடி

இரண்டாவது நாளின் கடைசி செஷனில்தான் விண்டீஸ்க்கு பேட்டிங் கிடைத்தது. மூன்றாவது நாள் முழுவதும் மழையால் தடைபட்டுவிட்டதால் இந்த போட்டி எப்படியும் டிராவை நோக்கித்தான் நகரும் என கணிக்கப்பட்டது. அதற்கேற்றவாறே நான்காவது நாளின் முதல் இரண்டு செஷன்களிலுமே விண்டீஸ்கள் விட்டுக்கொடுக்காமல் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தனர். ப்ராத்வெயிட்-ப்ரூக்ஸ் பார்ட்னர்ஷிப்பில் இருவரும் அரைசதத்தை கடந்து நல்ல செட்டில் ஆகியிருந்த நேரத்தில்தான் கடைசி செஷன் தொடங்கியது.

#ENGvsWI
#ENGvsWI
twitter.com/ICC

கடைசி செஷனில் புதுப் பந்தை இங்கிலாந்து பௌலர்கள் கையில் எடுத்தப் பிறகுதான் ஆட்டம் முழுவதுமாக இங்கிலாந்து பக்கம் திரும்பத் தொடங்கியது. ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து ஷார்ட் பாலாக போட்டுத்தள்ளி பிராத்வெயிட்டை - ஸ்டோக்ஸ் காலி செய்து விண்டீஸ்களின் வீழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நியு பால் வித்தகரான ஸ்டூவர்ட் பிராட் தனது அடுத்தடுத்த மூன்று ஓவர்களில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை காலி செய்தார். புரூக்ஸ், சேஸ், பிளாக்வுட் என இவர் எடுத்த மூன்று விக்கெட்டுகள்தான் மேட்ச்சையே மாற்றியது. ஆரம்பத்திலிருந்தே ஸ்டம்ப் லைனில் மட்டுமே தொடர்ந்து பந்துவீசினார் பிராட். ஒரு கட்டத்தில் பிராத்வெயிட், பிராடின் பந்துவீச்சில் மூன்று பவுண்டரிகளை அடிப்பார். இருந்தும் லைன் & லென்த்தை மாற்றாமல் தொடர்ந்து அதே ஸ்டம்ப் லைனில் வீசி மூன்று விக்கெட்டுகளையுமே எடுத்தார்.

287-க்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட் ஆக 182 ரன் லீடிங்கோடு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது இங்கிலாந்து. சீக்கிரம் எக்ஸ்ட்ரா ஒரு 100 ரன்களை அடித்துவிட்டு விண்டீஸ்களை ஆல் அவுட் ஆக்கி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்டோக்ஸும் பட்லரும் ஓப்பனிங் இறங்கினர். வழக்கம்போல பட்லர் சொதப்பல். ஸ்டோக்ஸ் அணிக்கு தேவைப்பட்ட நேரத்தில் மீண்டுமொரு அசாத்தியமான அரைசதம் அடிக்க விண்டீஸ்களுக்கு 312 ரன்களை டார்கெட்டாக கொடுத்தது இங்கிலாந்து.

பிராட் பவர்!

இங்கிலாந்தின் ஆக்ரோஷமான பெளலிங் முன்பு விண்டீஸின் டிஃபென்ஸ் நொறுங்கிப்போனது. ஒரு கட்டத்தில் புரூக்ஸும்-பிளாக்வுட்டும் பார்ட்னர்ஷிப் போட்டு இருவரும் அரைசதம் அடிக்க வெற்றிகிடைக்கலாம் என்கிற நம்பிக்கை வெஸ்ட் இண்டீஸ் ரசிகர்களுக்கு எழுந்தது. அணிக்கு ஒரு தேவையெனும்போது எதையாவது செய்துவிடும் ஸ்டோக்ஸ் மீண்டும் ரவுண்ட் தி விக்கெட் ஷார்ட் பால் ட்ரிக்கில் பிளாக்வுட்டை வெளியேற்ற அதன்பின்பு சம்பிரதாயமாக இரண்டாவது இன்னிங்ஸை இழுத்துச் சென்று தோல்வியடைந்தது வெஸ்ட் இண்டீஸ்.

Stuart Broad
Stuart Broad
England Cricket

இரண்டு இன்னிங்ஸ்களிலும் தெளிவான பிளானோடு தங்களுக்கான ரோலை உணர்ந்து இங்கிலாந்து பௌலர்கள் சரியாக செயல்பட்டதால் இங்கிலாந்து வெற்றிபெற முடிந்தது. குறிப்பாக ஸ்டோக்ஸ் முதல் இன்னிங்ஸில் 356 பந்துகளில் 176 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 57 பந்துகளில் 78 மற்றும் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்ததுதான் வெற்றிக்கான முதல் காரணம். அணிக்கு என்ன தேவையோ அதை உணர்ந்து ஆடி, தான் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் ஸ்டோக்ஸ். அதிலும் விண்டீஸ்களின் செகண்ட் இன்னிங்ஸின் போது பௌலிங் செய்த ஸ்டோக்ஸ் ரன் அப்பை முடிப்பதற்குள் பவுண்டரிக்கு சென்ற பந்தை துரத்தி தடுக்க முயற்சித்ததெல்லாம் வேற லெவல் கமிட்மெண்ட். முதல் போட்டியில் இடம் கிடைக்காததால் ஏமாற்றத்தில் இருந்த பிராடும் இந்த போட்டியில் 6 விக்கெட்டுகளை எடுத்து இன்னும் நான் நல்ல ஃபார்மில்தான் இருக்கிறேன் என்பதை அணிக்கு நிரூபித்துவிட்டார்.

சென்சுரி போடுங்க வெஸ்ட் இண்டியன்ஸ்!

#ENGvsWI
#ENGvsWI
twitter.com/ICC
மைக்கேல் பெவன்... இந்த ஆங்கர்தான் அம்மாம்பெரிய ஆஸ்திரேலியாவையே தாங்குச்சு! அண்டர் ஆர்ம்ஸ் - 7

வெஸ்ட் இண்டீஸை பொறுத்தவரையில் ஷாய் ஹோப் தொடர்ந்து சொதப்புவது மிகப்பெரும் பின்னடைவு. அதேபோல சேஸ், புரூக்ஸ், பிளாக்வுட், பிராத்வெயிட் போன்றோர் அரைசதத்தை தாண்டி பெரிய இன்னிங்ஸ் ஆட முடியாமல் திணறியது இந்த ஆட்டத்தில் தோல்வியடைய முக்கியக் காரணம் என வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் சிம்மன்ஸ் கூறியிருக்கிறார்.

1-1 என தொடர் சமநிலையில் இருப்பதால் வெற்றியை தீர்மானிக்கப்போகும் இறுதிப்போட்டி உண்மையிலே த்ரில்லாக இருக்கப்போகிறது. நான்கு மாதமாக வறண்டு போயிருந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த சீரிஸ் செம ட்ரீட்தான். மூன்றாவது டெஸ்ட் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.

அடுத்த கட்டுரைக்கு